சீப்ரா
பேங்கிங் த்ரில்லர் படம் . ஹீரோ சத்தியதேவுக்கு சமமாக ஒரு கேரக்டர். வில்லன் என்று சொல்வதா அல்லது குணச்சித்திர பாத்திரம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. தனஞ்சயனுக்கு அப்படி ஒரு மாஸ் பில்டப். ஹீரோவை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு கெத்தான ரோல் கூடவே நம் கட்டப்பாவும் முக்கிய கேரக்டரில். குசும்பான ரவுடியாக சுனில். டெம்ப்லேட் பேங்க் மேனஜராக சுரேஷ் மேனன், ப்ரியா பவனி சங்கர் என பட்டாளம் ஜாஸ்தி. காமெடிக்கு சத்யா. மது வடலரா படத்தில் கலக்கியிருப்பாரே, அவர் தான். என்னது இன்னும் மது வடலரா பார்க்கவில்லையா? இன்றே பார்த்து விடுங்கள். ரவுடிகள் இருப்பதால் ரத்தம் தெறிக்கிறது. ஒரு கிளப் டேன்ஸ் பாடல் போனஸ். பேங்க் த்ரில்லர் ஜானரில், இரண்டு பேர் ஆடும் இந்த சதுரங்க ஆட்டம், ஒரு பெஸ்ட் வீக்கெண்ட் வாட்ச் மூவி. ஆஹா
OTT தளம்.
போகன்வில்லா
குஞ்சுக்கா போபன் மற்றும் பஹத் கூட்டணியில் சேட்டன் கரையிலிருந்து மற்றுமொரு மிஸ்டரி த்ரில்லர் மூவி. குஞ்சுக்க போபனின் மனைவியாக ஜோதிர்மயி. அம்னீசியா பேஷண்ட். ஒரு அமைச்சரின் மகள் காணாமல் போகும் சம்பவத்துக்கும் போபனின் மனைவி ரீத்துவுக்கும் சம்பந்தம் இருப்பதாக போலீஸ் நம்புகிறது. தேனீ மாவட்ட டி.எஸ்.பியாக பஹத். ரீத்துவிடம் விசாரணையைத் தொடங்கும் இடத்தில் இருந்து அதிகரிக்கும் முடிச்சுகள் ஒரு மர்மமான பரபரக்கும் கதையாக திரையில் விரிகிறது. குற்றவாளி யார் என்பதை இரண்டாம் பாதி தொடக்கத்தில் கூறிவிட்டாலும் ரீத்துவின் மர்மம் இறுதியில் தான் அவிழ்கிறது, போகன்வில்லா பெயின்டிங், வீடு, குளியலறை, பார்ம் ஹவுஸ் ஆகியவையம் கதாபாத்திரமாக மிளிர்கின்றன. சோனி தளத்தில்.
சொர்க்கவாசல்
1999ல் நடந்த மெட்ராஸ் மத்திய சிறை கலவரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது சொர்க்கவாசல். என்ன நடந்தது என்பதை விவரித்திருந்தால் டாக்குமென்டரியாக மாறியிருக்கும். ஆனால் அதை ஒரு பரபரப்பான த்ரில்லர் கதையாக மாற்றிய விதத்தில் அறிமுக இயக்குனர் சித்தார்த் நம்மை சிறை பிடிக்கிறார். ரஞ்சித் பட்டறை. காத்திரமான கதாபாத்திரத்தில் கருணாஸ், ரவுடி சிகாவாக செல்வராகவன், ஜெயில் குக்கராக பாலாஜி சக்திவேல், விசாரணை அதிகாரியாக நட்டி, சானியா ஐயப்பன் என நடிகர் பட்டாளம். சந்தர்ப்பவசத்தால் கொலையாளியாக பட்டம் சுமத்தப்பட்டிருக்கும் சாமானியனின் வாழ்வில் விளையாடும் எஸ்.பி, வார்டன், சிகா, எம்.எல்.ஏ என அரசியல் சூழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் பரபரப்பாக கதை நகர்கிறது. பல இடங்களில் ஜெயில் தத்துவங்கள், சுரீர் என உரைக்கினறன. பார்த்திபனாக ஆர்.ஜெ பாலாஜி ஒரு முழு நடிகனாக உருமாறியிருக்கிறார். சொர்க்கவாசல் அவரது கேரியரில் மைல்கல். பல உணர்வுகள் பிரதிபலித்து டிஸ்டின்க்ஷன் ஸ்கோர் செய்கிறார். வெளிவரமுடியாமல் இயலாமையில் அவர் கதறும் காட்சி ஒரு சோறு பதம். கருணாஸ் சொல்வது போல் நரகத்தில் ஹீரோவாக நாம் இருப்பதை விரும்பாமல் தான் சொர்க்கத்தில் மண்டியிட்டுக்கொண்டிருக்கிறோம் என எண்ணத்தோணுகிறது. நெட்பிலிக்ஸ் தளத்தில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக