புதன், ஜூன் 18, 2025

‘வதை’ சிறுகதை

வைத்தியநாதர் அவர்களால் பிப்ரவரி 1926 இல் தொடந்தகபட்ட ஆனந்த விகடன் அடுத்த மாதம் நூறாவது ஆண்டை எட்டுகிறது. தொடங்கிய அடுத்த ஆண்டு பதிப்பிக்க நிதி பற்றாக்குறையால் துவண்ட பொழுது, 1927 இல் பத்ம பூஷண் எஸ்.எஸ்.வாசன் அவர்களால் 200 ரூபாய்க்கு (ஒரு எழுத்துக்கு 25 ரூபாய், 8x25=100) வாங்கபட்டு, புத்துயிரூட்டி புது வடிவத்துடன் இன்றளவும் நம்பர் ஒன் வார இதழாக வலம் வந்து கொண்டிருக்க்கிறது.

கல்கி, சுஜாதா என்று ஆகப் பெரும் ஆளுமைகள் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார்கள். இன்றைய தேதியில் தோராயமாக ஐந்து லட்சம் பிரதிகள் (print) விற்பனையாகின்றன. ஆன்லைனிலும் சேர்த்து 34 லட்சம் வாசகர்கள் வாசிக்கிறார்கள்.





இன்று அந்த ஐந்து லட்சம் வாசகர்கள் கையில், நான் எழுதிய ‘வதை’ சிறுகதை (1356 வார்த்தைகள்) தவழும் என்று நினைப்பே மிகப்பெரும் உவகையளிக்கிறது. கோபாலகிரிஷணனுக்கு காத்திருக்கும் மயில் போல கதை எழுதி அனுப்பி விட்டு வாராவாரம் காத்திருந்தேன். ‘அந்த நாளும் வந்திடாதோ’ என்பது போல் இன்று அந்த நாள் வந்துவிட்டது.
மிதக்கும் கொள்கையை ஆர்ச்சிமிடீஸ் கண்டுபிடித்தபொழுது ‘யுரேக்கா’ என்று கத்திகொண்டு ஓடியதை போல் ஓட வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ் நாள் முழுவதுக்கும் நான் பொத்தி வைத்து பாதுக்கக்கவேண்டிய பொக்கிஷ இதழ்.
தேர்வுக்குழுவிற்கு நன்றியும் அன்பும். ஓவியம் வரைந்து உயிரோட்டமாகிக்கிய பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. நண்பர்கள் படித்து பார்த்து கருத்துரையுங்கள்.
வீடு பேரு அடைந்துவிட்டது போன்றதொரு மட்டற்ற மகிழ்ச்சி.

கருத்துகள் இல்லை: