செவ்வாய், செப்டம்பர் 24, 2024

இலக்கற்ற விளையாட்டு


இப்போல்லாம் எத எடுத்தாலும் டார்கெட்ஸ். அட ஆபிஸ்ல தான் டார்கெட் வச்சி கொல்றாங்கன்னு பாத்தா எங்க பாத்தாலும் டார்கெட் தான். அதுவும் இந்த ஸ்கூலுக்கு போற பசங்க ரொம்ப பாவம். இவ்ளோ ப்ரெஸ்ஸர எப்படித்தான் தாங்குதுங்களோ. ஏகப்பட்ட எக்ஸாம்ஸ். படிச்சி படிச்சி அக்கடான்னு வேலைல போய் உக்காரலாம்னு பாத்தா அங்கேயும் டார்கெட்ஸ் வந்துரும். ஓட ஓட தூரம் குறையல மாதிரி தான். ஒய்வு என்பது கல்லறைல தான் போல.
ஒவ்வொரு நாளும் தூங்குற நேர போக மீதி இருக்குற நேரத்துல முழுக்க ஏதாவது பிள்ளைங்க பண்ணிட்டே இருக்குதுங்க. ஸ்கூல் ஹோம் ஒர்க் பண்ணுதுங்க. இல்லன்னா ஸ்கில் டெவெலப்மண்ட் அப்டினு எதாவது ஒரு கோச்சிங்கில சேத்து விட்டுடுறாங்க. பிடிச்சி பண்ணா கூட பரவால்ல. peer பிரஷர்ல சேந்துட்டு முழிக்குதுங்க. அங்கேயும் டார்கெட்ஸ், காம்பெடிஷன், கம்பெரிஷன். அப்புறம் என்ன மனச்சோர்வு, டிப்ரெஷன் தான்.



இந்தத் தெருல போய் விளையாண்ட கதையே இப்போ இல்ல போல. இதுதான் விளையாடணும்னு எந்த ஒரு முன்முடிவும் இல்லாம அப்டியே வெளில போறது. அன்னனைக்கு அப்பப்போ குழந்தைங்க மனசுல தோணுற விளையாட்டை, அத விளையாட்டுனு கூட சொல்ல முடியாது, ஜாலியா கூட்டத்தோட டைம் ஸ்பென்ட் பண்ணனும். அதுக்கு ஏதோ ஒன்னு கண்டுபிடிச்சி விளையாடுங்க. கண்ணா மூச்சி, ஓடி பிடிச்சி, நாடு பிரிச்சி, எறிபந்து, மெழுகு பொம்மை, மாங்காய் பறிக்கிறது, தாத்தாப் பூ இப்படி இன்னும் ஏதாவது. எதுலையுமே ஒரு aim கிடையாது. போறபோக்குல விளையாண்டுட்டு வந்துருங்க. பாத்தீங்கன்னா கோச்சிங் போய் விளையாண்டுட்டு வர பசங்களோட இதுங்க மூஞ்சில அப்டி ஒரு குஷி, ரிலீப்.
எங்க போச்சு இந்த மாதிரி டைம் ஸ்பென்ட் பண்றதுனு தெரில. நம்ம விளையாண்டதையும் நம்ம மறந்துட்டோம். நம்ம பசங்களையும் அப்டி விளையாட விட மாட்டேங்குறோம். எதுக்கெடுத்தாலும் டார்கெட்ஸ். அபான வாயுவைத் தவிர நம்ம எதையுமே இயற்கையா விடுறது இல்ல.
சில நேரங்கள்ல இலக்கே இல்லாமே செயல்படுறதும் மனசுக்கு ரொம்ப முக்கியம்.

கருத்துகள் இல்லை: