செவ்வாய், செப்டம்பர் 24, 2024

உயிரே- மணிரத்னம்-ஷாருக்-மனிஷா கொய்ராலா


மணியோட சில படங்கள் பாக்காம விட்டுப்போயிருந்துச்சி. தெய்வ குத்தம் ஆகிற கூடாதுனு நேரம் கிடைக்கும்போது அப்பப்போ ஒன்னு பாக்குறதுண்டு. உயிரே படம் இப்போ தான் பாத்தேன். படத்தோட முதல் சீனே கண்டதும் காதல். அதுமட்டுமில்லாம பிடிக்காத பொண்ணுகிட்ட stalking பண்ற மாதிரியான ஒரு கேரக்டர் ஷாருக்குக்கு. ஒரு கட்டத்துல இன்னொரு பொண்ணு கூட நிச்சயமாகிருந்தாலும் தன்னோட முன்னாள் காதலியைத் தேடி திரும்பவும் போறான். என்ன மாதிரியான லாஜிக்னே புரியலை. இந்த மாதிரி rebelliousஆ படம் எடுத்தே பழக்கப்பட்டவர். பூசாத செங்கல் வீட்டுல ஓடி போய் தாலி கட்டிட்டு வாழறது. என்னடா இடிக்குதேன்னு பாத்தா, நம்ம ரஹ்மான வச்சி 'மாங்கல்யம் தந்துனானேனா' போட்டு புல்லரிக்க வச்சிட்டு கிளப்பி விட்ருவார். அவரோட மேக்கிங் ஸ்டைல்ல இந்த மாதிரியான லாஜிக் மீறல்லாம் அடிபட்டுப்போச்சு. கூடவே நம்ம பாய் 'கதையை விடுங்க. புதுப்புது இன்ஸ்ட்ருமென்ட்ஸ். புது மெட்டு. அப்டியே பிரெஷா இருக்கும்' அப்டினு டைவர்ட் பண்ணி விட்டுடுவார். ஓகே. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.



உயிரே ஒரு கம்ப்ளீட் பேக்கேஜா ஏமாற்றம் தான். ஆனா படத்துல க்ளைமேக்ஸ் ரொம்ப பிடிச்சிருந்தது. ஒரே காரணம் மனிஷாக்கோசரம். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மனிஷா ஒரு மனித வெடிகுண்டா மாறுறதுக்கு மனதளவில தயாராயிட்டு இருக்கும்போது தான் 'ஹே ஹே, ஹே ஹே ' ஷாருக் பார்த்துட்டு காதல்ல விழுந்துடறார். உனக்கு 'ல்தகா சைஆ' இருக்கானு விடாம துரத்துறார். அந்த பொண்ணும் என்ன என்னவோ சொல்லி இவரை துரத்துனாலும் இவரும் விட மாட்டேங்கிறார். அந்த பக்கம் தீவிரவாதிங்க ப்ரெய்ன் வாஷ். இந்த பக்கம் இவரு ப்ரெய்ன் வாஷ். அந்த பொண்ணு இவரு பக்கத்துல இருக்கும்போது காதல் பீலிங்ஸை பட்டும் படாம காமிக்கும். இப்டியே போயிட்ருக்கும்போது க்ளைமேக்ஸ்ல மனித வெடிகுண்டா மாறி தன்னோட இலக்கை நோக்கிப்போகும். அப்போ ஷாருக் இவளை துரத்தி கண்டுபிடிச்சி வந்து கையை பிடிச்சிப்பார். அவரு பேசுற ஒவ்வொரு வார்த்தையும் இந்த பொண்ணை உருக்கும். ஆனா தீவிரவாத இயக்கத்தோட பிரமாணங்கள் முன்ன வந்து நிக்கும். அறிவு சொல்ற இயக்கமா அல்ல மனசு சொல்ற காதலா எந்த பக்கம் போறதுன்னு அப்டியே திணறிப் போய் மனிஷா நிப்பாங்க. இறுதில அந்த பொண்ணு மனசுலேந்து ஈரம் கசிஞ்சி தன்னோட காதலனை அப்டியே ஒரு ஏக்கம் கலந்த பார்வைல பாத்துட்டு அவ்ளோ நாள் தேக்கி வச்சிருந்த பீலிங்ஸ்லாம் வெளில வந்து தான் ஒரு மனித வெடிகுண்டுங்கிறதையே மறந்துட்டு அப்டியே இறுக்கி ஆரத்தழுவி கட்டிபிடிக்கும், அடுத்த நொடி ரெண்டு பேருமே பஸ்பமாயிடுவாங்க.
ஒரு நடிகையா, மனிஷா அந்த ரெண்டு நிமிஷம் காமிக்கிற face expressions, தி பெஸ்ட்.
லிங்க் முதல் கமென்ட்ல

கருத்துகள் இல்லை: