செவ்வாய், செப்டம்பர் 24, 2024

கொண்டாடுவோம்

எங்கேயோ இருக்கிற உசைன் போல்ட் 9.58 செகண்ட்ல வேர்ல்ட் ரெகார்ட் வச்சிருக்காருனு ஆச்சர்யப்படுறோம். இசைஞானியோட இன்டர்லுட் பிரீலுடனு தினம் தினம் மெச்சிக்குறோம். ஏ ஆர் ஆர், ஷாருக், ரஜினி, கமல், சச்சின், மெஸ்ஸி, கமலா ஹாரிஸ், எலான் மஸ்க் என எங்கெங்கேயோ இருக்குறவங்களோட சாதனைகளை மெச்சுற நாம நம்ம பக்கத்திலேயே இருகுறவங்களை கவனிக்கறதில்லை.

வேகாத வெயில்லேயும் எழுபது வயசுல தண்ணி கேன் போடுற தாத்தா, முப்பது வருஷமா தினம் 25 கிலோமீட்டர் மேல் சைக்கிள்ல பயணம் பண்ணி பேப்பர் போடுற பாய், குடும்பத்தை பிரிஞ்சி கஷ்டப்பட்டது போதும்னு துபாய்லேந்து ரிட்டர்ன் ஆகி நாலு மாடு வாங்கி கறவை பால் ஊத்துவோம்னு கடந்து நாலு வருஷத்துக்கு மேல ஒரு நாள் கூட லீவ் போடாம பால் போடுற அண்ணன். அவர் கண்ல அவ்ளோ தூக்கம் இருக்கும். ஒவ்வொரு நாள் பால் ஊத்தும்போதும் சிரிச்ச முகத்தோட குட்மார்னிங் குட் ஈவினிங் சொல்லுவார். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. பால் ஊத்திட்டு காலைல போய் தூங்கிடுவிங்களோனு கேட்டா, 'இல்லை sir. அன்னதானம் வண்டில ஏறி போயிடுவேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஊர். சாயந்தரம் வந்ததும் ஈவ்னிங் பால் ஊத்தப் போய்டுவேன்'. டைம் இல்லைனு நாமெல்லாம் சொல்லவே கூடாது.
சரி அத விடுங்க. அவங்க அவங்க அவங்களோட துறைல சாதிக்கிறாங்க. அவங்க அந்த அளவுக்கு துறைல சாதிக்கிறதுக்கு குடும்பத்துல பல பேரோட சப்போர்ட் இருக்கும். அதை குறை சொல்ல ஒன்னும் இல்லை. அவங்கவங்க பலாபலன். உலகப்புகழ் பெற்றதுதான் வாழ்க்கையா? உள்ளூர மகிழ்ச்சியா இருந்தா தான் வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் காலைலேந்து நைட்டு தூங்குற வரைக்கும் ஒரு சாதாரண காமன் மேனா நாம போடுற வேஷம் படுற கஷ்டம் எத்தனை? வயசான அப்பா அம்மாவுக்கு புள்ளையா முடிஞ்ச அளவுக்கு அவங்களை டேக் கேர் பண்ணிட்டு, மனைவிக்கு புருஷனா, புருஷனுக்கு மனைவியா, புள்ளைங்களுக்கு அப்பா அல்லது அம்மாவா, ஆபிஸ்ல பாஸுக்கு அடிமையா, அங்க வாங்குன காண்டை நமக்கு கீழ இருக்குற அடிமைக்கு காமிக்கும்போது பாஸா, அண்டை அயலாரோடு ஒரு friendship, அப்டியே சொக்காரோட நல்லது கெட்டது, நட்புகளோட அளவளாவல். சுகம், துக்கம், அவமானம், வேதனை, கோவம், கழிவிரக்கம், எரிச்சல், சுயபச்சாதாபம், இயலாமை அப்டி இப்படினு எவ்வளவு எமோஷன்ஸ். இதுக்கு நடுவுல நம்ம ஆசா பாசங்கள் நிறைவேத்துறத்துக்கு முயற்சி பண்ணிட்டு, இந்த மாதிரியான ஒரு சிட்டுவேஷன்ல அன்னன்னைக்கு மனசு நிறைவா நாம எப்போவாது சிரிக்கிறோம்னாலே அதுவே பெரிய சாதனை தான். பெரும் வாழ்வு தான். கொண்டாடுவோம்
😊

கருத்துகள் இல்லை: