பல பேருக்கு இருக்குற ஒரு சந்தேகம் அல்லது பயம்னு கூட வச்சுக்கலாம். இந்த க்ரெடிட் கார்ட்ஸ்லாம் யூஸ் பண்ணலாமா கூடாதுனு. இந்த பயம் தான் எனக்கும் இருந்துச்சு. ஆனா கொஞ்சம் அலெர்ட்டா யூஸ் பண்ணா லண்டனுக்கு ப்ரீயா பிளைட் டிக்கட் அப்புறம் தங்குற செலவு வரைக்கும் க்ரெடிட் கார்ட் ரிவார்டு பாய்ண்ட்ஸ்லேயே முடிச்சிடலாம். என்ன கதை சுத்திரியான்னு கேக்குறீங்களா? மேல படிங்க.
க்ரெடிட் கார்ட்னா என்ன? முதல்ல அதை பாத்துடலாம். அக்கௌண்ட்ல பணம் இருந்து நம்ம செலவு பண்றதுக்கு யூஸ் பண்றது டெபிட் கார்ட். அதாவது ATM கார்ட். ஆனா பணமே இல்லாம செலவு பண்ணிட்டு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் அந்த பணத்தை எந்த வித இன்டெரெஸ்ட்டும் இல்லாம கட்டுறது தான் க்ரெடிட் கார்ட். முன்னாடிலாம் க்ரெடிட் கார்ட் வச்சிக்குறது ஒரு கௌரவமா இருந்துச்சு. ஏன்னா எல்லார்கிட்டையும் இருக்காது. காரணம், மாசாமாசம் ஒருலட்சம் ரூபா அவங்களை நம்பி பேங்க் கொடுக்குது. அதனால செலெக்ட்டடா தான் கொடுத்தாங்க. ஆனா இப்போ ராயல் என்பீல்ட் புல்லட் மாதிரி எல்லாருகிட்டையும் க்ரெடிட் கார்ட் இருக்குது. அவங்க அவங்க தகுதிக்கேற்ப க்ரெடிட் லிமிட் பிக்ஸ் பண்ணி பேங்க் கொடுக்குறாங்க. இதுல பல டைப் இருக்குது.
ஓகே.சாதகம்.
செலவு பண்ண பண்ண ரிவார்ட்ஸ் அல்லது கேஷ் பேக் கிடைக்கும். அதான் பாசிட்டிவ் பாயிண்ட். எவ்ளோ செலவு பண்றீங்களா அவ்ளோ ரிவார்ட்ஸ். உதாரணத்துக்கு இப்போதைக்கு ஆக்ஸிஸ் பேங்க் ஏஸ் கார்டு தான் பெஸ்ட் பார் கேஷ்பேக். ஒவ்வொரு ட்ரென்ஸாக்ஷனுக்கும் 2% கேஷ்பேக். அதாவது நீங்க 100 ரூபா செலவு பண்ணா 2 ரூபா திரும்ப கிடைக்கும். கடைக்கு போய் மளிகை சாமான் வாங்குறீங்க. அல்லது துணிக்கடைல ஒரு 3000 ரூபாய்க்கு செலவு பண்றீங்க. 60 ரூபா கேஷ்பேக் ஆயிடும். இது unlimited. அதுவே gpay மூலமா இந்த கார்டு வச்சிக்கிட்டு எலெக்ட்ரிக்ஸிட்டி பில், gas பில் மாதிரியான யுடிலிட்டி பில்ஸ் கட்டுனா 5% கேஷ்பேக். அதாவது 500 ரூபா போன் பில் கட்டுனா 25 ரூபா கேஷ்பேக். போன மாசத்துலேந்து அந்த 2% கேஷ் பேக் 1.5% மாறிருக்கு. எப்டினாலும் எல்லா ட்ரென்செக்ஷன்லயும் இது unlimitedஆ செல்லுபடி ஆகுறதுனால இப்போதைக்கு இதான் கேஷ்பேக் ராஜா. annual fee 500 ரூபா. பட் நமக்கு கிடைக்குற கேஷ்பேக் அத விட அதிகமா இருக்கும்.
பெட்ரோல் டீசல் செலவுக்கு தி பெஸ்ட் கார்ட் அப்டினா அது SBI BPCL octane தான். இதுல 6.25% கேஷ்பேக். அதாவது பார்ட்னர்ஷிப் ரிவார்ட் ப்ரோக்ராம். பாரத் பெட்ரோலியம்ல மட்டும் பியூல் fill பண்ணிக்கணும். ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு 6.25 ரூபா கேஷ்பேக். ஒரு மாசத்துக்கு 3000 ரூபா பெட்ரோலுக்கு செலவு பண்ணினா வருஷத்துக்கு 36000 ரூபா. மொத்த கேஷ்பேக் 1800 ரூபா. பாதி டேங்க் பெட்ரோல் freeya fill பண்ணிக்கலாம். இதுக்கும் annual fee இருக்குது. 1500 + tax. வருஷத்துல 200000 மேல செலவு பண்ணா இந்த fee ரிவர்ஸ் ஆகிடும்.
இது மாதிரி ஒவ்வொரு ஸ்பெண்டுக்கும் ஒவ்வொரு கார்ட் இருக்குது.
லண்டன் மேட்டருக்கு வரேன். ஆக்சிஸ்ல magnus கார்டுன்னு ஒரு வேரியண்ட் இருக்குது. வருஷத்துக்கு 10000 ரூபா fee. அதுக்கு 10000 ரூபா வவுச்சர் குடுத்தாங்க. தனிஷ்க் இல்லன்னா க்ரோமால redeem பண்ணிக்கலாம். இதுல ஒரு மாசத்துல 1lakh ஸ்பென்ட் பண்ணினா 33000 பாயிண்ட்ஸ் குடுத்தாங்க. அத அப்படியே பார்ட்னர் flights ஹோட்டேல்ஸ்க்கு transfer பண்ணினா 33000 ரூபா. இப்படியே ஒரு வருஷத்துல 12 லட்சம் ஸ்பென்ட் பண்ணி கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபா கேஷ்பேக்கா சேர்த்துட்டு, தெரிஞ்ச ஒருத்தர் லண்டனுக்கு அப் அண்ட் டவுன் flight, தங்குறதுக்கு ஹோட்டல் செலவுனு எல்லாத்தையும் முடிச்சிட்டார். இப்போ இந்த கார்டு இருக்கு. ஆனா ரொம்ப ஹெவியா டீவேல்யு பண்ணிட்டாங்க. ரிவார்ட்ஸ்லாம் குறைச்சிட்டாங்க. கார்ட் புதுசா வந்து ஒரு ரெண்டு வருஷம் நல்லா யூஸ் பண்ண முடிஞ்சது. இப்போ இதுக்கு ஓரளவுக்கு ஈக்வலா அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பிளாட்டினம் டிராவல் கார்ட் கொடுக்குறாங்க. ஒரு வருஷத்துல நாலு லட்சம் செலவு பண்ணா 35000 ரூபா கிடைச்சுடும். 9% கேஷ்பேக். செலவு பண்ணணுமேன்னு பண்ணக்கூடாது. நம்ம ரெகுலரா செலவு பண்றதை க்ரெடிட் கார்ட் மூலமா செலவு பண்ணிட்டு திரும்பி pay பண்ணிட வேண்டிதான். என்னைக்குமே milestone achieve பன்றேன்னு சொல்லிட்டு தேவைக்கு அதிகமா செலவு பண்ணைக் கூடாது.
சில க்ரெடிட் கார்ட்ல ஏர்போர்ட் லவுன்ச் அக்சஸ் பண்றதுக்கு அலோ பண்றங்க. வருஷத்துக்கு நாலு தடவை. அது என்ன லவுஞ்ச். நீங்க இப்போ ஏர்போர்ட்ல flight ஏறப்போறீங்க. ரெண்டு மூணு மணி நேரம் வெயிட்டிங் டைம் இருக்குதுனு வச்சிப்போம். பசிக்குது. அங்க லவுன்ச் அப்டினு ஒரு இடம் இருக்கும். ஹோட்டல் மாதிரி. சோபா, சார்ஜ் பாயிண்ட். buffet சாப்பாடு எல்லாம் இருக்கும். உங்க கிட்ட இருக்குற க்ரெடிட் கார்ட் swipe பண்ணி ரெண்டு ரூபா எடுத்துக்குட்டு உங்கள யூஸ் பண்ணிக்க சொல்லுவாங்க. டின் கூல் ட்ரிங்க்ஸ், காஃபி , டீ , நான் வெஜ் அப்டினு எல்லாமே unlimited. ரெண்டு ரூபா தான். இதுமாதிரி ஏகப்பட்ட கார்ட்ஸ் இருக்கு. மூவிக்கு ஒரு கார்ட். ஆன்லைன்க்கு மட்டுமே செலவு பண்றதுக்கு ஒரு கார்ட். அப்டினு நிறைய. ஸீரோ fee லேந்து வருஷத்துக்கு 70000 fee கட்டுற வரைக்கு க்ரெடிட் கார்ட்ஸ் இருக்குது. நமக்கு எது தேவையோ அதை பாத்து செலெக்ட் பண்ணிக்க வேண்டிதான்.
அதுமாதிரி ரூபே, விசா, மாஸ்டர் வேரியண்ட்ஸ் இருக்கு. இந்தியன் மேக் அப்டிங்கிறதுனால ரூபே மெர்ச்சண்ட் அதிகமா ப்ரொமோட் பன்றாங்க. விசா அண்ட் மாஸ்டர் கார்டஸ்க்கு சார்ஜஸ் போடறாங்க.
பாதகம்
1. பேமண்ட் டேட்ல கரெக்ட்டா பணம் கட்டிடனும். இல்லன்னா இன்டரஸ்ட் போட்டு தாக்கிடுவாங்க. அதுக்கு தான் பேங்க் ஒத்தை கால்ல காத்துகிட்டு நிக்கும்.
2. கார்ட் டீடெயில்ஸ் பத்திரமா வச்சிக்கணும். மோசடி நடக்காம இருக்குறதுக்கு விழிப்பா இருக்கணும்.
3. பணம் கொடுக்குறானே அப்டினுட்டு கன்னா பின்னான்னு செலவு பண்ண கூடாது. நீங்க யூசுவலா செலவு பண்றதை க்ரெடி கார்ட்ல செலவு பண்ணனும். அவ்ளோதான்.
எந்த கார்ட் பெஸ்டுன்னு செக் பண்ணி பணத்தை அறுவடை பண்ணுங்க.
ஸ்ரீருத்
10.07.2024

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக