அதோமுகம்
சில நல்ல படங்கள்லாம் வந்த சுவடே தெரியமாப்போய்டும். அதுமாதிரியான ஒரு மூவி தான் 'அதோமுகம்'
'தமிழ் சினிமால ரைட்டருக்காடா பஞ்சம்னு சொன்னீங்க. இந்தா வரேன் பாருன்'னு ஒரு பக்காவான திரில்லர் ஸ்டோரிய எழுதிருக்கார் சுனில் தேவ். ரெண்டாவது நிமிஷத்திலேந்து படம் படபடக்க ஆரம்பிச்சிடுது. காட்சிக்கு காட்சி திருப்பம். என்ன நடக்கப்போகுதுனு ஒரு ஆர்வம். செம க்ரிப்பா ஸ்டோரி நகருது. ரெண்டு செல்போன் வச்சிட்டு இவ்ளோ பரபரப்பை கூட்ட முடியுமா?. முடியும்னு first half வரைக்கும் கொண்டு போய்ட்டார். அப்புறம் கதை கொஞ்சம் சுத்த ஆரம்பிக்குது. எல்லாப்படமும் இதுமாதிரிதானே. ஸ்டார்டிங் நல்லாருக்கும். எண்டிங் என்ன பண்றதுனு தெரியாம முடிச்சிருப்பாங்க. அப்டி தான் போகப்போதுனு நினைச்சா, 'கண்ணா யூ ஆர் ராங்' அப்டினு செகண்ட் half லேயும், 'ட்விஸ்ட் வேணும்னு கெட்டியாமே. இந்தா எடுத்துக்கோ'ன்ற ரேஞ்சுல ட்விஸ்ட் மேல ட்விஸ்ட். படம் முடிஞ்சிருச்சுனு நினைக்கும்போது அருண்பாண்டியன் கேரக்டரை இண்ட்ரோடியுஸ் பண்ணி பார்ட் 2க்கு லீட் கொடுத்துருக்கார். 'வாரேண்டி என் பொண்டாட்டி' bgm க்ளைமேக்ஸ்ல செமையா ஒர்க் அவுட் ஆகியிருக்கு.
முழுக்க முழுக்க புதுமுகம். ஆனா புதுமுகம்னு சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பு டெய்லர் மேட். இந்த சைதன்யாவை எங்கேயோ பாத்தா மாதிரி இருக்குது. செம சினிமாட்டோகிராபி. கச்சிதமான எடிட்டிங். பியூடிபுல் லொகேஷன்ஸ்னு ஒரு மெயின் ஸ்ட்ரீம் மூவிக்கான எல்லா விஷயமும் பக்கா. அதையும் தாண்டி ஏன் படம் பேசப்படலன்னு தெரியலை. நேரம் கொமாரு நேரம்.
முகம் சுளிக்கிற மாதிரி ஒரு சீன்ஸ் கூட இல்ல. பேமிலியோட பாக்க தாராளமா வீகென்ட் வாட்ச்க்கு டிக் அடிக்கலாம். ப்ரைம்ல இருக்கு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக