செவ்வாய், செப்டம்பர் 24, 2024

கணக்கியல்

அலுவலகத்தில் பயிற்சிக்காக வருபவர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு. 'உத்யோகம் புருஷ லட்சணம்' என்று ஒரு கலவையான ஆணாதிக்கம் மனோபாவ சமூக கட்டமைப்பினால், இந்த மாணவர்கள் எப்படியேனும் உருண்டு பிரண்டு வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பெண்களிடம் தான் இதை அடிக்கடி வலியுறுத்துவேன். 'ஏதேனும் ஒரு வேலைக்குச் சென்று விடுங்கள். திருமணம், குழந்தை என்று மாற்றங்கள் வந்தாலும் வேலை பார்ப்பதை விட்டுவிடக்கூடாது. கல்வியும் கையில் இருக்கும் காசும் கொடுக்கும் தைரியத்தை, மனதிடத்தை ஏன் திமிர் என்று கூட எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நம்பிக்கை வேறெதிலும் கிடைத்து விடாது. இதுநாள் வரையில் வீட்டில் வளர்ந்த சூழல் வெறும். நாளை மணம்புரிந்தவனிடம் 'ஒரு ஹேர்பின்' என்று கேட்கும் நிலையை யோசித்துக் கொள்ளுங்கள். வேலையை விட்டுவிடாதீர்கள். ஏனெனில் சேனிட்டரி பேடிற்குக்கூட கணக்கு பார்க்கும் கனவான்கள் உள்ள உலகம் இது.'



கொஞ்சம் அதிகமாகத்தான் சொல்லிவிட்டோமோ என்று சில நேரம் தோன்றும். ஆனால் உண்மையை உடைத்து உரைக்க வேண்டும் என்றால் கசப்பை சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஒரு affirmation bias போல இதே thought process இல் இந்த வார விகடனின் வெளிவந்த 'கணக்கியல்' சிறுகதையில் ஆசிரியர் ' துவாரகா சாமிநாதன் ' எழுதியிருக்கிறார். ஆக, நாம் சொன்னது சரிதான் என்று வகையில் மகிழ்ச்சி. இதுபோல மற்றொரு நபருக்கும் தோன்றியிருக்கிறது என்பதும் மகிழ்ச்சி.
பெண்களின் முழுச் சுதந்திரம் என்பது education, employement and empowerement இல் பொதிந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: