செவ்வாய், செப்டம்பர் 24, 2024

கல்கி 2898AD


என்னா மேக்கிங் டா சாமி. அவ்ளோ விசுவல் எபக்ட்ஸ். கிராபிக்ஸ் அவ்ளோ தரம். மெனெக்கெட்டுருக்காங்க. அப்டியே ஒவ்வொண்ணும் பாத்து பாத்து செதுக்கிருக்காங்க. இப்போதிருந்து 800 வருஷத்துக்கு அப்புறம் என்ன மாதிரி உலகம் இருக்குங்குற கற்பனை ஓரளவுக்கு நல்லாருக்கு. படத்தோட விசுவல்ஸ் பல இடங்கள்ல ஹாலிவுட் மேட் மேக்ஸ் பியூரி படத்தை ஞாபகப்படுத்துச்சி. அந்த டெஸெர்ட் ரைட், மெட்டல் வாகனம், மக்கள், காஸ்ட்யூம்ஸ் எல்லாமே மேட் மேக்ஸ் இம்ப்ரஸ்ஸன்ஸ் தெரிஞ்சுச்சு.



அடேங்கப்பா எவ்ளோ காஸ்டிங்ஸ். பிரபாஸ், அமிதாப், கமல், தீபிகா படுகோனே, பிரம்மானந்தம், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, திஷா பட்டாணி, ஷோபனா, ராஜமௌலி, ராம் கோபால் வர்மா, ம்ருனால் தாகூர், பசுபதி அப்டினு எல்லா ஸ்டேட்லேந்தும் அள்ளிபோட்ருக்காங்க.
இதுல அசத்தலான வேஷம் அஸ்வத்தாமனா வர்ற அமிதாப்கு தான். எட்டடி மனுஷனா கலக்கிருக்கார். 81 வயசுல என்னா மாதிரியான பையிட் சீக்வன்ஸ். மிரட்டல் ரகம். வில்ல'ர்' ரோல் கமலுக்கு. அவரு பேசும்போது மிருகம் பாதி நந்து ஞாபகப்படுத்துறார். பிரபாஸ். படத்துல ஹீரோ அவர் தான். ஆனா பாதி காட்சிகள் காணோம். ப்ரபாஸ் இன்ட்ரோ fight சீன்ஸ் வித்தியாசமா ட்ரை பண்றோம்னுட்டு சொதப்பிருக்காங்க. கார் கேரக்டர் வர்ற புஜ்ஜி கொஞ்சம் கலகலப்பாக்குது. படம் ஆரம்பிச்சதிலேந்து இறுதி வரைக்கும் தீபிகா சிரிக்கவே இல்லை. சோகம், அழுகை, படபடப்பு.
கிட்டத்தட்ட மூணு மணி நேரம் படம். முதல் 90 நிமிஷம் அப்படி ஒரு ஸ்லோ. எந்திரிச்சி போயிடலாம்னு நினைக்கிற அளவுக்கு மொக்கையான டைலாக்ஸ். காம்ப்ளெக்ஸ், யூனிட்ஸ், சிரம், 150 டேஸ். இந்த நாலு வார்த்தைகளைத்தான் மாத்தி மாத்தி பேசி கொல்றாங்க. போதாக்குறைக்கு ஸ்லோ மோஷன்ஸ் டைலாக் டெலிவரி வேற. சோதனை பண்ணுது.
இன்டர்வலுக்கு அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமா சூடு பிடிக்குது. க்ளைமேக்ஸ் fight எப்படியும் முக்கால் மணி நேரம் தேத்திருப்பாங்க. லேசர் கன் என்ன, பறக்கிற கார் என்ன, ட்ரென்ஸ்பார்மர் அது இதுனு ஏகப்பட்ட சை பை சமாச்சாரங்கள். அவ்வளவும் தரமான மேக்கிங். படம் முழுக்க மூடுக்கு ஏத்த மாதிரி நம்ம சந்தோஷ் ம்யூசிக் போட்ருக்கார். ரொம்ப நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. படம் முழுக்க கொஞ்சம் டார்க் ஷேட் இருக்கு.
குயந்தைங்க செமையா என்ஜாய் பண்ற மாதிரி ஒரு படம். கலெக்ஷன்ஸ் அள்ளிடுவாங்க. சந்தேகமே இல்லை. எடிட்டர் யோசிக்காம ஒரு 30 நிமிஷம் கத்திரி போட்ருக்கலாம். இன்னும் விறுவிறுப்பா இருந்திருக்கும். மொத்தத்துல கொஞ்சம் சகிச்சிக்கிட்டா ஹாலிவுட் தரத்துல ஒரு இந்தியன் சினிமா.
பார்ட் 2 க்கு வெயிட்டிங்.

கருத்துகள் இல்லை: