ஆபிஸ் சீனியர் அவர். உயர்ந்த உயர் அதிகாரி. அப்படி ஒரு பதவி. ரிட்டையர் ஆயிட்டார். பசங்க அமெரிக்கா அப்புறம் ஆஸ்திரேலியால. அவர் சொல்லல்லனாலும் பசங்கள விட்டு இருக்குற வருத்தம் முகத்துல தெரியும். அப்பப்போ வீட்டுக்கு போய் அவரை என்கேஜ் பண்றதுண்டு. ஆட்களை பாத்தா விடமாட்டார். extempore மாதிரி பேசித்தள்ளிடுவார். விஷயம் அது இல்லை.
அவர் வீட்டுல ஹால்ல என்டர் ஆகும்போது ஒரு போர்ட்ராய்ட் ஸ்கெட்ச் பாக்க முடியும். அவரை பென்சில் ஸ்கெட்சல வரைஞ்சுருப்பாங்க. பிரேம் போட்டு இருக்கும். ரிட்டையர் ஆகும்போது கொடுத்திருக்காங்க. ஒவ்வொரு தடவை பாக்கும்போதும், 'அவ்ளோ ஒரு மரியாதை அன்பு இருந்தா மட்டும்தான இந்த மாதிரி ஒருத்தங்களை வரைஞ்சு கொடுக்க முடியும்ல. அவ்ளோ மனிதத்தன்மையா நடந்துருக்கார் போல' அப்டினு மனசுல ஓடும். வாழ்ந்தா இது மாதிரில வாழனும் அப்டினு தோணும். அதுக்கு நமக்கு வாய்ப்பில்லை ராஜா அப்டினும் இன்னொரு பக்கமம் தோணும்.
பட். கடந்த வாரம் ஆபிஸ்லேந்து ரிலீவ் ஆகிப்போனவங்க ஒரு கிப்ட் ப்ரெசென்ட் பண்ணிருந்தாங்க. such a shocking surprise. காசு கொடுத்து போர்ட்ராய்ட் ஸ்கெட்ச் அத்தனை போடலாம். ஆனா அன்பா கொடுக்கிறதுங்கறது, அதுவும் டைம் ஸ்பென்ட் பண்ணி, என்னோட புக்குல அட்டைப்படத்தில இருக்குற குட்டி போட்டோவை வச்சி, இதுவரைக்கும் ட்ரை பண்ணாத க்ளாஸ் பெயிண்டிங்க்ல பண்ணி கொடுக்குறதுங்கிறது, இந்த மாதிரியான அவசர உலகத்துல...நம்பவே முடியல. காலத்துக்குமான ஒரு நல்ல moment அது. precious gift. நம்ம மேல ஒருத்தங்க அன்பும் மதிப்பும் வச்சிருக்காங்க அப்டிங்கறதே நாம் வாழ்ந்த வாழ்வுக்கு ஒரு சான்று. அன்பும் நன்றியும்
கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா அப்படிங்கற மாதிரி இந்தா புடி இன்னொரு மேங்கோனு ஒரு விஷயம். அந்த உயரதிகாரி வீட்டுல இருந்தது தனி நபர் ஒருத்தர் போட்டு கொடுத்த ஸ்கெட்ச் இல்லையாம். ரிட்டயர் ஆகும்போது எல்லா உயரதிகாரிக்கும் க்ளப்லேந்து கொடுப்பங்களாம். இது தெரியாம பீல் பண்ணிட்டேன்.
ஆஹா. அப்போ எனக்கு கிடைச்ச ஸ்கெட்ச் அதைவிட ஒரு படி மேல்.
As you sow, as you reap. அன்பை விதைப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக