2021ல நேரடியா நெட்பிளிக்ஸ்ல வெளியான படம். தப்ஸீ தான் ஹீரோ. விக்ராந்த் மாஸே ஹீரோயின். ஆமா. தப்சீய சுத்திதான் கதையே நகரும். புருஷன் பொண்டாட்டிக்குள்ள இன்னொருத்தன் நுழையிறான். அப்படி இப்படி ஆகி அந்த மூணாவது மனுஷன் வெளில போய்டுறான். இவங்க அதுக்கப்புறம் ரீகன்சைல் ஆகி வாழ்க்கையை ஆரம்பிக்கிறப்போ திரும்பியும் உள்ள வரான். அவங்க மூணு பேருக்குள்ள என்ன நடந்தது? அப்டிங்கறத செம ட்விஸ்ட்டோட முடிச்சிருப்பாங்க.
இதோட செகண்ட் பார்ட் 2024ல அதே நெட்பிலிக்ஸ்ல வெளி வந்திருக்கு. போலீசுக்கு பயந்து வேற ஒரு ஊர்ல தனித்தனியா வாழற அதே புருஷன் பொண்டாட்டிக்குள்ள இன்னொரு புது கேரக்டரை இண்ட்ரோடியுஸ் பண்ணிருக்காங்க. போலீஸ் தன்னை மோப்பம் பிடிக்கிறாங்கனு தெரிஞ்ச தப்சீ எப்டியாவது போலீஸ் பார்வையிலிருந்து தப்பிச்சிடலாம்னு பிளான் பண்ணி அந்த கேரக்டர கல்யாணமும் பண்ணிக்கிறாங்க. எங்களை சேத்துவைனு அந்த மூணாவது மனுஷன்கிட்டயே இவங்க ஹெல்ப் கேக்க, ‘என்னை என்ன தக்காளி தொக்குனு நினைச்சீங்களாடா’னு அங்க ஆரம்பிக்குது வில்லன் பயணம். வில்லனா சன்னி கௌஷல். பாத்தா முகமா இருக்கேன்னு பாத்தா firebolt வாட்ச்க்கு வருவாரே. விக்கி கௌஷல். அவரோட தம்பி. இவங்க மூணு பேரைத் தாண்டி இன்னொரு புது கேரக்டர். ‘போலீசையாடா ஏமாத்துறீங்க?’ அப்டினு மோட்டு சாச்சு மாமானு இன்வெஸ்டிகேட் பண்ணா வரார். இவங்க ரெண்டு பேரையும் சமாளிச்சிட்டாங்களா? அப்டிங்கறதை ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வச்சி சொல்லிருக்காங்க.
ரெண்டு படத்துக்கும் வேற வேற டேரக்டர்ஸ். ஆனா ஒரே ரைட்டர். அதனால கேரக்டரைசேஷன்லாம் பக்காவா இருக்குது. புதுசா ரெண்டு பேரை இண்ட்ரோடியுஸ் பண்ணி இருந்தாலும் அவங்களுக்கும் ஒரு பிளாஷ் பேக்னு நல்ல ரைட்டிங். ஹரிதுவார் கங்கை ஆற்று பெருக்கு, ஆக்ரா தெருக்கள், தியோசர் நீர்வீழ்ச்சி அப்டினு லொகேஷன்ஸ்லாமே சூப்பர். வீகென்ட் வாட்ச்க்கு தாராளமா டிக் பண்ணலாம். பல ரோமன்ஸ் காட்சிகள் இருக்குறதுனால குடும்பமா ஒண்ணா பாக்காம தனித்தனியா போர்வையை போத்திட்டு பாத்துக்கலாம். தாராள தப்ஸீ காரணமா ஸ்ட்ரிக்ட்லி 18+.
ரெண்டு படமுமே நெட்பிளிக்ஸ் OTT தளத்துல இருக்கு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக