பொருள் நல்லாருக்குதோ இல்லையோ அதுக்கான விளம்பரம் தான் இப்போதைக்கு மேட்டர். தலைல கட்டிட்டு போயிட்டே இருப்பாங்க.
ஷங்கர் பேட்டில சொல்லிருந்தார். இதுல மூணு ரைட்டர்ஸ். மூணு இணை டெரெக்டர்ஸ். இந்தியன் தாத்தா வெர்ல்டு லெவல்ல சுத்துறார். அதனால எல்லா இடமும் என்னால போய் டெரெக்ட் பண்ண முடியாது. அதான் எல்லாரையும் ஹெல்ப் பண்ண சொல்லி கூப்ட்ருக்கேன் அப்டினு சொல்லும்போதே உஷாராயிருக்கனும். இவரு மொத்தமா அவுட் சோர்ஸ் பண்ணிட்டார்.
1996ல வந்த படம். தாத்தா போய்ட்டு 2024ல வரார். 28 வருஷம் கழிச்சி வர்றார். எவ்ளோ எதிர்பார்ப்பு இருக்கும். இன்ட்ரோ தூள் கிளப்புவார்னு பார்த்தா சப்புன்னு போய்டுச்சு. அந்நியன் படத்துல வர்ற மாதிரி ஒவ்வொரு வர்மத்துக்கும் பாட்டு, விளக்கம். புதுசா எதுவுமே ட்ரை பண்ணலை. வர்மம் கூட தெளிவா காமிக்கலை. தாத்தா ஏன் இவ்ளோ நாள் இந்தியா வரலைன்னு சொல்றதுக்கான ஒரு வரி காரணம் மட்டும் ஏத்துக்குற மாதிரி இருந்துச்சு. இந்தியாக்குள்ள வந்தவரை எங்கேயுமே ட்ரேஸ் பண்ண முடியலை அப்டிங்கறது நம்ம காதுல ஒரு முழம் பூவை சுத்துற மாதிரி இருக்குது. இன்னொரு காதும் சும்மாதானே இருக்கு, இன்னும் பூவை சுத்திக்கோன்ற மாதிரி ஏகப்பட்ட லாஜிக் சறுக்கல்ஸ்.
சரி 45 நிமிஷம் தான் கமல்னா மீதி 2.45 மணி நேரம். சித்தார்த், ஜெகன், பிரியா பவானி, ரிஷி, சமுத்திரக்கனி, ரேணுகா, மனோபாலா, தம்பி ராமைய்யா. இவங்க தான் படம் முழுக்க. இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி சோசியல் மீடியா, ரீல்ஸ், ஹாஷ்டேக், லைக்ஸ், வ்யூஸ் எல்லாம் ஓகே. பட் வெள்ளை பூக்கள் படத்துல விவேக் சொல்ற மாதிரி எல்லாம் இருந்தும் இதுல என்னவோ மிஸ் ஆகுது. பாபி சிம்ஹா. அதே மலச்சிக்கல் ரியாக்ஷன். இவங்க எல்லாரையும் பாக்கவா தியேட்டர் வந்தோம்?
வேர் இஸ் கமல் மிஸ்டர் பிரம்மாண்டம். கேலண்டர் சாங் தேவையில்லாத ஆணி. காமெடி மருந்துக்கு கூட இல்லை. நடுவுல ரகுல் ப்ரீத் வந்த மாதிரி இரு ஞாபகம். நீங்க பாத்தீங்களா? ஒன்னும் வேண்டாம். எஸ்.ஜெ. சூர்யா கேரக்டர் வருது. அதை வச்சாவாது ஒரு அரை மணி நேரம் ஓட்டி படத்தை காப்பாத்தியிருக்கலாம். அது எப்படி படம் நல்லாருக்கலாம் அப்டினு ஷங்கர் கங்கணம் கட்டிட்டு எடுத்துருக்கார்.
செல்ப் பேலன்ஸிங் வண்டியை ஓட்டி தப்பிக்கிற மாதிரி க்ளைமேக்ஸ். சரி வா. பட்டறைக்குள்ள போய் ஒரு சண்டையை போட்டுட்டு போவோம் ரேஞ்சுல ஒரு fight சீன். கோர்ட்ல பேரம் பேசி குற்றவாளியை வெளில விடுறாங்க. அப்பாவை பணையம் வச்சி தப்பிச்சா அது இன்ட்ரோ சீன். அதுவே பையனை பேரம் பேசி தாத்தா ஆம்புலன்ஸ்ல தப்பிச்சா அது க்ளைமேக்ஸ் சீன். இது அல்லவோ போங்கு ஆட்டத்தின் உச்சம்.
ம்யூசிக்கா அது. bgm லாம் ஒன்னு கூட மனசுல நிக்கலை. கடன் வாங்கி போட்ட கப்பலேறி பாட்டு bgm தான் ஒரே ஆறுதல். மத்தபடிக்கு காது ஜவ்வு கிழியிற இரைச்சல். தாத்தா வர்றாரு பாட்டுலாம் எந்த வகைல சேத்துக்கறதுனு தெரில. கூட்டத்துல ஆடுறது, சித்தார்த்தா ப்ரியா பவானியா அப்டினு டவுட்ஸ்லாம் வருது. நல்லவேளை சித்தார்த் மீசை வச்சிருக்கார்.
தயவு தாட்சண்யம் பாக்காம எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஒரு மணி நேரத்தை கட் பண்ணிருக்கலாம். கதை வறட்சி, கற்பனை வறட்சி, எழுத்து வறட்சிக்கெல்லாம் எடுத்துக்காட்டு இந்தியன் 2. இதுல படம் முடிஞ்சு கிளம்புற நேரத்துல பெரிய குண்டை தூக்கி போட்டாங்க. இந்தியன் 3 வருதாம். சொல்லாத கதையை சொல்றாங்களாம்.
இந்தியன் முதல் பாகம் ஒரு மாஸ்டர் பீஸ். அதை அப்டியே டிஸ்டர்ப் பண்ணாம விட்ருக்கனும். அப்டியே ஒரு நல்ல மெமரியா இருந்துருக்கும்.
சாரி தாத்தா. ஹைலி டிஸ்ஸப்பாய்ண்ட்டட் !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக