படத்துல ஆரமபத்துல போடுற டைட்டில் கார்டுலேயே டெரெக்டர் பேரு போட்றத பாத்திருப்போம். ஆனா முன்னாடிலாம் திரைக்கதை முன்னெத்தி ஏர்களான பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் இவங்க படத்துல முக்கியமான சீன் வரும்போது டெரெக்டர் நேம் வரும். கதை திரைக்கதை வசனம் இயக்கம் அப்டினு அந்த முக்கியமான சீன்ல பிரீஸ் பண்ணி அவங்க பேர போட்ருப்பாங்க. இன்டெர்வல் பிளாக்ல கூட பேர் போட்ட கதை உண்டு. அப்டி எழுதுனாங்க. 'செமல' அப்டினு ஒரு பீலிங் வரும். அந்த பீலிங் ரொம்ப நாள் கழிச்சு 'மகாராஜா' படத்துல 'நித்திலன் சுவாமிநாதன்' பேர பாக்கும்போது வந்துச்சு.
என்ன மாதிரியான ஒரு ரைட்டிங். படம் முன்னையும் பின்னையும் ஓடுது. நான் லீனியர் நரேஷன். ஆனா எங்கேயும் குழப்பம் இல்லை. மிகை நடிப்பு இல்ல. ஒரு காட்சி கூட தொய்வை ஏற்படுத்தலை. என்னடா ஒன்னும் performance காமிக்காம மனுஷன் உக்காந்திருக்காருனு பாத்தா அந்த இறுக்கமான முகத்தை வச்சிட்டே படம் முழுக்க பிச்சி உதறிட்டார். VJS நடிப்புல மஹாராஜா தான். இதுவரைக்கும் பண்ணாத ஒரு ரோல் சிங்கம்புலிக்கு. நம்ம favourite நட்டி போலீஸ் ஆபிஸரா வரார். மனுஷன் அந்த ஹைட்டுக்கு போலீஸ் ட்ரெஸ்ல மிடுக்கா வந்துட்டு போய்டுறார். வில்லனா அனுராக் காஷ்யாப். முகத்துல ஒரு குரூரம். சைக்கோத்தனம்.
அத்தனை பேரை தூக்கிப்போட்டு மிதிச்சாலும் விஜய் சேதுபதி மூஞ்சில தெரியுற அந்த கோபம் அந்த fight சீன்ல மேல ஒரு நம்பகத்தன்மையை கொடுக்குது. சொல்லப்போனா இயல்பான fight சீன் அமைச்சு கொடுத்திருக்குற அனல் அரசு டீமுக்கு வாழ்த்துக்கள். படத்தோட உயிர் நாடி இந்த சண்டை காட்சிகள். ஆனா இவ்ளோ வயலன்ஸ் வேணுமா. ஒரு அப்பாவா இருந்த இது இருக்கும்தானேனு கன்வின்ஸ் பண்ணிடுறார். க்ளைமேக்ஸ் ட்விஸ்ட், தி பெஸ்ட்.
இருபது கோடி தான் பட்ஜட். இப்போ வரைக்கும் 110 கோடி வசூல். 500% ப்ராபிட். இந்த 600 கோடில படம் எடுத்துட்டு அஞ்சு நாளைக்கு உலகம் முழுக்க புக்கிங் ஓப்பன் பண்ணி படம் எப்படி இருக்குதுன்னு தெரியறதுக்குள்ள சினிமா பாக்குறவன் கிட்ட காசை ஏமாத்தி வசூல் பண்ணி மூனாவதே நாளே வெற்றி விழா கொண்டாடுற பிரம்மாண்ட இயக்குனர்ஸ் நித்திலம் கிட்ட ஒரு....
வாழ்துத்துக்கள் மற்றும் நன்றி நித்திலன் சார். அப்போ குரங்கு பொம்மை. இப்போ மஹாராஜா. இன்னும் பிராமத்தப்படுத்துங்க. நாங்க waiting.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக