கல்யாணம் ஆன கையோட அடுத்த நாளே கூச்சமில்லாம கேப்பாங்க, 'என்ன ஏதும் விசேஷம் உண்டா?' அப்டின்னு. சிட்டி சைடாவது கொஞ்சம் நஞ்சம் டீசென்சி மெயின்டெய்ன் பண்றாங்க. ஆனா கிராமத்து பக்கம் அப்படில்ல. ஜாடை மாடையா பேசுறது, பிரச்சினை யாருகிட்ட இருக்குன்னு தெரியாம பொண்ணை மட்டும் மலடினு பட்டம் கட்டுறது, இன்னும் நிறைய.
குழந்தைப் பேறு இல்லாததனால கரிச்சி கொட்டுற மாமியார், இவன் ஆம்பளையே கிடையாதுன்னு ஊருல உரண்டை இழுக்கிறது, நம்ம பக்கம் பிரச்சினைனு தெரிஞ்சிடுமோன்னு ஆஸ்பத்திரி போகவே தயங்கிற மனுஷங்க அப்டின்னு இந்த ஒரு பிரச்சினையை மட்டும் முழுக்க முழுக்க கிராமத்து கண்ணோட்டத்துல உணமைக்கு பக்கத்துல அலசுற படம் தான் 'வெப்பம் குளிர் மழை'.
மனைவி கர்ப்பம் ஆகிட்டானு தெரிஞ்ச அந்த ஒரு செகண்ட், மீசையை முறுக்கி தொடையை தட்டிற ஹீரோ, அதுதான் ஆண்மைனு நினைக்கிற பல ஆண்களை அனாயசமா பிரதிபலிக்கிறார். IVF மருத்துவத்தை பசுமாட்டுக்கு சினைக்கு ஊசி போடறதொட ஒப்பிட்டு பார்த்தது தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுசு. சுபம்னு படம் முடிஞ்சது மாதிரி ஆண்களோட மனசு மாறினா சுகம் தான். எம்.எஸ். பாஸ்கர் செய்யும் 'குசு'ம்பு வேலைகள் அசல் கிராமத்து நையாண்டி.
சமூக உளவியல் பிரச்சினையை அலசி தீர்வு சொன்ன குழுவிற்கு வாழ்த்துக்கள்
ஆஹா OTT தளம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக