செவ்வாய், செப்டம்பர் 24, 2024

PT sir

 PT Sir

ஆனா பாருங்க இந்த சம்மர்ல எந்த ஒரு பெரிய படமும் வரல. வரண்ட வானிலை மாதிரி இது ஒரு வரண்ட சம்மர். ஹிப்ஹாப் ஆதி படத்த்துக்கு தியேட்டர்ல போய் பார்த்த சம்பவம் நம்ம stdலேயே இருக்கக்கூடாதுனு ஒரு வரட்டு பிடிவாதம். பசங்க கேட்டுக்கிட்டதனால வேற வழியே இல்லாம போயிட்டு வரலாம்னு முடிவு பண்ண என்னை, ஆதியும் கார்த்திக்கும் சேந்து செவுள்ளேயே ரெண்டு விட்ட மாதிரி ஒரு படம். படம் முடியும் போது தியேட்டர்ல அவ்ளோ அப்ளாஸ். ரொம்ப ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு செம மூவி.
படத்தோட பேரை பாத்து இது என்னமோ PT வாத்தியார் அப்புறம் ஸ்கூல் பசங்க சம்பந்தப்பட்ட ஒரு படம்னு நினைச்சி தான் போனேன். அதே மாதிரி ஸ்போர்ட்ஸ் டே நடத்தனும் நடத்தக்கூடாதுனு பஞ்சாயத்து. ஆனா இருபதாவது நிமிஷத்துலேந்து படம் வேற ட்ராக்ல போக ஆரம்பிக்குது.
ஆதி PT வாத்தியாரா வராரு. ஸ்கூல்ல பசங்க ஸ்ட்ரெஸ்ஸா இருக்குற காரணத்துனால 'magic wall' அப்டினு ஒரு சுவத்துல எழுதி அதுல பசங்க தனக்கு விருப்பப்பட்டதை கஷ்டத்தை ஆசையை எழுத வைக்கிறார். கூடவே வேலை செய்யுற காஷ்மீராவை காதலிச்சு கை பிடிக்கிற நேரத்துல ஆதியோட எதிர்த்த வீட்டுல இருக்குற அனிகா தற்கொலை பண்ணி இறந்து போயிடுறாங்க. அதை விசாரிக்க போற ஆதி அந்த ஊர்லேயே கல்வித் தந்தைனு பேரு எடுத்த தியாகராஜனை பகைச்சுக்கிறார். அனிகாவோட மரணத்துக்கு காரணமானவங்களுக்கு தண்டனை கிடைச்சுதா அப்டிங்கறதை யூகிக்கவே முடியாத ஒரு பரபர க்ளைமேக்ஸ் மூலமா கொடுத்திருக்கார் இயக்குனர் கார்த்திக்.
ஒரு பெரிய பட்டாளமே நடிச்சிருக்கு. பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி, இளவரசு, பிரபு, முனீஸ்காந்த், பாக்யராஜ், பாண்டியராஜன் அப்டினு பல ஆர்ட்டிஸ்ட் இருந்தாலும் படம் எடுத்துருக்குற கதை காரணமா சீரிஸ் டோன்லேயே டிராவல் ஆகுது. ஜாதகம் வச்சி ஜோசியம் பாக்குற ஸீன் மட்டும் குபீர் ரகம். பல இடங்கள்ல உதாரணமா வாட்ச்மேனை வட்டிக்காரன் அடிக்கிற சீன்ல ஆதி சும்மா நிற்பார். அப்போ திடீர்னு சேர்மேன் கூப்பிடுறாருனு சீன் மாறிடும். அதேமாதிரி, மேஜிக் வால்ல காஷ்மீரா சீரிஸானா ரெண்டு விஷயத்தை காமிக்கும்போது 'ராகுல் லவ்ஸ் வானதி' அப்டினு ஒரு ஜாலியான சீனா மாறிடும். இந்த மாதிரி டைவர்ட் பண்ற சீன் பல படங்கள்ல பாத்திருந்தாலும் அடிக்கடி பாக்குறது இதான் முதல் தடவை. நல்லாவும் இருந்துச்சு.
மூணு பாட்டு ஆதியோட குரல்ல கேக்குற மாதிரி இருக்குது. அது மட்டும் தான் படத்துல கொஞ்சம் சகிச்சிக்க வேண்டிய இடம். கூடவே மிகை நடிப்பு விநோதினியும்.
ஸ்டண்ட் சீன்ல புரட்டி எடுத்த ஆதி மத்த சீன்ல எல்லாம் பயங்கரமா அண்டர் பிளே பண்ணி மத்தவங்களுக்கு நடிக்க ஸ்பேஸ் கொடுத்திருக்கார். தியாகராஜன், பார்வையிலேயே தான் ஒரு வில்லன் அப்டிங்கறதை நிரூபிச்சிருக்கார். நிறைய கேரக்டர் இருந்தாலும் பல பேர் திடீர்னு காணாமப் போயிடறாங்க. உதாரணத்துக்கு பாண்டியராஜன், முனிறீஸ்காந்த்.



தான் பைய்யன் எந்த வம்புலயும் மாட்டிக்க கூடாதுனு நினைக்கிற தேவதர்ஷினி, ஆதியை பேக் பண்ணி ஊருக்கு அனுப்புற நேரத்துல வர டைலாக்ஸ்லாம் சாட்டையடி பார் ஜனங்கள்ஸ். கோர்ட் சீன்லாம் லைட்டா போர் அடிக்கிற மாதிரி இருந்தாலும் க்ளைமேக்ஸ் வேற ரகம். அதே மாதிரி க்ளைமேக்ஸ்ல பக்கம் பக்கமா ஆதி பேசப்போறார்னு பாத்தா ரத்தினச்சுருக்கமா ரெண்டு லைன்ல முடிச்சார்.
கொஞ்சம் கூட கூச்சப்படாம கத்திரி போட்ட எடிட்டர் பிரசன்னாவுக்கு நன்றியும் வாழ்த்தும். சொல்லப்போனா படத்தோட வெற்றிக்கு முக்கியமா எடிட்டர் பிரசன்னா ஒரு பெரிய காரணம். பொண்ணுங்க வெளில சொல்ல முடியாம அனுபவிக்கிற பிரச்சினையை களமா எடுத்து எல்லாருக்கும் மனசளவுல தைரியம் கொடுக்கிற அளவுக்கு ஒரு சினிமாவை எடுத்திருக்கிற கார்த்திக் தன்னை ஒரு சிறந்த ரைட்டரா ப்ரூவ் பண்ணிருக்கார்.
ஒரு படத்தில ஒரு தடவை கூஸ் பம்ப் வரலாம். ஆனா இந்த PT sir படத்துல பல இடங்கள்ல கூஸ் பம்ப்ஸ் நிச்சையம். ரொம்ப நாளைக்கு அப்புறம்.ஒரு கம்ப்ளீட் மூவி பார்த்த திருப்தி. மிஸ் பண்ணாம குழந்தைங்களோட தாராளமா பாக்கலாம். wow what a மூவி. தி பெஸ்ட் மூவி. 10/10

கருத்துகள் இல்லை: