72 வயசுனுல்லாம் சொல்லவே முடியாது. அப்டி ஒரு கரிஷ்மா. படம் முழுக்க ஆக்ஷன் தான். ரத்தம் தெறிக்கற அளவுக்கு இல்லை. ஆனா அடிதடி. ஜெயராம், மோகன்லால் கம்பேர் பண்ணும்போது மம்மூட்டியோட பிட்னஸ் லெவல் வேற ரேஞ்ச் தான். இத்தனைக்கும் பத்து வயசு ஜாஸ்தி. இப்போகூட லேண்ட்லைனை காதுல வச்சி 'ஜாதி மல்லி பூச்சரமே'னு பாடுற அளவுக்கு மெயின்டைன் பன்றார். இன்ஸபிரேஷன்.
மம்மூக்காவோட அம்மா பண்ற ரவுசும் அதகளம் தான். சும்மா உதார் விடுற வில்லனா இல்லாம மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிஞ்ச வில்லனா போட்ருக்குறது சுபம். நாயகியா அஞ்சனா. துருவம் பதினாறுல நடிச்சவங்க. கார்த்திக் நரேனோட சீனியர். நெட்வொர்க்கிங் ரொம்ப முக்கியம் பிகிலு.
மம்மூக்காவோட காமெடி செமையா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. ஒரு நல்ல கமெர்ஷியல் மூவி. நான் முன்னமே ஒரு கட்டுரைல சொல்லிருப்பேன். உரிமை கோரப்படாம இருக்குற பேங்க் அக்கௌண்ட்ஸ்ல தோராயமா 60 ஆயிரம் கோடி இருக்கு. இந்த அனாமத்தான பணத்தை அபேஸ் பண்ற கும்பல்ட்ட எதேச்சையா மோதுறார் மம்மூக்கா. எதேச்சையான அவ்வளவு எதேச்சையா. அந்த ஸ்டோரி லைன் எல்லாமே எங்கேஜிங்.
படத்தோட முதல் கொலை காட்சியை மட்டும் ஸ்கிப் பண்ணிட்டா இது பக்காவான ஒரு பேமிலி ஆக்ஷன் என்டர்டைனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக