செவ்வாய், செப்டம்பர் 24, 2024

சர்பத் 2021


இந்த அடி தடி, வன்முறை, இரத்தம் தெறிக்கிறது, அதீத சோகம், பொருந்தாக் காதல், மனப்பிறழ்வு நாயகர்கள், ஹாரர், படபடப்பு, பேய் இந்த மாதிரிலாம் ஏதும் இல்லாம படம் பார்க்கவே முடியலை. வித்தியாசமா ஏதாவது செய்யனும்னு சொல்லிட்டு கோணங்கித்தனம் பண்றது தான் வழக்கமாயிடுச்சு.



இந்த கிறுக்குத்தனம் ஏதும் இல்லாம சிம்பிளா குழப்பம் இல்லாம ஒரு படம். அதான் சர்பத். கதிர் விவேக் பிரசன்னா. வீட்டுக்குள்ள அண்ணன் தம்பி சண்டை. அப்புறம் லவ், காலேஜ், பஸ், மேரேஜ், காமெடிக்கு சூரி. அம்மா சென்டிமென்ட். எமோஷனல் சீன்ஸ். அப்படியே நேர்கோட்டுல ஒரு படம். ஜாலியா. இந்த ரொமான்டிக் காமெடி ஜானர்னு சொல்வாங்கள்ள, அந்த மாதிரி ஒரு மூவி. சில்லரையை சிதற விடாம குடும்பமா பாக்கலாம். நெட்பிளிக்ஸ்ல இருக்கு.

கருத்துகள் இல்லை: