முதல் பாகத்துக்கும் இரண்டாவது பாகத்துக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு கதை. Spin-off எழுதுறது சாதாரண விஷயம் இல்லை. அதுவும் twins கேரக்டர்லாம் கொண்டு வர்றதுக்கு தைரியம் வேணும். முதல் பாகத்தையும் ரெண்டாவதையும் நெருடல் இல்லாம கோர்த்த விதத்துல அஜய் ஜெயிக்கிறார். படத்தோட அம்பதாவது நிமிஷத்துல written and directed byனு தைரியமா போட்ருக்கார். வாழ்த்துக்கள்.
கிட்டத்தட்ட ரெண்டேகால் மணிநேரம் படம். ஒன்னு இல்லை ரெண்டு அருள்நிதி. மனுஷன் ஒதுங்கி நின்னு கதைக்கும் பிரியா பவானிக்கும் நல்ல ஸ்பேஸ் கொடுத்திருக்கார்.
அதேபோல அருள்நிதியோட டைமிங் வசனங்கள் பல இடங்கள்ள சிரிப்பை வரவழைக்குது. தியேட்டர் கிரவுட்ல நல்ல ஒர்க் அவுட் ஆயிருக்கு.
எழுதிருக்குற விதமும் எடுத்த விதமும் புதுசு. சில காட்சிகள் மெதுவாகவும் சில காட்சிகள் ரிபீட்டடாவும் வந்து பொறுமையை சோதிக்குது. யோசிக்காம கால் மணி நேரம் கத்திரி போட்டிருக்கலாம்.
விட்டேனா பார் அப்படிங்கற மாதிரி மூணாவது பார்டுக்கு நல்ல லீட் கொடுத்திருக்கார். அதோட knot நல்லாருக்குது.
படம் முழுக்க பிரியா பவானி வந்தாலும் அந்த பொண்ணை சிரிக்கவே விடாம முக்கால் வாசி நேரம் அழுகையும் படபடப்புமாவே வச்சிருக்காங்க. சலிச்சிக்காம அவுகளும் நல்ல அழுதுறுக்காக.
ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை சீட் நுனில உக்கார வைக்கிறது bgm தான். அப்படியே கொட்டிருக்கார். படத்தோட ஹீரோ சந்தேகமே இல்லாம சாம் சி எஸ் தான்
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக