கதிருக்கு
அப்புறம் தமிழ் சினிமா காதல் கதை எடுப்பதை மறந்துவிட்டது. அல்லது தற்கால காதலை
புரிந்துகொள்ள முடியாமல் திணறுகிறது என்று சொல்லாம். நாம் உருகி உருகி பார்த்த
'நீ வருவாய் என',
'சொல்லாமலே', 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' போன்ற படங்கள் இன்றைய இளைஞர்களிடம்
கனெக்ட் ஆகுமா என்றே தெரியவில்லை. ஏன் கனெக்ட் ஆக வேண்டும் என்பதும் மற்றொரு
கேள்வி. ஆனாலும் திக்கித்திணறி இங்கொன்றும் அங்கொன்றுமாக வரும் காதல்
படங்களிலொன்று தான் சபாநாயகன்.
படம் முழுக்க அசோக் செல்வன் தான் தெரிகிறார். அருமையான மூன்று லவ் ஸ்டோரிஸ். இறுதியில் உறுத்தாமல் ஒரு ட்விஸ்ட். அவ்வளவுதான் படம். இரண்டு மணி நேரமும் அசோக் ஏதாவது ஒரு பெண்ணிடம் வழிந்து கொண்டே இருக்கிறார். ஆகச்சிறந்த வழியல். செயற்கைத்தனம் இல்லாத ஒரு வழியல். தமிழ் சினிமா சமீப காலங்களில் மறந்திருந்த அந்த வழியல் காட்சிகளுக்கு மீண்டும் உயிரோட்டம் கொடுத்த நாயகன் நம் அசோக் செல்வன் என்றால் மிகையில்லை. மேகா ஆகாஷுடன் சேர்ந்து மூன்று கதாநாயகிகள். ஜாலியான திரைக்கதை. இரைச்சலில்லாத இசைக்கோர்ப்பு. மீண்டும் ஒரு காதல் படம்.
அழகான ஒரு இல்லை பல லவ் ஸ்டோரீஸ். குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்து வீக்கெண்டை கழிப்பதற்கான ஒரு பெர்பெக்ட் சினிமா இந்த சபாநாயகன்.
Ashok Selvan #sabanayagan #sabanayaganmovie #ashokselvan
#cskarthikeyan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக