சாப்பாடு சம்பந்தப்பட்டது இல்லை. ஒரு படம். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் நடித்த படம். பட்ஜெட் படம் தான் என்றாலும் இறுதி வரை சுவாரசியம் குறையவில்லை. மூன்றே மூன்று லொகேஷன். மொட்டை மாடி, வீட்டு வாசல் மற்றும் வீட்டுக்கு உள்ளே உள்ள ஹால். பத்து மணிக்கு மேலும் மொட்டை மாடியில் குடும்பமாய் கூடி டம் சராட்ஸ் விளையாட, அதை பப்ளிக் நியூசென்ஸ் என்று யாரோ போலீசில் கம்ப்ளெயிண்ட் செய்ய, போலீஸ் விசாரிக்கிறது. குடித்து விட்டா ரகளை செய்கிறோம் என்று குடும்பம் எகிற போலீசுக்கும் ஹரீஷ் குடும்பத்திற்கும் உரசல் ஏற்படுகிறது. இதே குழப்பத்தில் மறு நாள் காலை ஹரீஷ் எந்திரித்து பால் வாங்கி வர செல்ல, மொபைலை தட்டி பறிக்க வந்தவனிடம் தள்ளு முள்ளாகி கீழே விழுந்து இறந்து விட்டான் என்று ஷீலா பதறுகிறார். பிணத்தை அவர்கள் ரூமில் ஒளித்து வைத்து போலீசுடன் மல்லு கட்டும் சடுகுடு கபடி ஆட்டமே இந்தே நூடுல்ஸ். பேருக்கு ஏற்றார் போல் அடுத்தடுத்து சிக்கல் சடை பின்னி இவர்களிடம் விளையாட 100 நிமிடங்கள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.
லட்சங்களில் தான் பட்ஜெட் இருக்கும் என்பது என் கணிப்பு. போலீசாக நடித்திருக்கும் இயக்குனர் மதன்குமார் அளேவடுத்தது போன்று இன்ஸ் வேடத்தில் அபாரம். இதே போன்று படங்களை தமிழ் பேசும் நல்லுலகம் தாராளமாய் வரவேற்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக