இரண்டு கேட்டகிரியில் பிரித்துக் கொள்வோம். ஒன்று மத்தியில். மற்றொன்று தமிழ்நாட்டில்
மத்தியில், இந்த 2024 மட்டுமல்ல, அடுத்த இரண்டு தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெல்லும். அதாவது பா.ஜ.க. தான். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ. இதுதான் நிஜம். உண்மை நிலவரம். அந்த அளவுக்கு அடித்தளம் இருக்கிறது. அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஒரே கோட்பாடு ஹிந்துத்துவா அரசியல் மட்டுமே. தமிழ்நாட்டை தாண்டிவிட்டாலே எங்கும் மோடி அலை தான். தேர்தலில் நிற்கு, மற்றவர்களை பாகிஸ்தான் உளவாளி என்று சொல்லும் அளவுக்கு வடக்கில் பொது ஜனம் மத்தியில் ஊறி போய் இருக்கிறது. அந்த அளவுக்கு மோடி அலை. என்ன செய்திருக்கிறார், செய்யவில்லை என்ற பஞ்சாயத்துக்குள்ளேயே போக விரும்பவில்லை. தாமரை தான்.
சரி, எவ்வளவு ஜெயிக்கும்.
2014 தேர்தலில் NDA கூட்டணி 336, UPA கூட்டணி 60.
2014 கட்சி வாரியாகப் பார்த்தால் பிஜேபி 282, காங்கிரஸ் 44.
2019 தேர்தலில் NDA கூட்டணி 353, UPA கூட்டணி 93.
2019 கட்சி வாரியாகப் பார்த்தால் பிஜேபி 303, காங்கிரஸ் 52.
இந்த முறை எனது கணிப்பு
2024 தேர்தலில் NDA கூட்டணி 400+, UPA கூட்டணி 50+.
2024 கட்சி வாரியாகப் பார்த்தால் பிஜேபி ~335, காங்கிரஸ் ~45.
தமிழ்நாட்டில், லோக்சபா தேர்தல் வெற்றியை பை எலெக்ஷன் போல் அந்த நேரத்தில் உள்ள ஆளுங்கட்சியின் ஆட்சியே தீர்மானிக்கும். தற்போது தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக DMK. அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டது போல் மாற்றி மாற்றி DMK மற்றும் ADMK தமிழ்நாட்டில் வெற்றிக்கொடி நாட்டிருக்கிறார்கள். அதே போல், மக்கள் தமிழநாட்டில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றால் அது லோக்சபா தேர்தல் முடிவில் தெரிந்துவிடும் (2004 மற்றும் 2019 போல்). 2014 தேர்தலில் மோடியா லேடியா என்று சொல்லி அடித்து 37 சீட் வென்ற ஜெவை மறந்துவிட முடியாது.
இந்த முறை 2024 தேர்தலில் வெல்லப்போவது சந்தேகமே இல்லாமல் DMK தான். ஜெவை போன்ற ஸ்திரமான தலைமை இல்லாத ஒரு எதிர்க்கட்சி, DMK வின் வெற்றியை உறுதி செய்யம். அதே போல் இந்த முறை DMK எதிர்கொள்ளப்போகும் பிரதான எதிர்க்கட்சி ADMK இல்லை. பிஜேபியாகத்தான் இருக்கும் என்பது தெரிய வருகிறது. தேசபக்தி, ராமர் கோவில் போன்ற பல யுக்திகள் பிஜேபிக்கு கைகொடுக்கப் போகிறது.
சரி, எவ்வளவு ஜெயிக்கும்.
2014 தேர்தலில் ADMK கூட்டணி 37, NDA கூட்டணி 2, DMK கூட்டணி 0.
2014 கட்சி வாரியாகப் பார்த்தால் ADMK 37, BJP 1, PMK 1.
2019 தேர்தலில் DMK கூட்டணி 38, NDA கூட்டணி 1.
2019 கட்சி வாரியாகப் பார்த்தால் DMK 24, காங்கிரஸ் 8, இதர கட்சிகள் 6, ADMK 1.
இந்த முறை எனது கணிப்பு
2024 தேர்தலில் DMK கூட்டணி 35+, BJP கூட்டணி 4+.
2024 கட்சி வாரியாகப் பார்த்தால் DMK ~26, காங்கிரஸ் ~3, இதர கட்சிகள் 6, ADMK ~1, BJP 3+.
அதாவது, 2014இல் ஒரு சீட் கைப்பற்றிய BJP, இந்த முறை மூன்று சீட்டாவது கைப்பற்றும் என்பது போல் தெரிகிறது. இது அடுத்தடுத்து தேர்தலில் அதிகமாகலாம். லாம் என்ன. அதிகமாகத்தான் போகிறது. காரணம் உங்களுக்கு எனக்குத் தெரிந்த அது ஒன்றே தான்.
யோசித்துப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக