என்னடா போகி முடிஞ்சி பொங்கல் வச்சி பானையை கழுவி பரண்ல ஏத்துனப்பறம் விமர்சனம் வருதேன்னு பாக்குறீங்களா? இப்போ தான் டைம் கடிச்சிது.
ரொம்ப பிடிச்ச பிரமிக்க வச்ச விஷயம் VFX தான். அது க்ராபிக்ஸ்னே சொல்ற மாதிரி இல்ல. அப்டியே நிஜத்துல பாக்குற மாதிரி தத்ரூபமா இருந்துச்சி. (Climax ல சின்ன பிசிறு). சித்தா சித்தார்த் குரல்ல பல பேர் நல்லாருக்குனு சொல்றாங்க. பட் எனக்கு பிடிக்கல. ஒரு மாதிரி matrured ஆன வாய்ஸ். கொஞ்சம் காமிக்கலா ஒரு வாய்ஸ் போட்ருந்துருக்கலாம். கம்ப்யுட்டர்லயே சின்தஸைஸ் பண்ணி. கீச் கீச்னு. குழந்தைங்களோட இன்னும் நல்லா கனெக்ட் ஆகியிருக்கும்.
சிவகார்த்திகேயன் எல்லா ஏரியாலேயும் பிச்சி உதறிட்டார். டான்ஸ், சண்டை, காமெடி எல்லாமே. பல இடங்கள்ல தலைவர் ரஜினியோட சாயல் தெரியுது. sk ஒரு பேட்டில சொல்லிருப்பார். என்னோட படத்துக்கு பேமிலி ஆடியன்ஸ் அப்புறம் குழந்தைங்க வராங்க. அதுனால லிப் லாக் பண்ண மாட்டேன் அப்டினு சொல்லிருப்பார். அதுமட்டும் இல்லாம படம் பக்கா க்ளீனா எடுத்திருக்காங்க. கடிவாளம் போட்ட மாதிரி கதைக்கு என்ன தேவையோ அது மட்டும் தான். முக்கியமா ஏலியனுக்கு ஸ்பேஸ் கொடுத்து நடிச்சிருக்கார் sk . வளர்ந்து வர நேரத்துல இது முதிர்ச்சியான ஒரு மூவ்.
ஹீரோயினா ரகுல். அந்த இடத்தே ரொப்பிறதுக்குனே போட்ட மாதிரி இருக்குது. ஒரு சீனும் மனசுல பதியல. ஆனா திறக்காத காட்டுக்குளே இஷா ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் ஒப்பிட்டளவுல ஜாஸ்தி. இந்த கம் பேக்குக்கு நல்லாவே ஜஸ்டிபய் பண்ணிருக்காங்க.
கருணாகரன் சீன் ஸ்டார்ட் ஆகும்போது தான் காமெடியும் ஒர்க் அவுட் ஆகியிருக்கு. யோகி பாபு, கருணா, sk காமெடி கூட்டம் நல்லாவே ஒர்க் அவுட் ஆகியிருக்கு. கோதண்டம் வாயை அடைச்சிட்டாங்க. விட்டுருந்தா யோகியை தூக்கி சாப்பிட்டுருப்பாரு. பாலிடிக்ஸ் போல.
லாஜிக் கிலோ என்ன விலை அப்படிங்கற ரேஞ்சுல தான் டீல் பன்னிருக்காங்க. ஸ்பேஸ் ஷிப் வருது போகுது. நியூஸ்ல காமிக்கல, ஒரு போலீஸ் தேடலை. ஓகே. மன்னிச்சு.
ரஹ்மான் போட்டுருக்குற சில bgm ல நெஞ்சே அதிருது. ஏலியனுக்குனு ஒரு தனி ட்யூன் போட்ருக்கார். ஆனா bgm எதுவும் மனசுல நிக்கல. பாட்டு கேக்கவே வேணாம். அதுவும் intro சாங்லாம் இஷ்டத்துக்கு பன்னிருக்காப்புல. ஏறுது இறங்குது டமால் டுமீல்னுது அந்த ட்யூனை கேட்டுட்டே ஏனா தானோனு நம்ம sk ஆடிருப்பாரு. என்னடா intro அப்படிங்கற மாதிரி ஒரு சாங். மத்த பாட்டும் அது மாதிரி தான். ஒரு வார்த்தையும் புரியல. பீட்ஸ் மட்டும் டம்மு டும்முனு. heavy disappointment.
நூல் புடிச்ச மாதிரி கதையை மட்டுமே சொல்லிட்டு போற ரவிக்குமார் இன்னும் கொஞ்சம் கேம் ஆடிருக்கலாம். தமிழ் சினிமா வரலாற்றுலேயே இந்த மாதிரி ஒரு ஜானர் வந்தது இல்லை. பக்கா ஆக்டிங் மற்றும் டெக்கினிகள் டீம். இருந்தும். மிஸ் பண்ணிட்டாரு. படத்துல ரொம்ப கலகல காட்சினா அந்த வாட்டர் டேங்க் மேல டாட்டூ கூட நடக்குற இன்ட்ரோ சீன் தான். அதுக்கப்புறம் அந்த கலகல மிஸ்ஸிங். இன்னும் அது மாதிரி நிறைய சீன்ஸ் ஜாலியா வச்சிருந்தாலே படம் இன்னும் சூப்பரா இருந்துருக்கலா.
வெள்ளைப் பூக்கள் படத்துல விவேக் சொல்லிருப்பாரு. பாரின்ல எல்லாமே இருந்தும் ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதுன்னு. அது மாதிரி எல்லாமே இருந்தும் ஏதோ ஒன்னு மிஸ் ஆன மாதிரி இதுல ஒரு பீலிங்.
பட் குழந்தைங்களோட ஜாலியா பாக்கலாம். க்ளீன் பேமிலி என்டர்டெயினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக