இன்வெஸ்டிகேஷன் ஜானர், த்ரில்லர் ஜானர், பேமிலி டிராமா அல்லது சமூக அக்கறையுள்ள ஒரு படம் அப்டினு இந்த படத்தை எந்த ஜானர்ல பிக்ஸ் பண்றதுன்னே தெரில. ஆனா எல்லா மேல சொன்ன எல்லா ஜானர்லயும் திருப்தி படுத்தியிருக்கு இந்த மதிமாறன்.
எம்.எஸ்.பாஸ்கருக்கு ரெட்டை பசங்க பொறக்குறாங்க. ஒன்னு இவனா. இன்னொன்னு வெங்கட் செங்குட்டுவன். இவானா நார்மலா வளர செங்குட்டுவன் குள்ளமா வளர்ராரு. அவரை குள்ளன் குள்ளன்னு ஊரே கேலி பண்ணுது. அதை எல்லாத்தையும் அப்பாவோட அன்பு மற்றும் அக்கா இவனாவோட அன்பால சமாளிச்சு படிச்சு பாஸ் ஆகுறாரு. காலேஜ் போன சமயத்துல அவங்க அக்கா வீட்டை விட்டு ஓடிப்போயிடுது. அந்த துக்கத்துல அப்பா அம்மா ரெண்டு பேரும் இறந்துடறாங்க. சிட்டிக்கு அவங்க அக்காவை தேடி வர்றவரு, எதேச்சையா ஒரு கொலை கேஸ்ல ஈடுபாடு காமிக்கிற மாதிரியான ஒரு சந்தர்ப்ப சூழல். அதையும் தன்னோட அறிவால கண்டுபிடிச்சிறாரு. குள்ளன்னு சொல்லி இவனை ஒதுக்குன போலீசே ஆச்சர்யப்படுது. கடைசியா ஒரு மெசேஜோட படம் முடிது.
படம் முழுக்க குள்ளமா நடிச்சிருக்குற வெங்கட் தான் முழுக்க முழுக்க வரார். அசத்தலான ஒரு டேன்ஸ் பண்ணிருக்கார். வழக்கம் போல ஒரு சென்டிமென்ட் சீன்ல நம்ம பட்டாபி பிச்சு உதறிடுறார், அதுக்காவே மூணு நிமிஷம் ஸீன் வச்சிருக்காங்க. மாற்றுத் திறனாளிகளுக்கு சப்போர்ட்டா வச்சிருக்கிற பல வசனங்கள் அவங்க பார்வையில நம்மள உலகத்தை கவனிக்க வைக்குது. கேள்வி கேக்குது. உதாரணமா 'ஊக்கப்படுத்துறேங்குற பேர்ல எங்களை எதையாவது சாதிச்சிடுவீங்க அப்டினு நீங்க சொல்றீங்க. ஏன்? நாங்க சாதிச்சா மட்டும் தான் எங்களை சாதரண மனுஷனா கூட ஏத்துக்குவீங்களா?', 'ஊரு உலகம் நம்மள கேலி பண்ணிட்டே தான் இருக்கும் அவங்க வாய் அப்படி. நம்ம நம்மளோட காதை மூடிக்கலாம்ல' போன்ற வசனங்கள்ல மந்த்ரா வீரபாண்டியன் க்ளாப்ஸ் அள்ளிடுறாரு. நெல்லைக்காரர். Prime & ஆஹா ott.
சமூக அக்கறையுள்ள ஒரு படம். வாழ்த்துக்கள் சகோதரர் Mantra Veerapandian.
Ivana Alawi Venkat Senguttuvan Mantra Veerapandian
#Mathimaran #MSBaskar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக