ஸ்ட்ரிக்ட்லி ஃபார் அடல்ட்ஸ்
படம் ரிலீஸ் ஆன நாள்லே இருந்தே படத்தோட டோன் ஒரு வகையா misogyny டைப்ல இருந்ததா பூரா பக்கமும் ஏச்சு. அர்ஜுன் ரெட்டி படத்தோட கம்பேர் பண்ணும்போது இது அவ்ளோ மோசம் இல்ல. சொல்லப்போனா அர்ஜுன் ரெட்டி படத்துல ப்ரோடோகோனிஸ்ட், பெண்களை எவ்ளோ எள்ளலா டீல் பன்னிருப்பாருனு பாத்துருப்போம். அனிமல் படத்துல ரன்பிர் கபூர் அந்த மாதிரி எந்த பெண்ணையும் கேவலமா நடத்துல. ரஷ்மிகா மேல பொசஸிவா இருக்கார். அத விட அவங்க அப்பா மேல வெறித்தனமான அன்பை வச்சிருக்கார். சின்ன வயசுலேந்து அப்பாவோட அன்புக்காக ஏங்குற கேரக்டர். ஸ்வஸ்திக் அப்படிங்கற பெரிய சாம்ராஜ்யத்தை கட்டனுங்கற முனைப்புல அவர் ரன்பிரோட அன்பை கண்டுக்கல. அந்த ஏக்கம் தேடுதலா மாறி கடைசி வரைக்கும் அதுக்காக ரன்பீரை ஏங்க வச்சிடுது. அப்பாவுக்காக எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போற கேரக்டர் தான் ரன்பிர். ஒரு கட்டத்துல அப்பாவை யாரோ கொல்ல வர, அது யாருனு தெரிஞ்சிக்கிறதுக்காக தேடுதல் வேட்டையை ஆரம்பிச்சு கரகரனு கழுத்தை அறுத்து கொல்றது தான் கதை. படத்துல பெண்களை கேவலமா நடத்துறது பாபி தியோல் தான். அன்டோகனிஸ்ட.
பேசத்தயங்குற செய்ய யோசிக்கிற பல காட்சிகள் படத்துல ரொம்ப யதார்த்தமா பன்னிட்டு போயிட்டே இருக்காங்க. உதாரணமா, ரஷ்மிகா வீட்டுல ரன்பீரை ஏத்துக்கருத்துக்காக பேசிட்ருக்கும்போது வர லிப் லாக், ஜோயா கூட இன்டிமேட் ரிலேஷன் வச்சிட்டு ரன்பீர் திரும்ப வரும்போது ரஷ்மிகா கேக்குற கேள்விகள் இன்னும் நிறைய மொமெண்ட்ஸ் ரொம்ப கேசுவலா பண்ணிருக்காங்க. ரன்பீர் பத்து படத்துக்கான உழைப்பை இதுல கொட்டிருக்காரு. மூணு மணி நேரம் படத்துல முக்கால்வாசி நேரம் ரன்பீர் அட்ரினலின் ரஷிலேயே இருக்குறாரு. தங்கச்சி அக்கா மேல அவ்ளோ பாசம் வச்சிருக்குறார். ஆனா அவர் சொல்றதத்தான் யாரும் கேக்க மாட்டேங்குறாங்க. கடைசி வர அவரோட அன்பை வெளிப்படுத்திட்டே இருக்காரு. சுட்டுட்டு போயிட்டே இருக்காங்க. போலீஸ் பத்திலாம் கவலை இல்லை. சொல்லப்போனா லா அண்ட் ஆர்டரை பத்தி கவலைப்படாத அளவுக்கு ஒரு பெரிய கோடீஸ்வர பேமிலியோட கதை. படம் முழுக்க பணம் கொட்டி கிடக்குது. ப்ரோடோகோனிஸ்ட் பத்தி ஒரு தெளிவான கேரக்டரைசேஷன் பண்ணப்பட்ட படம். படம் முழுக்க ரன்பீர் தான்.
படத்துக்கான நெகட்டிவ் ரிவ்யூஸ் பத்தி டெரெக்டர் சந்தீப்ட்ட கேட்டப்போ 'ஜோக்கருங்க பேசுறத பத்தி எனக்கு கவலை இல்லை' அப்டினு லெப்ட் ஹெண்டுல டீல் பண்ணிட்டு போய்ட்டாரு. கெத்து.
ஸ்டைலிஷான மேக்கிங். எல்லாருக்கும் பிடிக்குமான்னு தெரில. ரொம்ப நாளுக்கப்புறம் பாத்த ஒரு மாஸ் ஆக்ஷன் மூவி. இதோட சீக்குவல் அனிமல் பார்க் அப்டினு ரெடியாய்ட்ருக்கு. அனிமல் படத்துல பாத்ததெல்லாம் டீசர் தான். இனிமேதான் ரியலா பாக்கப்போறீங்க அப்டினு சந்தீப் ரெட்டி வாங்கா சொல்லிருக்கார். தரமான சம்பவம் வெயிட்டிங்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக