ஆறு
எபிசோட்கள். ஒவ்வொன்றும் ஒரு தினுசு. ஆனால் காதல் மட்டுமே கரு.
முதல்
எபிசோட். - லால்குண்டா பொம்மைகள். ராஜூமுருகன் இயக்கியிருக்கிறார். படத்தில் வரும்
கட்டிடம் மற்றும் இடம் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் வரும் இசக்கி பரோட்டா கடையை ஞாபகப் படுத்துகிறது. ஒரு வேளை
அதுதானா. எந்த வித
குழப்பமும் இல்லாத லீனியரான ஒரு பீல் குட் கதை.
இரண்டாம்
எபிசோட் - இமைகள். பாலாஜி சக்திவேலின் இயக்கம். நிஜத்திற்கு சற்று தொலைவில் கதையைச் சொல்லியிருக்கிறார். பார்வைத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து
கொண்டிருக்கும் ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன்; அவர்கள் வாழ்க்கை பற்றியது கதை. இதுவும் லீனியரான
யதார்தத்துக்கு சற்று
மீறிய பீல் குட் கதை தான்.
மூன்றாம்
எபிசோட் - காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி. பைவ் ஸ்டார் கிருஷ்ணா
இயக்கம். இந்த ஆறு எபிசோடில் மிகவும் இளமைத் துள்ளலான கதை இதுதான். ரீத்து வர்மாவின் எனர்ஜடிக் பெர்பார்மன்ஸ்.
இசை. காட்சியமைப்பு. வாய்ஸ் ஓவர் (தீபா வெங்கட்) என எல்லாமே பிரமாதம். செம ஜாலியான
யதார்த்தமான சுய எள்ளலுடன் கூடிய ஒரு
பெர்ஃபக்ட் ரிபீட் வாட்ச் மூவி.
நான்காம்
எபிசோட் - மார்கழி. பாலாஜி தரணீதரன் எழுத்து. (ந.கொ.ப.கா ஞாபகம் இருக்கிறதா?).
ஒரு டெண்டர் ஏஜ் பெண். பெற்றோரின் பிரிவில்
டிப்ரஸ் ஆகிறாள். சர்ச் கொயரில் சேர்த்துவிடப்படுகிறாள். டியூஷன், சைக்கிள், பள்ளி விடுமுறை நாட்கள், இளம் சிறார்கள், coming of age, இளையராஜாவின் கட் இசை பாடல், BGM என ஒரு மாதிரியான நோஸ்டால்ஜிக் மூவி. டோன்ட் மிஸ் இட். காதில் இளையராஜாவின் இசை ரீங்காரம்
இட்டு கொண்டே இருக்கும்.
ஐந்தாம்
எபிசோட் - பறவை கூட்டில் வாழும் மான்கள்- பாரதிராஜாவின் இயக்கம். பிரதீப் குமார் (not
96) எழுத்து. EMA என்று சொல்லப்படுகிற மணத்தை தாண்டிய உறவில் சிக்கும் கிஷோர். மனைவியே
இருவருக்கும் இடையில் சமரசம் செய்து விட்டுக்கொடுத்து சென்று விடுகிறாள். கிஷோர்,
ரம்யா நம்பீசன் மற்றும் விஜயலக்ஷ்மி அகத்தியன்,
டெல்லி கணேஷ் என தேர்ந்த நடிப்பு. டெல்லி கணேஷ்
மட்டும் கோபப்படுகிறார். சம்பந்தப்பட்ட மற்ற மூவருமே மிகவும் கூலாக ஹேண்டில்
செயகிறார்கள். இரு குழந்தைகள் மற்றும் அன்பான மனைவி என எந்தவிதமான குறையும் இல்லாத
ஒரு குடும்பத்தை களைத்து விட்டு வேறொரு பெண்ணுடன் கிஷோர் பழகுவதற்கான ஒரே காரணம்
நாய் காதலா? அந்த கள்ளக் காதலை 'என் இனிய பொன் நிலாவே' பாடல்
மூலம் புனிதப்படுத்தும் வேலையை இயக்குனர் செவ்வென செய்கிறார். அதை பார்க்கும்
நமக்கு தான் கொஞ்சம் பதட்டம் ஏற்படுகிறது. கணவன் இன்னொரு பெண்ணை விரும்பும்
விஷயத்தை இவ்வளவு சாதாரணமாக கையாளும் பெண்ணை, படத்தை சற்று பதைபதைப்புடன் தான் கடந்தேன். எங்கே சென்று கொண்டிருக்கிறோம்
நாம்? பார்த்தாலே பரவசம் படத்தின் 2023
version இது என்றால் மிகையாகாது
ஆறாவது
எபிசோட் - நினைவோ ஒரு பறவை.பார்ப்பதற்கு ஒரு லீனியரான மூவி போல் தெரிந்தாலும் இணைய
உலகமே இந்த எபிசோடை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது. சாம்
என்ற காதலி. கே என்கிற காதலன். இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். ஒரு விபத்தில்
அடிபட்டு கே தனது நினைவுகள் முழுவதையும் இழந்து விடுகிறார். அவர் நினைவுகளை
மீட்டெடுக்கும் வேலை சாம் என்கிற அவரின் பழைய காதலியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணங்களையும் விவரிக்கும் சாம், 'நாம் ஏன் பிரிந்தோம்?' என்று
கே கேட்கும் கேள்விக்கு பதில் கூற மறுத்துவிடுகிறாள். கோபம் கொள்ளும் கே அவளிடம்
இருந்து விலகிச் செல்கிறான். பிறகு அவள் நினைவுகள் இன்றி வாழ முடியாது என்று
மீண்டும் அவளிடம் வந்து சேர்ந்து கொள்கிறான். இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா?
கே ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர். காணிக்கப்படும்
காட்சிகளில் எது நிஜம் எது பொய் எது ஸ்க்ரிப்ட் ஏன்? சொல்லப்போனால் கே ஸ்க்ரிப் ரைட்டரா அல்லது சாம் தான் ஸ்க்ரிப்ட்
எழுதுகிறாளா என ஏகப்பட்ட்ட குழப்பம். இந்த எபிசோடை ஆராய்ந்து இணையமே ஏகப்பட்ட
கதையை கூறுகிறது. நல்ல ஒரு உரையாடலை அதுவும் திரை மொழியைப் பற்றி திரையில்
விவாதம் தொடங்கியிருக்கிறது. yes. அதே
தான். welcome to தியாகராஜ குமாரராஜா மூவி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக