இன்று காலை இன்ஸ்டா ரீல்ஸில் ஒரு வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன். Wedding Event planners வீடியோ. ரீல்ஸ்க்கு என்று கொடுக்கப்பட்டிருக்கும் அந்த 90 வினாடிகளில் முதல் நாள் நடக்கும் மாப்பிளை அழைப்பு அல்லது நிச்சயதார்த்தம் மற்றும் அதனைச் சார்ந்த சில முக்கிய தருணங்கள், மறுநாள் மணமேடையில் தாலிகட்டுவது, அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், outdoor ஷூட் என அத்தனையையும் கவர் செய்திருக்கின்றனர். அதுவும் வீடியோ பார்த்தால் அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் என்பது போல் இருக்கிறது. எடிட்டிங், கலரிங், கேமரா angle, ஜூம் இன், ஏத்தாற் போல் ஒரு இளையராஜா அல்லது ரஹ்மான் சாங். இது மட்டுமல்ல. ஒரு food ரிவியூ ஆகட்டும், ஹோட்டல் ப்ரோமோஷன், பாடல் ரீமேக், காமெடி கன்டென்ட்ஸ், யோகா டிப்ஸ் என ஏகப்பட்ட ரீல்ஸ்கள். அத்தனையும் ஒரு முழு நீள சினிமாவில் காணப்படும் அளவுக்கு மெனெக்கடல்கள். குவாலிட்டி கன்டென்ட்ஸ்.
பாய்ண்ட் என்னவென்றால், டெக்னாலஜி வளர்ந்ததும் தான் வளர்ந்தது. அவ்வளவு வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. முன்பெல்லாம் ஒருவரிடம் இருக்கும் திறமை ஊரறியவேண்டுமென்றால் அதற்கு மேகசினோ அல்லது மேடையிலோ அல்லது சினிமாவையோ நாட வேண்டியிருந்தது. இப்பொழுது எல்லாமே கைக்குள் அடங்கிவிட்டது. சினிமாவில் காணும் பி.ஸி. ஸ்ரீராமையோ அல்லது உருகி பாடும் சித் ஸ்ரீராமையோ மட்டுமே சிலாகிக்க வேண்டும் என்பது இல்லை. ஊர் முழுவதும் பல திறமையான பாடகர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஆர்ட்டிஸ்ட், கதாசிரியர்கள் என விரவிக்கிடக்கின்றனர்.திறமை இருந்தால் அதை சரியான டூலுடன் வெளிப்படுத்தினால் வாய்ப்புகள் மடி மீது வந்து உட்கார்ந்து கொள்ளுகின்றன.
வெகு வெகு பாசிட்டிவான ஒரு சமுதாய மாற்றமாக இதை பார்க்க முடிகிறது. ஏன், நாம் வாழும் வாழ்வை கொண்டாடும் கொண்டாட்டம் என்று கூட சொல்லலாம். ஒரு சாரார் அல்லது ரெகமெண்ட் செய்ப்பவர்கள் மட்டுமே முன்னுக்கு வருவார்கள் அல்லது அவர்களது படைப்புகள் மட்டுமே வெகு ஜன மக்களால் ரசிக்க முடியும் என்பதைத்தாண்டி அனைவருமே அவர்களது படைப்பை, திறமையை வெளிக்காட்டி வாய்ப்புகளை தகவமைத்துக் கொள்ள முடியும் என்ற பொதுமைப்படுத்தப்பட்ட விஷயமாகவே இது புலப்படுகிறது.
இருமுனை கத்தியாக இருக்கும் இந்த வசதியை லாவகமாக கையாண்டு கொள்ளுங்கள்.
இளைஞர் சமுதாயத்துக்கு வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக