சமீபத்தில் எழுத்தாளர் ராஜ் கௌதமனை பற்றி வாசிக்க வாய்ப்பு
அமைந்தது. ஈர்த்த ஒரு விஷயம், இவருடைய
நூலான "தலித்
பார்வையில் தமிழ்ப் பண்பாடு" என்று
சங்க இலக்கியம் பற்றிய ஒரு மாற்று பார்வை கொண்ட நூல்.
என்ன பார்வை என்றால் 'மேல்தட்டு பெண்கள் கடவுளை அடைய எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களை காட்டிலும் விளிம்பு நிலை மக்கள் கடவுளை அடைய மேற்கொண்ட துன்பம் அதிகம்' என்பதாகும். உதாரணமாக காரைக்கால் அம்மையார் தலைகீழ் நடந்தது, நந்தனார் தீயில் சுடப்பட்டது, கண்ணப்பநாயனார் கண்களை பிய்த்து கொண்டது என ஏராளம். இதே புராணங்களில் தான், சம்பந்தருக்கு அம்மை பால் கொடுத்தது என்பது முரண்.
மாற்று பார்வைகள் எத்தனை எத்தனை சிந்தனைகளை வெளிக்கொணருகின்றன.
இதையேதான் தமிழ் சினிமாவிலும் வேறு ஒரு வகையில் பிரித்தாண்டிருக்கிறார்கள். எண்பது தொன்னூறுகளில் வந்த படங்களில் முக்கால்வாசி ஏன் முழுவதுமே வீட்டு வேலை, வயல் வேலை என்று விளிம்பு நிலை பெண்கள் மட்டுமே பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள். கற்பழிப்பு, முகம் சுழிக்க வைக்கும் விமர்சனம் என எது வேண்டுமானாலும் வரும். ஆனால் அதே படங்களில் வரும் உயர் மட்ட/முதலாளி குடும்பப் பெண்களை அதுபோல் சீண்டுவதோ, கண்ணியம் குறைவாக காண்பிப்பதோ கிடையாது. எஜமான், முத்து, முதல் மரியாதை, சந்திரமுகி, யூ செலக்டட் ரிஜெக்டட் காமெடி, ஏன் பொன்னியின் செல்வனில் பூங்குழலி vs நந்தினி இன்னும் பல படங்களில் இந்த நுண் அரசியலை காணலாம்.
இலக்கியத்திலேயே இடம் இல்லை. பின்பு எங்கு மனதில்...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக