கிராமங்களில் வளர்ச்சியிலேயே நாட்டின் வளர்ச்சி உள்ளது எனபது காந்தியின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதனை ஸ்திரப்படுத்தும் முனைப்பில் கொண்டுவரப்பட்ட ஊராட்சி அமைப்பு மற்றும் அதன் தலைவர்கள் எப்படி பொம்மை போல ஆதிக்க சக்திகளால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்ற தற்கால சமூகத்தின் சாட்சியாக நந்தன் திரைப்படம். ரிசர்வ் தொகுதியை எடுத்து களமாடிய விதம் கூரையில் நின்று உரக்க கூவியது போல் உள்ளது. அருமை. வாழ்த்துக்கள்.
இவ்வளவு பட்டவர்த்தனமாக ஆதிக்கச் சாதியை எள்ளி நகையாடி குற்றம்
சாற்றி ஒரு படம் வந்ததில்லை என்றே தோணுகிறது. ஒரு துணை கதாபாத்திரத்தின் பெயரை
படத்திற்கு பெயராக வைத்திருப்பது இதுவே முதல் முறை.
எழுத்து இயக்கம் தயாரிப்பு என்று அனைத்தையும் ஒருங்கே
செய்திருக்கிறார் இரா சரவணன். கதையின் வீரியம் கருதி இதனை தயாரிக்க மற்றவர்கள்
முன்வராது போயிருக்கலாம். சசிகுமார் போன்றதொரு பிம்பம் இந்த படத்திற்கு துணை
நில்லாதிரிந்திருந்தால் இந்த மட்டும் கூட கவனிமின்றி போயிருக்கும். இடைவேளையில்
ஊராட்சித் தலைவர் நாற்காலியில் உட்கார்ந்து பின் பழி வாங்குவார் என்று
எதிர்பார்த்த நிலையில், நாற்காலியில் உட்காருவதே இங்கு முதல் வெற்றி தான்
என்று யதார்தத்துக்கு அருகாமையில் படமாக்கிய சரவணனுக்கு பூங்கொத்து.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக வெளிவந்திருக்கும் இந்தத்
திரைப்படம் வெறும் ஒரு சதவீதம் தான். அவர்களுக்காக பொது வெளியில் பேசப்படவேண்டியது
இன்னும் நிறைய இருக்கிறது.
அதே 20 திகதி செப்டம்பரில் வெளிவந்த லப்பர் பந்தின் சூழலில் நந்தன்
கவனிக்கப்படாமல் போயிருந்தாலும், இதுபோன்ற படைப்புகள் சமூக அநீதிகளை மேலும் வெளிக்கொணரட்டும். தோள்
கொடுப்போம்.
பிரைமில் காணக்கிடைக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக