வியாழன், செப்டம்பர் 07, 2023

பிஸ்சா 3 - தி மம்மி


தமிழ் சினிமாவில ஒரு சொல்லப்படாத பார்முலா இருக்கு. கிட்டத்தட்ட 95 சதவீத படங்கள் இந்த பார்முலாவை மீறுனது கிடையாது. அது என்னன்னா படத்துல ஒருத்தர் கேள்வி கேக்குறாருனு வச்சிப்போம். அதுக்கு பதில் சொல்றவங்களோட காட்சிகள் அவங்க வாய்ல சொல்றதா  மட்டும் காட்சிப்படுத்தியிருந்தா அது பொய்யின்னும் அதே பதில அவங்க சொல்ல சொல்ல காட்சிகளா அத விரிச்சு காமிச்சாங்கன்னா அது உண்மைன்னும் எடுத்த்துக்கலாம். இது எல்லா படங்களையும் இல்லேன்னாலும் முக்கால்வாசி படங்கள்ல இதுதான் யுக்தி மற்றும் க்ளூ.



ஆனா இந்த விஷயத்தை முதல் முதலா சக்ஸ்ஸஸ்புல்லா உடைச்சது கார்த்திக் சுப்புராஜ். பிஸ்சா முதல் பாகம் படம் பாத்தவங்களுக்கு இது புரிஞ்சுருக்கும். கிட்டத்தட்ட ஒரு ஒரு மணி நேரம் பாக்குறவங்க காதுல பூ சுத்துனாரு அதுவும் எப்படி நம்மல்லாம் பயந்து சீட் நுனில உக்கார்ற அளவுக்கு என்கேஜ்ட் வச்சிருந்தாருன்னா பாத்துக்கோங்க. அப்படிப்பட்ட சக்ஸஸ் பார்முலா படத்தோட டைட்டிலை சுட்டு பிஸ்சா 2 த வில்லானு ஒரு படம் எடுத்தாங்க. ரொம்ப சூப்பர்னு சொல்ல முடியாட்டியும் மோசம்னு சொல்ல முடியாது. பட் முத படத்தோட எக்ஸ்பெக்டேஷன  இதால தாண்ட முடியல.


இப்போ வந்திருக்கிற பிஸ்சா 3 த மம்மி என்ன புதுசா இருந்திடப்போது அப்டினு பார்த்தா ஓரளவு நல்லாவே எடுத்திருக்காங்க. பிஸ்சா 1 ல த்ரில்லர் அப்புறம் கடைசி நிமிஷ ட்விஸ்ட் அப்டினு ரெண்டு விஷயம் நல்லாருக்கும். பட் பிஸசா 3 ல கதை, திரில்லர், கரண்ட் ட்ரெண்ட்ல நடந்த ஒரு விஷயம், மம்மி, எமோஷன் அப்டி எல்லாமே நல்லாவே கனெக்ட் பண்ணிருக்காங்க. அஸ்வின் காக்கமுனு தான் ஹீரோ. படத்தை மொத்தமா இவருதான் தாங்குறார். இவரு நடத்துற ரெஸ்டாரண்ட்ல சில அமானுஷ்யமான விஷயங்கள்லாம் நடக்க ஆரம்பிக்குது. அதற்கான காரணம் என்ன அப்படிங்கிற தேடல் தான் கதை. பிளாஷ் பேக்ல சொல்லப்படுற காரணம் சமீபத்துல நடந்த ஒரு மோசமான அத்துமீறலை பேஸ் பண்ணி அதுவும் கதைல ரொம்ப கரெக்ட்டா கனெக்ட் பண்ணிருந்த விதம் அருமை. ரெஸ்டாரண்ட் கிட்சன் மற்றும் அஸ்வின் ரூம்ல நடக்குற அமானுஷ்யங்கள் த்ரில்லர் வகைனா இறுதில வர எமோஷன் காட்சிகள் நல்ல சென்டிமென்ட் ரகம்.  

பிஸ்சா 3 தி மம்மி ஒரு நல்ல கதையம்சமுள்ள த்ரில்லர் மூவி  

 

கருத்துகள் இல்லை: