திங்கள், செப்டம்பர் 25, 2023

ஜவான்

 


தரம் இல்லாத துப்பாக்கியினால் உயிர் இழந்த ராணுவ வீரர்களுக்காக பழிவாங்குவதற்கும், தேசத்துரோகி என்ற அவப்பெயரை துடைப்பதற்காகவும் மற்றும் நாடு தழுவிய விவசாயக் கடன், மருத்துவமனை சீரமைப்பு etc etc க்காகவும் இரட்டை வேட அவதாரம் எடுத்தால் அதுதான் ஜவான்.  

பாலிவுட் பாட்ஷாவிற்காக அல்ல, கோலிவுட் தங்கம் அட்லீக்காக முதல் நாள் மூன்றாம் காட்சி. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா?



அணிந்திருக்கும் முகமூடி தீப்பற்றி எரிந்து விழ, விழும் துணிக்குப் பின்னால் இருக்கும் முகம் தெரிவது போன்ற ஹீரோவின் இன்ட்ரோ இதுவரை பார்த்தறியாதது. ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ட்ரெயின் ஹைஜாக் காட்சிகள் சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும் அதற்கு காரணமாக ஷாருக்கானால் சொல்லப்படும் விவசாயக்கடன் நிகழ்வுகள் உண்மைக்கு நெருக்கமானவைதான். போலவே மருத்துவமனை காட்சிகளை முயன்றிருக்கிறார்கள். ஐந்து மணி நேரத்தில் நாடு தழுவிய மருத்துவமனை புனரமைப்பு என்பது போங்காட்டம். ஹீரோயின் நயன்தாரா. ஷாருக் இண்ட்ரோ பில்டப்பில் சரிபாதி லேடி சூப்பர் ஸ்டாருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அசத்தல்.

மகன் ஷாருக், வில்லன்களிடம் மாட்டிக்கொள்ளும் தருணத்தில் அதிரடியாய் மீண்டும் வருகிறார் ஜவான் ஷாருக். மகனை விட தந்தைக்கான காட்சிகளில் ஹீரோயிசம் தூக்கலாக இருக்கிறது. முழு நேரமும் சுருட்டைப் புகைத்து கொண்டே இருக்கிறார். 

வில்லனாக விஜய் சேதுபதி. அதே விஜய் சேதுபதி போல தான் எனக்குத் தெரிந்தது. வில்லத்தனம் செய்ய முயன்றாலும் விஜய் சேதுபதிதான் தெரிகிறார். இறுதி காட்சியில் இரண்டு ஷாருக்கிடமும் அடி வாங்கும் நேரத்தில் கிச்சுகிச்சு மூட்டுகிறார். ஷாருக் படையில் ஒரு கமாண்டோ பெண்ணாக பிரியாமணி. நயன்தாராவை காப்பாற்றும் பொருட்டு குண்டடி பட்டு இறந்துவிடுகிறார். இரண்டே காட்சிகள் தான் என்றாலும் யோகி பாபு சிரிக்கவைக்கிறார். 

படம் முழுக்க பல படங்களின் ரெபெரென்ஸ்கள். இல்லையா பின்னே. தெறி, பாகுபலி, பிகில் என காட்சிகள் விரவிக்கிடக்கின்றன. சஞ்சய் தத் காட்சி மங்காத்தாவை நினைவுபடுத்துகிறது. முழுக்க முழுக்க பெண்களை வைத்தே பெண்களுக்காக படம் எடுத்தது போல் இருக்கிறது. அட்லீயிடம் இருக்கும் ஒரு முக்கியமான பாசிட்டிவ் விஷயமே அதுதான். women potrayal. தைரியமான பெண்கள். இழவு வீட்டில் விவசாயக்கடன் வசூலிக்க வரும் குண்டனை மடார் என்று சாற்றியது, பேனாவை கொண்டே காவலனை கழுத்தில் குத்தி தீபிகா படுகோனே கொன்றது என இரண்டுமே அட்லீ டச். பெண்கள் சென்டிமென்டில் அட்லீயை அடித்துக்கொள்ள வேறு எந்த இயக்குனரும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. யூகிக்க முடிந்த செண்டிமெண்ட் காட்சிகள் தான் என்றாலும் பல காட்சிகளில் மெஸ்மரைஸ் செய்து விடுகிறார். அட்லீ மேஜிக்.

இசை அனிருத். படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியிருப்பது அனியின் BGM தான். பாடல் எதுவுமே ஒட்டவில்லை. ஒருவேளை ஹிந்தியில் பிடித்திருக்கோமோ என்னவோ. தெரியவில்லை. இரண்டு மூன்று தீம்கள் நன்றாகவே படத்தை uplift செயகின்றன. 

படத்தில் பல காட்சிகள் போங்காக இருக்கின்றன. எந்த ஜெயிலில் இதுபோன்ற சீருடை என்பது தெரியவில்லை. ஜெக்கின்ஸ் ட்ஷிர்ட் ஓவர்கோட் ஜாகிங் ஷூ சகிதமாக பெண் கைதிகள். நினைத்த நேரங்களில் எல்லா சிஸ்டம்களையும் ஹேக் செயகிறார்கள். சகட்டு மேனிக்கு துப்பாக்கி உபயோகிக்கிறார்கள். முன்பெல்லாம் இறுதி காட்சியிலாவது சைரன் ஊதிவிட்டு போலீஸ் வரும். இப்பொழுதெல்லாம் ஹீரோவே எல்லாவற்றையும் பார்த்து கொள்கிறார் போலும். மருந்துக்கும் போலீஸ் இல்லை. 

கோலிவுட்டிலிருந்து பல நடிகர் நடிகைகளை, டெக்னீஷியன்களை, ம்யூசிக் டெரேக்டர் எனப்பலரை பாலிவுட் வரை இட்டுச்சென்று உலகளவில் பத்தாயிரம் திரையரங்குககளில் வெளியிடச் செய்தமைக்காகவே கேப்டன் ஆப் தி ஷிப் அட்லீயைப் பாராட்டலாம். 

ஸ்டைலிஷான மேக்கிங், ஷாருக் எனர்ஜி, நயன்தாரா நடிப்பு, அனியின் இசை ஆகியவை படத்திற்கு வலு சேர்க்கின்றன. ஆனாலும் அட்லீ மேஜிக் மிஸ்ஸிங் என்றே சொல்லுவேன். பட் ஹிந்தி ரசிகர்களுக்கு இது புது ரகம் தான். 

#jawanmoviereview #sharukhkhan #Atlee #nayanthara #vijaysethupathi #deepikapadukone #JawanFirstDayFirstShow

 

கருத்துகள் இல்லை: