என்னடா இது கிழமையா இருக்கேனு பாக்குறீங்களா? கிழமை இல்ல. கிரஹங்கள்.
அண்ணாந்து அந்த நிலாவை பாக்கும்போது அங்க ஒரு இடத்துல இங்கேந்து அதாவது இந்தியால தயார் பண்ணின ஒரு பொருள் அதுவும் நம்ம அனுப்பிச்ச சந்திராயன் விண்கலம் இருக்குதுனு நினைக்கும்போது ஆச்சர்யமா இருக்குது. ஏதோ விண்வெளில கண்ணுக்குத் தெரியாது ஒரு ஏணி நாம இருக்குற இடத்துலேந்து நிலாவை கனெக்ட் பண்ற மாதிரி ஒரு feel கிடைக்குது. ஒவ்வொரு முறையும் நிலாவை பாக்கும்போது இந்த feel good மொமெண்ட் இருக்குது.
சந்திராயன் லான்ச் பண்ணத்திலேந்தே இஸ்ரோ ரொம்ப அதிகமா கவனிக்கப்படுது. அதுவும் ஆதித்யா ககன்யான் அப்படினு அடுத்தடுத்து வர்ற திட்டங்கள் கேக்கவே வியப்பா இருக்குல்ல.
அதே சமயம், அதாவது நாம நிலாவுக்கு பிரக்யான் அனுப்பிச்ச இதே நேரம், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவுல காலடி எடுத்து வச்ச அந்த விஷயமும் நம்ம நியாபகத்துக்கு வராம இல்ல. ஒரே டவுட் தான் இருந்துச்சு. அது என்னன்னா நீல் ஆம்ஸ்டராங் காலடி எடுத்து வச்சது 1969ல. அதுக்கப்புறம் இப்போவரைக்கும் அதாவது 50 வருஷமா ஏன் அடுத்த நிலாவுல இறங்குற ப்ராஜக்ட் பண்ணல? அப்படினா நீல் போனது பொய்யா அப்படிங்கற கேள்விதான் அது. கொஞ்சம் தேடிப்பார்த்தப்ப கிடைச்ச விஷயங்கள் ரொம்பவே ஆச்சர்யமா இருந்துச்சு.
1969ல appollo 11 அப்படிங்கற விண்கலம் மூலமா நீல் நிலாவை அடையறார். அதுக்கப்புறம் 1972 வரை ஆறு முறை நிலாவுக்கு பயணிச்சிருக்காங்க. அதுவும் எப்படி? பக்கத்து ஊருக்கு போய்ட்டு வர மாதிரி. எல்லாமே NASA தான். USA தான். முத தடவ நீல் நடக்க தான் செஞ்சிருக்கார். ஆனா அதுக்கடுத்த மிஷன் எல்லாமே வேற லெவல். ஒரு தடவ நிலாவுல கார் ஒட்டிருக்காங்கன்னா பாத்துக்கோங்க. முதல் தடவ அப்டிங்கறது மட்டும் நம்ம மனசுல நல்லா பதிஞ்சிருக்கு. அடுத்தது வந்ததா வசதியா மறந்துட்டோம்.
இத இன்னும் கொஞ்சம் டீப்பா தோண்டி பாக்கும்போது தான் தெரிய வருது. 1610 ல டெலஸ்கோப் கண்டுபிச்சதுலேந்து இந்த பயணம் ஆரம்பிக்குது. தொட்டு தொட்டு ராக்கெட் விடற அளவுக்கு வராங்க. 1946ல முத முறையா வானத்திலேந்து பூமியை போட்டோ பிடிக்கிறாங்க. 105km உயரம். அதுக்கப்புறம் பூமியோட எஸ்கேப் விலாஸிட்டிய தாண்டறது, நாய் குரங்கு போன்ற விலங்குகள வான்வெளிக்கு அனுப்புறது, திருப்பி உயிரோட கொண்டு வரது. நிலாவுக்கு பக்கத்துல வரைக்கும் போறது அப்படினு படிப்படியா பல சோதனைகள் முயற்சிகள். பலது தோல்விகள். சிலது வெற்றிகள். என்ன ஒரு விஷயம்னா இந்த விளையாட்டை ரெண்டே ரெண்டு நாடுகள் தான் முழுக்க முழுக்க விளையாண்டருக்காங்க. ஒன்னு USSR. அதாவது பழைய ஒருங்கிணைந்த ரஷியா. இன்னொன்னு அமெரிக்கா.
இதுல இன்னோரு பியூட்டி என்னன்னா 1968 வரைக்கும் பல ஆராய்ச்சிகள் முதல் முறை அப்படிங்கற பட்டத்தை தட்டிட்டு போறது ரஷியா தான். இது அமெரிக்காவுக்கு ரொம்ப தர்மசங்கடத்தை ஏற்படுத்துது. போட்டிக்கு பல பரிசோதனைகள் பண்ணாலும் ப்ரெசிடெண்ட் நிக்சனுக்கு ரொம்பவே கவுரவ பிரச்சினையா மாறுது. மொத்த நாடுமே சேர்ந்து நிலாவுல காலடி எடுத்து வைக்கிற ப்ராஜெக்ட்டுக்கு உழைக்கிறாங்க. 1969ல அதுல வெற்றியும் கிடைக்குது. அதுமட்டுமில்லாம அடுத்தடுத்து ஆறு தடவை நிலாவுல ஆட்களை இறக்கி கெத்து காமிக்கிறாங்க. ரஷியாவால இந்த போட்டில தாக்கு பிடிக்க முடியல. அதாவது நம்ம கூடவே வந்துட்ருந்தவன் திடீர்னு 100km ஸ்பீட்ல ஓடுனா எப்படி இருக்கும்? அதுக்கப்புறம் சீசீ இந்தப்பழம் புளிக்கும் கதையா ரஷியாக்காரங்க நிலாவை விட்டுட்டாங்க.
ஆனா ரஷியா சும்மா இருக்கல. செவ்வாய் கிரகத்துல soft landing பண்ண முத ஆளு ரஷியா தான் (1971). வெள்ளி கிரகத்துல இப்போ வரைக்கும் ரோவர் இறக்குன ஒரே ஆளு ரஷியா தான் (1975). முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அவுக தான். இவ்வளவு பெருமைக்கு சொந்தக்காரங்க கொஞ்சம் கொஞ்சம் போட்டிலேந்து விலகிட்டாங்க. உள்நாட்டு கலவரம் காரணமா இருக்கலாம். அதுவும் பாருங்க வெள்ளி கிரகத்துல tempreature 450'c அத தாங்கிக்கற மாதிரியான ஒரு ரோவர் 1975ல அனுப்பிருக்காங்க அப்டிங்கிறதே பெரிய விஷயம் தானே. இப்போ வரைக்கு வீனஸ் நிலப்பரப்பு பத்தி நம்மகிட்ட இருக்குற ஒரே போட்டோ ரஷியாவோட venera விண்கலம் மூலமாத்தான். நீங்க படத்துல பாக்குறது வீனஸ் ஃபோட்டோ தான். வியாழன் கிரகத்தை அமெரிக்கா 1973ல நெருங்கிருக்கு. அது ஒரு gas giant அப்டிங்கிறதுனால அங்க landing சாத்தியப்படல. சுத்தி சுத்தி வந்தாக.
நம்ம galaxyய தாண்டி voyager -1 பறந்துட்டருக்கு. 1977 ல லான்ச் பண்ணிருக்காங்க. ரெண்டே வருஷத்துல வியாழன் அப்புறம் மூணே வருஷத்துல சனி கிரகத்தையும் தாண்டினாலும் அது அம்பது வருஷம் கழிச்சி தான் நம்ம சோலார் சிஸ்டத்தை விட்டு வெளில போயிருக்கு. எவ்ளோ பெரிய மாத்திரை அப்படிங்கற மாதிரி எவ்ளோ பெரிய சோலார் சிஸ்டம். இன்னும் voyager தொடர்புல இருக்குது. அதாவது 2000 கோடி கிலோமீட்டருக்கு அந்த பக்கம் போயிடுச்சு. இருந்தாலும் சிக்னல் அனுப்பிச்சிட்டே இருக்குது.
அம்பது வருஷத்துக்கு அப்புறம் இப்போ நாம (பூமி) பாக்கும்போது விண்வெளி ஆராய்ச்சி அசுர வளர்ச்சி அடைஞ்சிருக்குனு தான் சொல்லனும். ரொம்ப சீக்கிரமாவே வேற்று கிரக வாசிகள் தொடர்பு கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்குது.
விண்வெளியை தெரிஞ்சிக்க நம்ம எடுத்துக்கிட்ட முயற்சியை நம்ம பக்கத்துல நம்ம கூடவே இருக்குற மனுஷங்க மனசையும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுவோம். என்ன சொல்றீங்க. சரிதானே?
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக