நாம
அதிகமா ரொமாண்டிசைஸ் பண்ணி வச்சிருக்கிறதுல ஒன்னு இந்த தாய்மை அப்படிங்கற
சப்ஜக்டும் ஒன்னு. புனிதம், பேறு,
அப்புறம் அந்த
புள்ளைய வளக்குறதுக்கான டோட்டல் ரெஸ்பான்சிபிலிட்டிய அம்மாகிட்ட தள்றது. புள்ளை
இல்லாதவங்கள ஒரு மாதிரி பாக்குறது. அது இதுனு இன்னும் நிறைய இருக்கு. சமீபத்துல
வாசிச்சிட்டிருக்கிற ஒரு புத்தகம். இந்த கருத்த முன் வச்சி ஒரு தியரியை
சொல்லிருக்கார்.
புத்தகத்தோட பேரு
நான் சொல்ல விரும்பல. எழுத்தாளர் ஜோசப் இடமருகு அப்டினு ஒருத்தர் எழுதிருக்காரு.
அவ்விட தேசத்துக்காரர். தமிழ்ல மொழிபெயர்த்துருக்காங்க.
விஷயம் என்னன்னா
பெண்களை எப்படி இந்த தாய்மையை முன் வச்சி அடிமையாக்கினங்களோ, அதே மாதிரி சமையல் வேலையும் பெண்கள்
கிட்ட போனது எப்படினு சொல்லிருக்கார். அவரு சொல்லிருக்கிறது கீழே.
தியரி ஆப்
எவல்யூஷன்லேந்து இந்த புத்தகம் ஆரம்பிக்குது. நம்மள விடப் பெரிய ஆளுங்கள பாத்து
எப்படி நாம பணிவாவும் பயந்த மாதிரியும் நடந்துக்கிறோமோ அந்த உணர்வுலேந்து ஆதி
காலத்து மனிதன் கடவுள உருவாக்குறான். இயற்கை வழிபாடு முதல்ல ஆரம்பிச்சிருக்கு.
அதுல ரொம்ப முக்கியமா நெருப்புக்கு ஒரு பெரிய இடம் இருந்துருக்கு. உணவை சமைச்சி
சாப்பிடறதுக்கு உண்டான காரணத்தைக் காட்டிலும் குளிரிலேந்து தப்பிக்கிறது முக்கியமா
விலங்குகள் கிட்டேருந்து தப்பிக்கிறது அப்டினு நெருப்பு ஒரு பெரிய அதிசயமா
இருந்துருக்கு. அப்படிப்பட்ட அதிசயத்தை அவங்களால நினைச்ச நேரத்துக்கு வசப்படுத்த
முடில. இப்போ இருந்தது மாதிரி தீப்பட்டியோ மாஸ் ஹீரோ நடந்து வந்தா பொறி பறக்குமே,
அந்த மாதிரி
வஸ்துலாம் அவங்ககிட்ட இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டு தான் நெருப்பை உருவாக்குறாங்க.
உருவாக்கினவனும் அவங்களுக்கு பெரிய வித்தகன் தான். இப்போ இவ்ளோ கஷ்டப்பட்டு
உருவாக்கினத பாதுகாக்கனும். தாய்மைங்கற பேருல குழந்தைகள பாத்துக்கணும் அப்டினு
அல்ரெடி பெண்கள்லாம் வெளில வர்ரதில்ல. உருவாக்கின நெருப்பையும் பாத்துக்கோ அப்டினு
கொடுத்திட்டு போய்டுறாங்க. அப்டியே உணவை சுடுறதுனு ஆரம்பிச்சு சமையல் வேலை
அப்டினாலே பெண்கள் அப்படிங்கற பழக்கம் வந்திடுச்சு அப்டினு சொல்றார்.
இதே பிரின்சிபலை ஆபிஸ்ல
ஏன் எல்லா இடத்திலேயும் பாக்கலாம். உதவின்னு நம்மகிட்ட வர ஒரு வேலைய செஞ்சு
கொடுப்போம். அது ஒரு ரிக்கரிங் வேலையா இருந்துச்சுனு வச்சிக்கோங்க, அதுவும் நாம ஒன்னு ரெண்டு தடவ செஞ்சு
கொடுத்துட்டோம்னா அவ்ளோதான். அப்டியே நம்ம தலைல கட்டிடுவாங்க. காரணம் மித்தவனுக்கு
செய்யத்தெரியாது, செய்ய
மாட்டான். நாம செஞ்சு கொடுத்ததுனால சுகம் கண்டுட்டான். பழியம் பாவமும் நம்ம மேல.
நூற்றாண்டுகளா
பெண்களை அடிமையா வச்சிக்கிறதுக்கு பல தத்துவங்கள் உருவாகிக்கிட்டே தான்
இருந்திருக்கு. ஜோசப் இடமருகுவின் கண்ணோட்டம் ஏத்துக்கிற மாதிரி தான் இருக்குது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக