திங்கள், நவம்பர் 13, 2023

லியோ


ரஜினியோட படம் அப்டினு குடும்பத்தோட ஜெயிலர் படம் போனா வெட்டு குத்து ஆசிட்ல கரைக்கிறது அப்டினு பயங்கர வன்முறை. ரத்தக்களரி. இதுல ட்ரைலர் பாத்தா அவரு வம்படியா அத்தான்ன்ன்ன்ன் பெரிய வாளை எடுத்து வச்சிக்கிட்டு பிளடி ஸ்வீட்னு சொல்றாரு. இதனாலேயே தியேட்டர்ல போய் பாக்கறதுக்கு யோசிச்சிட்டே இருந்தேன். ஸ்கூல்ல peer பிரஷர் போல. பசங்க விடல. தீபாவளிக்கு முன்னாடி படத்த தூக்கிருவாங்களே அப்டினு ஊர்லேயே ஒரே ஒரு தியேட்டர்ல ஓடிட்ருந்த படத்தை புக் பண்ணி போய் பாத்தா...அவ்ளோ நாள் நம்ம எடுத்த முடிவு கரெக்டு தான் அப்டினு தோணுச்சு. 

நல்ல லொகேஷன். அழகா ஒரு பேமிலி. தோளுக்கு மேல வளர்ந்த ஒரு பையன். குட்டி பொண்ணு. த்ரிஷா. இதெல்லாம் வச்சிட்டு இப்டி ஒரு தெய்வ குத்தத்த பண்ணி வச்சிருக்காப்புல லோகி பாய். 



எனக்கு ஒன்னு புரியல. ஊரே கஞ்சாவை ஒழிக்க ட்ரை பண்ணிட்டு இருக்குது. லோகி பாயோட ஹீரோ என்னடான்னா சரக்க ஒரு ஊர்லேந்து இன்னொரு ஊருக்கு பத்திரமா கொண்டு போய் சேக்கிற கெட்டிக்கார கேரக்டர். அவரு சரக்க முழுக்க எப்போ அழிக்கிறார்னா நரபலிங்குற பேர்ல தன்னோட தங்கச்சியை கொல்லத் துணிஞ்ச அப்பாவ பாத்து காண்டாகி சரக்க எரிக்கிறார். படத்துல அவரு ஹீரோவா இல்ல வில்லனா தெரில. By far தி ஒர்ஸ்ட் கேரெக்டரைசேஷன் by லோகி. கதைக்குத் தேவையான சரக்க அப்டிங்கறத தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல. இவரு எடுக்குற கதை முழுக்க சரக்கு தான். கைதில சரக்கு. விக்கிரம்ல சரக்கு. மாஸ்டர்ல சரக்கு. ஆனா இந்த படங்கள்ல கொஞ்சம் கதை இருந்துச்சி. சென்டிமென்ட். எமோஷன்ஸ். எல்லாமே இருந்துச்சி. லியோல எதுவுமே ஒர்க் அவுட் ஆகல. விஜய் ஒருத்தர் தான் மெனெக்கெட்டு நடிச்சிருக்கார். கதையே இல்லாத படத்துக்கு அவ்ளோ உழைப்பு. அம்பது வயசு நெருங்குனாலும் ஆளு செம ஃபிட். அம்புட்டும் விழலுக்கு இறைச்ச நீர் மாதிரி ஆயிடுச்சு. 

ஆனா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அந்த ஹேர்ஸ்டைல எங்கேந்துடா பிடிச்சீங்க. புள்ளிங்கோ தலை மாதிரி இருக்குது. பிளாஷ்பேக் கெட்டப் ஓகே. தேவையே இல்லாத லிப் லாக் வேற. சங்கீதா மேடம் கோவப்பட்டது தான் மிச்சம். ஒரே ஒரு டுமீலு சீனுக்கு அனுராக் காஷ்யப் வேற பிளைட் பிடிச்சி வந்துருக்கார். விஜய் சேதுபதி மாதிரி மிஷ்கின். எல்லா படத்திலேயுமே மிஷ்கினாவே வரார். இதுல ஒரு பார்ட் டைம் கேரக்டர். அர்ஜுனுக்கு அவ்ளோ பில்டப். ஒண்ணுமே இல்லாம பண்ணிட்டாய்ங்க. இந்த ஜோஷ்யம் நரபலி சென்டிமென்ட் வச்சி எப்படி கூச்ச நாச்சமே இல்லாம இந்த கதையை சொன்னாரோ. அத கொஞ்சம் கூட யோசிக்காம எப்படி இவரு ஒத்துக்கிட்டாருனு தெரில. மல்டி ஸ்டார் போடறேனுட்டு ஊர் ஊருக்கு ஒரு பாட்டன் முப்பாட்டன கூட்டிட்டு வந்துடறானுங்க. அவனுங்க வேற ஸ்பைஸி ஷவராம சாப்பிட்டுட்டு கக்கா போற மாதிரி படம் முழுக்க கத்திக்கிட்டு (ஜெய்லர்லயும் சேத்துதான்). படம் முழுக்க சிகரட்டை எடுத்து பத்த வச்சிக்கிட்டே இருக்குறாங்க. 

இதுல என்ன ஒரு கூத்துனா, லியோ பாத்துட்டு வந்த ஒரு அலுவலக கோவொர்க்கர் கிட்ட படம் எப்பிடி இருக்கு. அடிதடி நிறையாவா அப்டினு கேட்டா 'அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. லைட்டா பைட்டு அவ்ளோதான்' அப்டின்னார். இப்போதான் புரியுது அவரை மதுப்பிரியர் மாதிரி விஜய் பிரியர் போல. படம் முழுக்க எடுத்து சொருவிட்டே இருக்கானுங்க. 

ரசிகர்களுக்காக ஒரு படம். ஓகேதான். ஆனா அவங்களையும் ஒரு மனுஷனா மதிக்கணுமா இல்லையா? கூறே இல்லாதவனா அவன். அரசியல் கட்சி தொண்டன் மாதிரி அவனும் எவ்ளோதான் முட்டு குடுப்பான். பட் அடுத்த வருஷம் அரசியல்ல இறங்கப் போற விஜய்க்கு இது நல்ல ஓப்பனிங் இல்ல. எப்படி எம்.ஜி.ஆர். செதுக்கினாரோ அது மாதிரி செதுக்கனும். 'டதுரா'லாம் வேலைக்கு ஆகாது.   

படத்துல எனக்கு பிடிச்ச ஒரே சீன். கௌதம் மேனன் மன்சூர் கிட்ட போய் சொல்லு சொல்லும்பாரு. அவரு சொல்றேன். ஆனா உனக்கு பயந்துக்கிட்ட்டோ இந்த சரக்குக்காகவோ சொல்லல. நான் மூணு நாள்ல செத்துடுவேன். அதுக்கப்புறேன் இத பத்தி பேச முடியாது. அதனால சொல்றேன் ' அப்டின்னுவாரு. அந்த லந்து தான் மன்சூர். 

அது என்ன LCU. பெரிய இன்டர்ஸ்டெல்லார் ரேஞ்சுக்கு பில்டப் வேற. கைதில வர கான்ஸ்டபிள் இங்க வராப்புல. விக்ரம் கமல் வாய்ஸ் கடைசில கேக்குது. இதுல என்ன LCU. கதையே கனெக்ட் ஆகல. ஒரு prequel, sequel, spinoff எதுவுமே இல்ல. அந்த படத்தோட கேரக்டர் இங்க வந்துட்டா அது சினிமாட்டிக் யூனிவெர்ஸா. முட்டாள் குரு கதை தான் ஞாபகம் வருது. அவரு ஒன்னு எடுத்தாராம். இவனுங்கள ஒன்னு கண்டுபிடிச்சாங்களாம். அந்த மாதிரி இருக்குது. 

தில்லி, விக்ரம், தாஸ் இவங்களுக்கெல்லாம் எப்படி இனிமே ஒரு கதையை ரெடி பண்ணி இவங்க எல்லாத்தையும் அதுல கனெக்ட் பண்ணி, எல்லாரும் சரக்க பத்திரமா கொண்டு போய் ரோலேக்ஸ்ட கை மாத்தி, அத வேற நாம நல்லாருக்குனு சொல்லி பாக்கணுமே அப்டினு நெனச்சாத்தான்...என் உச்சி மண்டைல டர்ருருருருருங்குது.

 

கருத்துகள் இல்லை: