திங்கள், நவம்பர் 13, 2023

நல்லாருக்கும்போதே...

கடந்த வாரம் பேங்க் சென்றிருந்த சமயம். மதியம் மூன்று மணி இருக்கலாம். வேலை முடித்து வெளியே வந்தபோது ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார். வயது எழுபதுக்கு குறையாமல் இருக்கும். நடையில் சிறிது தள்ளாட்டம் மற்றும் பார்வையில் ஒரு வெறுமை இருந்தது.

அந்த சமயத்தில் அந்த சாலையில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. பெரியவரும் சாலையோரம் நின்று யாருக்கோ காத்து கொண்டிருந்தது போல் இருந்தது. அருகில் சென்று கேட்டபொழுது பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுமாறு கூறினார். இரண்டு குழந்தைகள். இருவருமே வெளிநாட்டில். யாருமே உடன் வராமல் பேருந்தில் ஏறி சிரமப்படுவதற்கு பதில் ஆட்டோ எடுத்துக்கொள்ளலாமே என்பதற்கு

'நானே போய்ட்டு வந்துடலாம்னு பாத்தேன்ப்பா. கொஞ்சம் தலை கிர்ருங்குது' என்றார்.

இந்த உலகம் யார் யாராலோ இயங்கி கொண்டிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், ஒரு கட்டத்தில் பெற்றோர் இன்றி அருகில் குழந்தைகள் இன்றி தள்ளாட்டத்துடன் அந்த யாரோ ஒருவரின் உதவிக்காக காத்திருக்கும் கணம், நினைத்தாலே சற்று திகிலூட்டுவதாக இருக்கிறது. பாத்துக்கலாம் என்று மனது தைரியம் சொன்னாலும் உடல் ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை. 

நல்லாருக்கும்போதே...

 

 

கருத்துகள் இல்லை: