நமது
வீடுகளில் ஒரு பழக்கம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்தோ தெரியாமலோ தொடர்ந்து
இருந்துவருகிறது.
அது
உணவு பரிமாறுதல்.
அதில்
என்ன இப்போ ?
இருக்கிறது.
பெரும் பிரச்சினை பசுந்தோல் போர்த்திய புலி போல ஒளிந்துகொண்டிருக்கிறது.
ஓட்டலில்
சாப்பிட செல்லும்போது சர்வர் என்று நாம் ஜபர்தஸ்தாக விழிக்கும் அந்த பணியாள் கூட
டேபிளில் உணவு கொணர்ந்து வைப்பாரே தவிர நமக்கு பரிமாறுவதில்லை. 'மீல்ஸ்' என்று தூக்கி கொண்டு வரக்கூடாது. சாதம்
தவிர மற்றவை எல்லாவற்றிற்கும் கிண்ணி போட்டுவிட்டார்கள்.
சர்வர்
என்று அழைக்கப்படும் சர்வரே நமக்கு பரிமாறுவது கிடையாது என்றால் வீட்டில் எஜமானி என்றழைக்கப்படுபவர் மட்டும் என்ன விளக்குமாருக்கு பரிமாற வேண்டும்???.
பெருங்குறு
நகரங்கள் கூட ஓரளவுக்கு தேறிவிட்டது. எப்படி தேறியது? கொஞ்சம் படிப்பு. கொஞ்சம் சம்பாத்தியம் செய்கின்ற பெண்களால். சிட்டியை விட்டு விலகி கிராமத்து பக்கம் சென்றால் இந்த பழக்கம் பெவி
குயிக் போட்டு ஒட்டி இருப்பதை பார்க்கலாம். கணவன் நோயாளியா இல்லை மாற்றுத்திறனாளியா என்ன? தட்டில் எடுத்துவந்து சாதத்தை அருகில் வைக்க, வைத்ததோடு மட்டும் அல்லாமல் பார்த்து பார்த்து அருகில் உட்கார்ந்து
குழம்பு, ரசம் என்று ஊற்றுவதெல்லாம் என்ன கணக்கு
என்று தெரியவில்லை. இது அன்புங்க என்ற மீண்டும் தூக்கி கொண்டு வராதீர்கள்.
அப்படியொரு நொன்னை இருக்கிறது என்றால் பாத்திரம் விலக்குவதோ, துணி துவைப்பதோ, குழந்தையை பார்த்துக்கொள்ளுவதோ,
வீட்டை பெருக்குவதோ என்று ஏதாவது ஒரு வேலையில்
இந்த அன்பு புண்ணாக்கை ஆண்களும் காமிக்கலாமே. செய்யமாட்டார்கள்.
ஏன்?
அவர்கள் வாயாலேயே சொன்னதை சொல்கிறேன்.
உடன்
வேலை பார்ப்பவர். ஆந்திராக்காரர். அவர்களுடையது ஊரக வீடு. மரங்கள் அடர்ந்த செடி
கொடிகள் நிறைந்த பசுமையான சூழலில் அமையப்பெற்ற வீடு. தேக்கு மரம் மற்றும்
வாதாங்கொட்டை மரங்கள் அதிகம் உண்டு. இலை எப்பொழுதும் விழுந்த
வண்ணமே இருக்கும். ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும்போது செடி கொடி மரங்கள் தோட்ட
பராமரிப்பு என்று பேச்சு சென்றுகொண்டிருந்தது.
செலவை குறைக்குபொருட்டு சில பரமாரிப்புகளை நிறுவனம் பார்த்துக்கொள்ளாது
என்றும் வீட்டில் குடியிருப்போர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுற்றறிக்கை
வந்திருந்த நேரம்.
"சரி,
செடிகள் நட்டு வைக்கிறாயே. இலை குப்பைகளையும்
நீயே கூட்டிவிடுவாயா?" என்று கேட்டேன்.
"இல்லை"
என்று கண்ணடித்தான்.
"ஏன்?"
என்று கேட்டேன்
"ஒரு
முறை செய்துவிட்டால், அந்த வேலை தன் தலையில் விழுந்து விடும்" என்று ஒரு அரும்பெரும் லாஜிக் ஒன்றை
உதிர்த்தான்.
தூக்கிவாரிப்போட்டது.
அடேய். பெண் குழந்தை என்பது வீட்டின் மஹாலக்ஷ்மி. இருபது இருபத்தைந்து வீட்டில்
ராணி போல வளர்த்து, ஆயிரத்து இருநூறு கிலோமீட்டருக்கு
அப்பால் உனக்கு மணமுடித்து உன்னை நம்பி தன் பெண்பிள்ளையை கொடுத்திருக்கிறாரே உன்
மாமனார், அந்த நன்றிக்காகவாவது எதாவது
செய்யலாமே" என்றேன்.
"ம்ஹூம்"
என்றான்
"உனக்குத்தான்
அந்த பழமொழி பிரமாதமாக ஒத்துப்போகிறது"
"என்ன?"
என்றான்
"கிளியை
வளர்த்து குரங்கு கையில் கொடுப்பது போல" என்றேன்
அதன்பிறகு
அவன் என்னிடம் பேசுவதில்லை.
இது
ஒன்று மட்டும்தான் குரங்கு என்று பார்த்தால் ஊருக்குள் பாதிக்கு மேல்
குரங்காகத்தான் இருக்கிறது.
இன்னொருவர்.
கேரளத்துக்காரர்.
வீட்டில்
அவருடைய அன்றாட நியமங்களை கேட்டால் தலைசுற்றியது. எழுந்தவுடன் ஒரு பெட் காஃபி.
சின்னவீடு பாக்யராஜ் போல குளிக்க துண்டு. இஸ்திரி போட்ட பேண்ட் சட்டை. டைனிங்
டேபிளில் சாப்பாடு. உண்டு விழுங்கியவுடன் இன்சி தட்டிப்போட்ட டீ. இரவு. அது சுக்கு
போட்ட பால். மனைவி படித்திருப்பதோ பி.டெக் இன்போர்மஷன் டெக்நாலஜி. ஆனால் செய்வதோ நீர்
யானை பராமரிப்பு.
உனக்கு
என ஒய் எரிகிறது? என்றால் எரியத்தான் செய்கிறது.
இஞ்சி
டீயும், சுக்கு பாலும் போட்டு கொடுப்பதற்கு I.T
படித்த மணப்பெண். அதுவும். எப்படி? வரதட்சிணையுடன் டெலிவரி. இதில்
நீர் யானைக்கு மிடுக்கு வேறு.
விளங்கிவிடும்.
வாழ்நாள்
மூச்சுடும் போடும் சாப்பாட்டை ஒரு முறையேனும் வாய்விட்டு பாராட்டாத அதே ஜென்மங்கள்
தான் முழங்கை வரை வழிந்தோடும் சாம்பாரையும் தயிரையும் வழித்து நக்கும். இங்கிதம்
கொஞ்சமும் இன்றி அண்டா வாயை திறந்து அதிர்ந்து ஏப்பமிடும். நசுக்கி அபான வாயுவை
வெளியிடும். இந்த கோணங்கி சேட்டைகளை சகித்து அருகில் இருந்து பார்த்து பார்த்து
பரிமாறி கொண்டிருக்கும் பெண்கள் தாய்மார்களின் நிலையை நினைத்தால், நெஞ்சு பொருக்குதில்லையே!!!
நீர்
யானைகள் எப்போதுமே விழித்துக்கொள்ளாது. பெண்கள் தான் எழ வேண்டும். தொழத்தேவையில்லை.
இல்லை.
எனக்கு இதுமாதிரி பரிமாறிக்கிட்டு சேவை பண்ணிட்டு இருக்கத்தான் பிடிச்சிருக்கு.
அதுதான் அன்பின் வெளிப்பாடுன்னு சொன்னா, இந்த
ஆணாதிக்க சமுதாயத்துல ஊறி போனவங்கன்னு தான் அர்த்தம். ஏற்கனவே பெண்களை எங்கே வெளியே விட்டால்
தன்னை மிஞ்சிவிடுவாளோ என்று அஞ்சித்தான் இல்லாத பொல்லாத சடங்குகளை உலகமே அதனதன் கெபாசிட்டியில்
அனுசரித்துக்கொடிருக்கிறது. அன்பு என்ற அந்த ஒற்றை வார்த்தையில் தான் வதை தொடங்க ஆரம்பிக்கிறது.
அது சுயமரியாதையை கீழே தள்ளி மிதிக்கிறது. உலகில் எந்த ஒரு விளங்கும் சுயமரியாதை இன்றி
வாழ்வது இல்லை. மனிதனைத்தவிர.
என்னிடம்
அப்ரெண்டிஸ் ட்ரைனிங்கிற்காக சேர்ந்த பெண் அவள். கல்லூரி படிக்கும்பொழுதே சென்னையில் ஒரு IT கம்பெனியில்
வேலை வாய்ப்பு கிடைத்தது. கோர் கம்பெனியில்
வேலை என்று அதற்கு செல்லவில்லை என்றாள்.
வீட்டில் உள்ளூரிலேயே வேலை பார்க்க வேண்டும் என்று வீட்டில் நிர்பந்திக்கிறார்கள் என்றாள்.
"பன்னாட்டு
நிறுவனம். கிடைக்க போகும் exposure நன்றாக இருக்கும். இங்கேயே இருந்தால்
அப்ரெண்டிஸ் முடித்துவிட்டு இதே ஊரில் வேறு வேலை கிடைக்காது. யாராவது ஒருவன் மணம்
முடித்து உன்னை அழைத்து செல்வான். ஐந்து ரூபாய்க்கு ஒரு தோடு வேண்டும் என்றால் கூட
அவனிடம் நிக்க வேண்டும். ஐந்து ரூபாய் என்பது தோடுக்கு அதிகம் என்று சொல்லுகிற
லூசுகள் அதிகம். நேப்கினுக்கு கூட பைசா பார்க்கும் ஜந்துக்கள் உண்டு. ஆதலால் சொந்த
காலில் நில். கிளம்பி விடு" என்று துரத்திவிட்டேன்.
வேலை
பார்த்து என்ன கிழித்தாய்? என்றால் இதைச்சொல்வேன். வாழ்க்கையில்
ஒரு பெண்ணின் சுயமரியாதையை காப்பாற்றியதில் ஆகபெரும் நிம்மதி எனக்கு. இன்றும் தொடர்பில் இருக்கிறாள். வேலை
பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் இன்னும் நாலு பேரை தேற்றி விடக்கூடும்.
'சும்மா
அடிச்சிவிடாதீங்க. அஞ்சு ரூபாய்க்கு கணக்கு பாப்பாங்களா?' அப்டினு மூன்றாவது முறையாக தூக்கிக்கொண்டு வந்தீர்களேயானால் இன்னொரு
உதாரணமும் சொல்கிறேன்.
இன்னோரு
பார்ட்டி. வயசு முப்பத்தியெட்டு. கல்யாணமாகி ரெண்டு குழந்தை. சம்பாதிக்கிறத முழுசா
அவங்க அப்பா அம்மா கைல குடுத்துடும். சாயங்காலம் வெளில போணும்னா அப்பாகிட்ட
முப்பது ரூபா கேட்டுட்டு பஜ்ஜி சாப்பிடப்போகும். அவங்க அப்பா அதிலேயும் பத்த
கட் பண்ணிக்கிட்டு இருபது தான்
கொடுப்பார். வாங்கிட்டு போய்டுவாப்புல. இப்போ
அவன் வைப் இந்த பார்ட்டிகிட்ட என்னனு போய் தன்னோட தேவைக்கு நிப்பா? ஒவ்வொன்னையும் மாமனார்ட்ட கேக்கனும்னா இவரு ரோல் என்ன?
பொண்ணுங்கள
பெத்தவங்க ஆணாதிக்கத்துக்கு
எதிரா தைரியம் கொடுத்து வளக்கணும். படிப்போட
கருத்துச்சுதந்திரமும் முக்கியம்ங்கிறத புரிய வைக்கணும்.
சுயமரியாதையோட வாழ சொல்லிக்கொடுக்கனும். எதிர்த்து நின்னாத்தான் உரிமை கிடைக்கும்.
எழுமின்
விழுமின். சோறு போடாதுமின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக