சனி, நவம்பர் 05, 2022

அம்மு

 
 
என்ன பொண்ணு எப்ப பாத்தாலும் அழுதுகிட்டே இருக்குனு சொல்லக்கூடாது. Domestic Violenceல எண்பது சதவீதம் லேடிஸ் இதே மாதிரி பிரச்சினை 'சரி ஆகும்' இல்லை 'குழந்தைகளுக்காக பாக்கறேன்' அப்டினு கொடுமையை சகிச்சிக்கிட்டு தான் வாழ்ந்துட்டு இருக்காங்க.
 
கதை இதுதான். கல்யாணம் ஆகி போற பொண்ணு திடீர்னு குடும்ப வன்முறையை எதிர்கொள்றா. சரியாகும்னு சகிச்சிக்கிட்டு கொஞ்ச காலம் கடத்துற அவளுக்கு அது தொடர்கதையா இருக்குது. அதுக்கான தண்டனையா அந்த பொண்ணு ஒரு வினோதமான ஒரு கூட்டு சேர்துட்டு முடிவை எடுக்குறா. அதோட முடிவு என்ன? அவளுக்கு ஒரு தீர்வு கிடைக்குதா அப்படிங்கிறது தான் கதை.



 
முதல் ஷாட்லேந்து எண்டு க்ரெடிட் வரைக்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மி தான் (பொன்னியின் செல்வன் பூங்குழலி). அம்முவோட கணவனா நவீன் சந்திரா. இடைவேளைக்கப்புறம் பாபி சிம்ஹா. இவங்க மூணு பேருதான் படம் முழுக்க. ஆரம்பத்திலேந்து இறுதி வரைக்கும் அழுகை தான் அப்டினாலும் அத அலுக்கும் படியா ஐஸ்வர்யாவோட நடிப்பு இல்லை. பல காட்சிகள் லாங் ஷாட். அதிலெல்லாம் பக்காவான பர்பார்மன்ஸ். எமோஷன்ஸ் விளையாடுது. ஹீரோ எதுக்கு சைகோ ஆகுறார் அப்டிங்கிரதுல தெளிவு இல்லை. சமூகத்துக்கு ஹீரோவாகவும் வீட்டுல வில்லனாகவும் இருக்குற பல பேர்ல அவரும் ஒருத்தர் அப்டின்னு விட்டுடலாம். இதுபோல சில லாம்களை ஒதுகிட்டு பார்த்தா ரொம்ப நாள் கழிச்சு நயன்தாரா, த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷுக்கப்றம் ஹீரோயின் சென்ட்ரிக் பிலிம். நம்பிக்கையை கெடுக்காம ஐஸ்வர்யாவோட நடிப்பு. 
 
சரி, கதைல அம்மு எடுக்குற அந்த முடிவினால அவளுக்கு விடுதலை கிடைச்சிடுச்சா அப்டினா இல்லைன்னுதான் சொல்லணும். ஆனா அம்மு தன்னோடைய சகிப்பு தன்மையை விட்டுட்டு தைரியமா அவளுடைய கணவன எதிர்க்க ஆரம்பிக்கிறா அப்படிங்கிற பாசிட்டிவ் நோட்டோட படத்த முடிச்சிருக்காங்க.
 
பிடித்தமில்லாத ஒரு வாழ்க்கையை வாழறதுக்கு பதிலா எந்த ஒரு சமரசமும் இல்லாம அதிலேந்து வெளில வரணும் அப்டிங்கிறதுதான் படத்தோட ஒன்லைன்.
 
படம் ஸ்லோ தான் அப்டினாலும் வரவேற்கலாம்

கருத்துகள் இல்லை: