கடந்த ஆண்டு நடைபெற்ற ஆன்லைன் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற 68 ப்ளஸ் ஒன் அரசு பள்ளி மாணவ மாணவியர்களை துபாய்க்கு சுற்றுலா அழைத்து சென்றிருக்கிறார் கல்வித்துறை அமைச்சர். இவர்கள் துபாய்க்கு கல்வி சுற்றுலாவாகவும் மற்றும் ஷார்ஜாவில் நடக்கும் பன்னாட்டு புத்தக கண்காட்சிக்கும் அழைத்து செல்லப்படுகின்றனர்.
மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி என்று சொன்னதோடு மட்டும் நிற்காமல் அதை செயல்படுத்தியும் காட்டிக்கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் புத்தகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அளப்பரியது. இதன் தாக்கம் அடுத்த தலைமுறையிடம் அதிகமாக இருக்கும். ஏதோ ஒரு சுற்றுலா என்று மட்டுமாக இது இல்லாது பன்னாட்டு புத்தக கண்காட்சி என்று அழைத்து சென்றிருப்பது உவகையளிக்கிறது.
அரசின் பார்வையில் மட்டுமில்லாது, அந்த மாணவர்களின் மன நிலையும் இதில் மிகவும் முக்கியம். சுற்றுலா என்பது மனதை, அறிவை வெளிக்கொணர்ந்து விருத்தியடையவைக்கும் ஒரு வினையூக்கி. பதினைந்து வயதில் பன்னாட்டு சுற்றுலா என்பது வாழ்நாள் முழுவது இந்த மாணவர்களுக்கு ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கை கொடுக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். அதுமட்டுமல்லாது இது ஏனைய மாணவர்களையும் உத்வேகத்துடன் கற்க வழிவகுக்கும்.
பாராட்டுதல்
மற்றும் போற்றுதலுக்குரியது. எல்லையற்ற வரவேற்பளிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக