பதினைந்து வருடங்களுக்கு முன்பு.
மங்கை மேடம். கல்லூரியின் இரண்டாமாண்டு faculty advisor. வகுப்பில் யாரேனும் ஒழுக்கம் குறைவாக நடந்துகொள்ளும் நேரங்களில் எல்லாம் அவர் இதை கூறுவதுண்டு. 'நீ செய்யும் காரியத்தினால் உன்னுடைய பெற்றோர்கள் பெருமைப்படுவார்களா அல்லது தலைகுனிவார்களா என்று யோசித்துக்கொள். பெற்றோர் எதிரில் இருப்பதாக நினைத்துக்கொண்டு எந்த செயலையும் செய்யுங்கள்' என்பார். காலத்துக்குமான ஒரு அறிவுரை. நமக்கே இடரும்போதெல்லாம் இதை யோசித்துப்பார்த்து முடிவெடுத்துக்கொள்ளலாம். அப்படியான ஒரு eternal logical advise. ஒழுக்க கோட்பாடுகளில் முன்வைக்கவேண்டியது. ஆழ்மனதில் வேரூன்றிவிட்டது.
தற்போது.
மிகவும் பிடித்த ஒரு அறிவுரை என்பதால் அதை குழந்தைகளிடம் அவ்வப்போது கூறுவதுண்டு. ஏறுகிறதோ இல்லையோ, என் கடமை என்ற பாணியில் அதை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.
கடந்த பீரியாடிகள் டெஸ்டில் மகள் அசரடித்திருக்கிறாள்.
'நீ ஆசிரியரானால் மாணாக்கரிடம் எதை முன்னிறுத்துவாய்?' என்ற கேள்விக்கு ‘நீங்கள் எடுக்கும் முடிவு உங்களின் பெற்றோர்களை மகிழ்ச்சிக்குள்ளாகிக்கிறதா அல்லது வேதனைக்குள்ளாக்குகிறதா’ என்ற போதனையை முன்னிறுத்துவேன் என்று எழுதியிருக்கிறாள். மகளின் ஆசிரியரும் வெகுவாக பாராட்டி மூன்று நட்சத்திரங்கள் கொடுத்துள்ளளார்.
தலைமுறை கடந்து இந்த போதனை கடத்தப்பட்டிருக்கிறதில் மட்டற்ற மகிழ்ச்சி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக