பொதுவா ஒரு படத்தோட ப்ரோமோஷன் டைம்ல ஏகத்துக்கும் பில்டப் கொடுப்பாங்க. அமேசான் காட்டுலேந்து கண்டுபிடிச்ச கதைனு சொல்லுவாங்க. ஹீரோ அப்பிடி ஹீரோயின் இப்பிடி..அது இதுனு ஏகப்பட்ட பில்டப் இருக்கும். போய் பாத்தா அந்த மாதிரி ஒரு எலிமெண்ட்டே படத்துல இருக்காது. இதுக்காடா இவ்வளவு பில்டப் கொடுத்திங்கன்னு இருக்கும்.
ஆனா ப்ரின்ஸ் ப்ரோமோல அவங்க சொன்னது ஒண்ணே ஒண்ணுதான். அலட்டிக்காம ஒரு கான்செப்ட் பிடிச்சு ஆரம்பத்துலேந்து கடைசி வரைக்கும் சிரிக்கிற மாதிரி ஒரு படம் எடுத்திருக்கோம். குடும்பத்தோட வந்து கலகலப்பா என்ஜாய் பன்னிட்டு போங்கனுதான் சொன்னாங்க. என்னடா இவ்வளவு சிம்பிளா சொல்லிருக்காங்களே பாத்தா படமும் அப்டிதான் இருக்கு. டைட்டில் கார்ட் டு எண்டு க்ரெடிட் வரைக்கும் கெக்கே பெக்கேதான். பக்கா தீபாவளி காமெடி ட்ரீட்.
சிவகார்த்திகேயன் பத்தி சொல்லவே வேண்டாம். அவரு எந்த ஷோ பண்ணாலும் அப்டி ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும். காமெடி இயல்பா வர்ற மிகச்சில நடிகர்கள்ல (ரஜினி, விஜய்) அவரும் ஒருத்தர். ஒரு துளி ஆபாசம், அடிதடி இல்லாம முழு நீள என்டேர்டைன்மெண்ட் இவராலா மட்டும்தான் இன்னைய தேதிக்கு கொடுக்க முடியும். அவ்ளோ பேமிலி ஆடியன்ஸ். சின்ன குழந்தைங்கள ஏற்கனவே பிடிச்சிட்டார். ஒரு குழந்தைக்கு மினிமம் ரெண்டு டிக்கட் கணக்கா, ஒரு பக்கா மாஸ் ஹீரோவா வசூல் ராஜாவா உருவாகிட்டே வர்றார் அப்டிங்கிறதுல எந்த சந்தேகமும் இல்ல.
நடுவுல பென்னி குயிக் பத்தி ஒரு ரெண்டு நிமிஷம் பேசியிருப்பார். சில பிரிட்டிஷார் இந்தியாவுல அர்பணிப்பா வேலை செய்ததை பத்தி போற போக்குல சொல்லிருப்பாங்க. அதை பத்தி ஒரு நாவல் இப்போ தொடரா வெளிவந்திட்ருக்கு. விலாவாரியா அதனுடைய அறிமுகம் அடுத்த பதிவில்.
சிவாவுக்கு அப்புறம் முக்கிய ரோல் சத்யராஜ் தான். சில இடங்கள்ல அவரையே லூசு மாதிரி டையலாக் பேச வச்சிருக்காங்க. ஓரளவு ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கு. செல்ப் கலாய்ச்சிங் ஏகத்துக்கும் ஹிட் அடிச்சிருக்கு. உதாரணமா கும்முறு டப்புறு, ஹல மித்தி ஹபிபோ, சூரிய கெஸ்ட் அப்பியரன்ஸ் வேற ன்னு கலாய்க்கறதுனு படம் முழுக்க ரௌசு தான்.
ரெண்டு மூணு இங்கிலீஷ் வார்த்தையை வச்சிட்டு படத்துல இவ்ளோ காமெடி பண்ண முடியுமாங்கிறது ஆச்சர்யமா இருக்கு. செண்டிமெண்ட் சீனையும் விட்டுவைக்கல. அதுலயும் முழு கலகலப்பு. எமோஷனே கிடையாது. கடைசி பத்து நிமிஷ க்ளைமாக்ஸ்லையாவது சீரியஸ்னஸ் இருக்குமான்னு பாத்தா படத்துலே அந்த பத்து நிமிஷம் வேற லெவல் காமெடி. சில இடத்துல சில பேர் காமெடி ஒர்க் அவுட் ஆகலனு சொல்றாங்க. பட் அது மாதிரி எதுவும் நான் பீல் பண்ணல. ரொம்ப நல்லாவே இருந்துச்சு.
முன்முடிவுகள் எது இல்லாம மைண்ட freeயா வச்சிட்டு போனா ஒரு ரெண்டு மணிநேரம் எல்லாத்தையும் மறந்துட்டு குடும்பத்தோட தாராளமா சிரிக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக