சில படங்களை அறியாத வயசுல பாத்ததுக்கும் வெம்பி பழுத்து போன வயசுல பாக்குறதுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கு.
பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சுல கமலும் ரஜினியும் சேர்ந்து 'எமோஷன்' அது இதுனு ரத்னத்தை ஒட்டிருப்பாங்க. 'தளபதி' ஷூட்டிங்ல நடந்த விஷயத்தை ரொம்ப ஜோவியலா கலாய்ச்சிருந்தாரு ரஜினி. தாத்தா பூ கிட்ட சுண்டி விட்டு வரம் கேட்ட வயசுல பாத்த படம் அது. சரி அப்டி என்னதான் பன்னிருகாரு, இன்னொரு முறை பாக்கலாமேன்னு பார்த்தேன்.
படத்த முழுக்க முழுக்க தூக்கி நிறுத்திருக்கறது 'ராஜனென்ற ராஜா' தான். பாட்டு என்ன, BGM என்ன, அதிலேயும் அத்தனை வெரைட்டி. சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சின்னத்தாயவள், காட்டுக்குயிலே, ராக்கம்மா..இது போக BGM. எல்லாமே அரை நாள்ல செஞ்சிருக்கார். என்னா மனுஷன்யா அவரு. உயிரை கொடுத்து அதகளம் பன்னிருக்காப்புல. அதில சந்தேகமே இல்ல.
ரஜினியோட எமோஷனலான ஆக்டிங், மேக்கப் இல்லாத முகங்கள், சில்ஹவுட் சினிமாட்டோகிராபி, சந்தோஷ் சிவன் கேமரா, தோட்டா தரணியோட ஆர்ட் அப்டினு எதிலுமே குறைச்சல் இல்ல.
ஆனா இந்த எல்லாமுமே சேர்ந்து ஒரு பொத்தல் விழுந்த திரைக்கதையை தூக்கி நிறுத்த முயற்சி பண்ணிருக்கு. மணி மேல கோவம் இல்ல. ஆனா அவரு ஏன் இந்த அளவுக்கு பாக்குறவங்கள குறைச்சலா எடை போட்டாருன்னுதான் வருத்தம்
மாடர்ன் மஹாபாரதம் அப்டிங்கிறதெல்லாம் ஓகே தான்.
படம் முழுக்க பாக்கெட் பாக்கெட்டா எமோஷனல் சீன்ஸ். உதாரணத்துக்கு நட்பு (தேவா சூர்யா க்கு நடக்குற ரெண்டு மூணு சீன்ஸ்), அம்மா செண்டிமெண்ட் (ஸ்ரீவித்யா, ரஜினி), காதல் (?) (ஷோபனா ரஜினி நடுவுல) இப்படி தனித்தனியா ஒர்க் அவுட் ஆகியிருக்கு.
கதை எங்க நடக்குதுனே தெரில. அதாவது எந்த ஏரியா. ஊரு பேரு என்ன. தமிழ்நாடா இல்ல வேறு மாநிலமா. தமிழ்நாட்டுல இந்த மாதிரி கோட்டை மலை ஆறு போன்ற ஐட்டங்களாம் சேர்ந்த இடம் எங்க இருக்குன்னே தெரில. அதனால படத்தை பாக்கும்போது ஒரு அந்நியத்தனமான பீல் வரத அவாய்ட் பண்ண முடில. இந்த தேவராஜ் சூர்யா என்ன பன்றாங்க, யார அடிக்கிறாங்க அப்டிங்கிறதுல க்ளாரிட்டி இல்ல. அதாவது ராபின் ஹூட் மாதிரி ஒரு ரோல் பண்றங்களானு தெரில. அந்த தேவா கேரக்டரை கொஞ்சம் மெருகேத்திதான் நாயக்கர் ரோல் ரெடி பன்னிருக்காப்புல நினைக்கிறேன்.
அதுவும் கடைசில எவிடென்சே இல்லனு சொல்லிட்டு அண்ணா தம்பின்னு கட்டிபுடிச்சிருக்கதல்லாம் ரத்னம் டைப்பாவே இல்ல. வித்தியாசமான அறுவை சிகிச்சைலாம் செய்ய வேண்டாம்னு புரொடக்ஷன் ஹவுஸ்ல அவரு கைய கட்டி போட்ருப்பாங்க போல.
ககபோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக