ஞாயிறு, அக்டோபர் 23, 2022

லால் சிங் சத்தா


எவ்ளோ நாள் கழிச்சு இப்படி ஒரு பீல் குட் மூவி. 

அப்பாயின்ட்மென்ட் லெட்டர் வாங்கிட்டு கம்பெனி கால் பண்ற வரைக்கும் வெயிட் பண்ணிட்ருந்த டைம்ல பாத்தா பல படங்கள்ல forrest gump படமும் ஒன்னு. கண்டிப்பா அப்போ புடிச்சிருந்துச்சு. டாம் ஹாங்க்ஸ் நடிப்புன்னா சும்மாவா. அப்டியே cast away படத்தையும் பாத்துட்டு சிலாகிச்சு பல வருஷம் ஆச்சு. 



லால் சிங் சத்தா forrest gump படத்தோட அதிகாரப்பூர்வ ரீமேக் அப்டிங்கிறது தெரிஞ்சாலும் பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பாத்தா அந்த படத்தோட கதை ஞாபகம் இல்ல. ரொம்ப நாள் வெயிட் லிஸ்ட்ல இருந்தத இன்னைக்கு டிக் அடிச்சாச்சு. 

படத்துல எவ்ளோ நெகிழ்வான தருணங்கள். ஆறு ஏழு முறையாவது கண்ணீர் துளிர்க்கலாம். கவனிக்கணும். சோகமான இல்ல நெகிழ்வான moments னு சொல்றேன். அமீர் கான் முழுக்க முழுக்க லால் சிங்காவே பரிமளிக்கிறார். அவருடைய படங்களிலேயே இதுதான் பெஸ்டுன்னு சொல்லலாம். அவ்ளோ ஒரு அசுர நடிப்பு. ட்ரைன்ல கதை சொல்ல ஆரம்பிக்கிறாரு. இந்த ஆளு லூசானு ரயில்ல இருக்கவங்க மட்டும் இல்ல நாமளும் நினைக்குறமாதிரி நடந்துக்குறார். கொஞ்சம் கொஞ்சமா பக்கத்து சீட்ல இருக்குறவங்களும் இவரோட கதை சொல்ற பாணில கவர்ந்து அதில லயிச்சு போயிடறாங்க. கூடவே நாமும்.

ரொம்ப வெகுளியான லால், தான் பிறந்ததுலேந்து இப்போ வரைக்கும் நடந்தத கதையா சொல்றாரு. கூடவே இந்தியாவோட முக்கியமான வரலாற்று நிகழ்வுகள அவரோட கதையோட்டத்துல பிசிறில்லாம கோத்துருக்காங்க. டீ-ஏஜிங் முறைல அமீர் மட்டும் இல்ல ஷாருக்கான் கூட ஆச்சர்யப்படுத்துறாங்க. லால் நமக்கு சில இடங்கள்ல குற்ற உணர்ச்சியும் கொடுத்துடுறாரு. ஆமா. மனிதத்தன்மையோட அவர் செய்ற ஒவ்வொரு காரியமும் நம்மள யோசிக்க வைக்குது. ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா லால் ஒரு குழந்தை மாதிரியான மனோபாவத்தை எப்போதும் வச்சிருக்கார். நாம அத எப்போவோ தொலைச்சிட்டு நிக்கிறோம். அவ்ளோதான் வித்தியாசம்.

ஒரு அழகான கவிதை மாதிரி இருக்குது படம். லால் சொல்ல வரது ஒண்ணே ஒண்ணுதான். எத பண்ணாலும் அதுல முழுசா கவனத்த வைங்க. அது உங்களுக்கான வெற்றியை கொடுக்கும்ங்கிறதுதான். 

ஆமாங்க. நீங்க கண்டிப்பா பாக்க வேண்டிய படம். மிஸ் பண்ணிடாதிங்க. செம பீல் குட் மூவி.





கருத்துகள் இல்லை: