வெள்ளி, அக்டோபர் 07, 2022

பொன்னியின் செல்வன்

ஹஜ் மற்றும் காசி புனித யாத்திரை மாதிரி ஒரு உண்மையான தமிழனா இன்னைக்கு அந்த கடமையை நிறைவேத்தியாச்சி. 300 கோடி ரூபா வசூல்ல நம்ம கான்ட்ரிபியூஷன் 900 ஊவா.




சாதகம் 

தளபதில கர்ணன் ரெபெரென்ஸ், ராவணன் படத்துல ராமாயணம் ரெபெரென்ஸ், ரோஜால சத்தியவான் சாவித்ரி ரெபெரென்ஸ் அப்டினு நம்மாளு (மணி) புகுந்து விளையாடிருப்பாரு. அது சில இடங்கள்ல க்ளிக் ஆகியிருக்கு. பல பேருக்கு என்னடான்னு எரிச்சல்ல கொடுத்திருக்கு. அந்த பயத்தோட காரணத்தினாலதான் நாவல் படிக்கிற உணர்வை படம் தருமா அப்டிங்குற சந்தேகம் எல்லாருக்கும் வந்துச்சு. 

சந்தேகமே வேண்டாம். கல்கியோட நாவலை அப்டியே அத்தியாயம் அத்தியாயமா படமா எடுத்திருக்காங்க. எந்த இடத்திலேயும் கதைல குழப்பம் இல்ல. 

படத்துல எந்த இடத்துல எல்லாம் VFX யூஸ் பன்னிருக்காங்கனு தெரியல. அதுவே பெரிய வெற்றி.

ஐஸ்வர்யாராயோட த்ரிஷாவுடைய ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் அமர்க்களமா இருக்கு. May  be பாகம் ரெண்டுல ஐஸ் சொல்லியடிக்கலாம்.  

நாவல்ல நமக்கு அருண்மொழிய விட வந்தியத்தேவனை ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி படத்தோட பெரிய பலமே கார்த்தி தான். அவர் வர்ற சீன்ஸ்லாம் கலகலப்பா போகுது. பருத்திவீரன் படத்துலேந்து இப்ப வரைக்கும் அதே மேனரிசம் தான். பட் பக்கவா செட் ஆகியிருக்கு. அந்த மாதிரியான ஒரு இம்பேக்ட் இந்த படத்துல வேற எந்த நடிகர் கிட்டயம் இல்ல.   

வசனம்லாம் இயல்பா அமைஞ்சிருக்கு. செந்தமிழும் இல்ல. கரண்ட் ட்ரெண்டும் இல்ல. கல்கியோட வசனத்தை அங்கங்க மதிப்புக்கூட்டி இன்னும் பொலிவாக்கிருக்காங்க. உதாரணத்துக்கு குந்தவை வந்தியத்தேவன் சீன், நந்தினி குந்தவை சீன் etc

பின்னணி இசை படத்தோட ஓட்டத்துக்கு உயிர் கொடுத்திருக்கு.

இறுதியில் வந்த அந்த கப்பல் காட்சிகள் தத்ரூபமா இருக்கு. விக்ரமோட ரவி நல்ல ஆகிருதியா தெரியுறாரு. 


பாதகம்.

இந்த பாட்டெல்லாம் தனித்தனியா கேட்ட நல்லாத்தான் இருக்கு. பட் படம் பாக்கும்போது ஜெல் ஆகல. சொல்லப்போனா படத்தோட ஓட்டத்தை நிறுத்துற வேகத்தடை மாதிரி தான் இருக்குது. 

ரொம்பவே எதிர்பார்த்த விக்ரம் சீன்ஸ் அவ்ளோ உயிர்ப்பா இல்ல. லவ் failure ஆகிட்டு சைக்கிளிங் ரன்னிங் போறமாதிரி இவரு ஊரு ஊரா போர் செய்றாருனு ரொம்ப கொடூரமா அந்த கேரக்டரை ஹேண்டில் பண்ணிருக்காங்க. 

கார்த்தி இல்லாத எல்லா சீனுமே 0.25x ஸ்லோ தான்.  

சதி நடக்குற சீன்லாம் கொஞ்சம் பொறுமையை சோதிக்குது. 

அருண்மொழிவர்மனோட fight சீன்ஸ் தவிர மத்த எல்லா போர் காட்சிகளும் அவ்ளோ பெரிய இம்பேக்ட் கொடுக்கல. 

நாவல் படிச்சவங்கள இந்த படம் (ரத்னம்) ஏமாத்தல. ஏற்கனவே இமேஜின் பண்ணி வச்சிருந்தத மெருகேத்த தான் செய்யுது. 


பாராட்டி போற்றப்படவேண்டிய முயற்சி. 


கருத்துகள் இல்லை: