வேலை செய்யும் இடம். அறுபது வயதில் ஒய்வு என்று கொண்டால் கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஒரு நாளின் பிரதானமான நேரத்தை நமது ஒர்க் ஸ்டேஷனில் தான் செலவிடுகிறோம். தோராயமாக எண்பதாயிரம் மணி நேரங்கள். சில வேலைகள் வீட்டில் செய்வதை விட அலுவலகத்தில் பார்ப்பது சற்று சௌகர்யமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒர்க் ஸ்டேஷன் நமக்கு பிடித்தது போல் இருக்க வேண்டும். இல்லையெனில் முச்சூடும் நொந்து கொள்ள வேண்டிதான். அலுவலகம் வரும் போது facility சர்விஸ் என்ற துப்புரவு பணியாளர்கள் நிலையை நினைத்து வருத்தப்பட்டது உண்டு. ஏதேனும் மாடிப்படி கீழே ஒரு ஸ்டூலில் உட்கார்ந்திருப்பர். மினிவிசிறி வசதி கூட இருக்காது. சற்று கலக்கமாகத்தான் இருக்கும். உனக்கும் கீழே உள்ளவர் கோடி நிலைமைதான்.
குழந்தைக்கான பள்ளியை மாற்றலாம் என்று முடிவு செய்து நேற்று ஒரு பள்ளிக்கு பார்வையிட சென்றிருந்தபோது கண்ட காட்சி மிகவும் திகைப்பாக இருந்தது. ஆந்திராவில் இந்த பள்ளிக்குழுமம் பெரிய தலைக்கட்டு போல . தினமும் பரீட்சை. எக்ஸ்ட்ராகரிக்குலர் என்று எதுவுமே இல்லை. overal grooming என்பது ஜீரோ. படி, படி, படி தான். முக்கியமாக தமிழ், ஆங்கிலம் மற்றும் சோசியல் சப்ஜெக்டை கண்டுகொள்ளமாட்டார்கள். இதெல்லாம் விட முத்தாய்ப்பாக கண்ட காட்சி, பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் யாருக்குமே ஸ்டாப் ரூம் என்ற ஒன்றே கிடையாது. வராண்டாவில் உட்கார வைத்திருக்கிறார்கள். மதிய உணவு, பேப்பர் திருத்துவது, தலைவலி என்றால் சாய்ந்துகொள்ள எல்லாமே அந்த காரிடார் தான். வெயில், மழை என்று பாராமல் வருடம் முழுவதும் காரிடார் என்பது சற்று திகைப்பாகத்தான் இருக்கிறது. என்ன மன நிலையில் அந்த டீச்சர் பாடம் சொல்லி கொடுப்பர்கள் என்று புரியவில்லை. எந்த அளவுக்கு அந்த டீச்சரை குழந்தைகள் மதிக்கும் என்றும் தெரியவில்லை.
அது பள்ளியே அல்ல என்று அப்போதுதான் புரிகிறது. ராஜஸ்தானின் கோட்டாவைப் போல அகடெமி நடத்துகிறார்கள். குழந்தைகளுக்கு எதை போதித்துக் கொண்டிருக்கிறோம் என்று கேள்வி தொக்கி நிற்கிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக