வியாழன், ஜனவரி 04, 2024

மங்களவாரம்

 

 

தெலுங்கில் மங்களவாரம். தமிழில் செவ்வாய்க்கிழமை. 

சின்ன கிராமம். கள்ளத்தொடர்பை சுவற்றில் எழுதி அதன் காரணமாக அங்கே நடக்கும் தற்கொலையை விசாரிக்க நந்திதா ஸ்வேதா புது SI ஆக வருகிறார். அது தற்கொலையல்ல. கொலை என்று நம்பும் அவரை தன கடமையைச் செய்ய விடாமல் அந்த கிராமம் தடுக்கிறது. போலீஸ் விசாரணை ஒரு புறம் நடக்க, மறுபுறம் அந்த கிராமத்தின் கதை முன்னும் பின்னுமாக விரிகிறது. இறுதி காட்சி வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ட்விஸ்ட் வைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். 

 


நிம்போமேனியா போன்ற சப்ஜெக்டை தொடுவதால், மேலும் ஹீரோயின் அந்த கேரக்டராகவே வாழ்வதால் சற்று எச்சரிக்கை தேவை. ஸ்ட்ரிக்ட்லி அடெல்ட்ஸ் ஒன்லி. மற்றபடிக்கு கதை நடக்கும் களம், கிணறு, வாழைத் தோப்பு, கோவில், சாப்பாடு பந்தி, சோடா கடை என எல்லாமே விறுவிறுப்பு. அதுவும் அஜய் கோஷின் ஒன் லைனர்ஸ் எல்லாமே தரம் ரகம்.   

டிஸ்னி ott யில் கிடைக்கிறது 

Paayal Rajput Ajay Bhupathi #Mangalavaaram

கருத்துகள் இல்லை: