ரஜினிக்கு அடுத்த மாஸ் ஹீரோவாக வெகு ஜனத்தை கவரும் திறமை விஜய்க்கு உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.
ரஜினி என்ற பிம்பத்தை மிக பிரமாண்டமாக வளர்த்ததில் முக்கிய பங்கு பஞ்சு அருணாச்சலம் மற்றும் எஸ்.பி. முத்துராமனுக்கு உண்டு. பிற்காலங்களில் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா போன்ற கமெர்ஷியல் ஜாம்பவான்கள் வழி இன்றைய தலைமுறையையும் கவர்ந்தார். ஆனால் இரண்டே படங்கள், அதாவது அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் என்ற இரண்டு படங்கள் எடுத்த ரஞ்சித், ரஜினியை இயக்க முடியுமா என்ற ஆச்சர்யம் தொக்கி நின்றபோது, தான் ஒரு சிறந்த கதாசிரியர் மற்றும் தனது படத்திற்கு தான்தான் கேப்டன் என்று சொல்லாமல் சொல்லியடித்தார். கபாலி மற்றும் காலா மூலம் தன்னுடைய உள்ளக்கிடக்கையை ஒரு மாஸ் ஹீரோ வழியாக திரையில் முன்வைத்தார். அவருடைய கதையும் எடுபட்டது. ரஜினியின் நடிப்பும் (முள்ளும் மலரும் போன்ற) சிலாகிக்கப்பட்டது. அதாவது ஒரு மாஸ் ஹீரோவை இயக்குவதால் தான் தடுமாறவில்லை என்பதை பறைசாற்றிய படங்கள் அவை.
அதே போல் இரண்டு படங்களை இயக்கிய நெல்சன், விஜய்யை இயக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தபோது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என்ற அவருடைய முந்தைய இரண்டு படங்கள், இவராலும் ஒரு மேஜிக் செய்ய முடியும் என்ற நமபிக்கை விதைத்தது. ஆனால் ஸ்க்ரிப்ட்டை சல்லடையாகி தானும் தோற்று ரசிகர்களையும் முட்ட்டாளாக்கி விட்டார். வெடித்து சிரிக்க காமெடியும் இல்லை. ரசித்து பார்க்க லாஜிக்கும் இல்லை. ஒரே ஆறுதல் விஜய் மட்டுமே. நடிப்பு, நடனம் என 47 வயதில் செம எனெர்ஜி அண்ட் இன்ஸபிரேஷன்.
விஜய்க்கு என்று பெரிதாக இன்ட்ரோ சீன் இல்லை என்று தெரியவந்தபொழுது, இது நிச்சயமாக நெல்சன் என்ற ஒரு இயக்குனரின் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அடுத்த இரண்டே காட்சிகளில் அதனை தவிடுபொடியாக்கி நினைப்பில் மண்ணை அள்ளி தூவிவிட்டார். மாஸ் ஹீரோ என்கிற இமேஜை ஹேண்டில் செய்யும் பரபரப்பில் லாஜிக், ஸ்க்ரிப்ட் என எல்லாவற்றிலும் கோட்டை விட்டுவிட்டுட்டார். உதாரணமாக கண்ணாடியை உடைத்து கயிறை அறுக்கலாம் என்ற ஐடியா ஓகே. பட், அது ஒரு fibre கண்ணாடி. தங்கம் வாங்கும் காட்சிக்கு பதிலாக ஒரு மூக்கு கண்ணாடி கடையில் தன்னுடைய glaas கண்ணாடியை மாற்றுவது போன்ற ஒரு காட்சி, இதற்கு வலு சேர்த்திருக்கும். முதல் சண்டை காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை கொஞ்சம் கூட கூறே இல்லாத லாஜிக் மீறல்கள். படு கேவலமான fight சீக்வன்ஸ்கள். தளபதி ரசிகர்களே குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அளவுக்கு ஒரு படு மொக்கையான படம். சொந்தக்காரரிடம் பேசுவது போல டெர்ரரிஸ்ட்டிடம் பேசும் போன் கால்கள், ரபேல் ஏவுகணைகள் என இஷ்டத்திற்கு பூ சுத்தியிருக்கிறார். டாக்டர் டீமை அதே காஸ்ட்யூமில் பார்ப்பது மேலும் ஒரு கொடுமை.
ஏன், இரண்டாவது படம் கிடைத்த அட்லீ கூட தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று படங்களை ஓரளவுக்கு ரசிகர்களையம் வெகுஜனத்தையும் கவரும் வண்ணம் எடுத்து தன்னை ஒரு மாஸ் இயக்குனராக நிலை நாட்டிக்கொண்டார். இப்பொழுதோ பாலிவுட் பாட்ஷாவான ஷாரூக்கை இயக்குகிறார். லோகேஷ் கூட மாஸ்டர் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். நன்றாக அமைந்த அந்த வாய்ப்பை நெல்சன் தவற விட்டுவிட்டார் என்று சொல்லுவதை விட 'நல்லவேளை, சாணியை நான் மிதிக்கல' என்ற மொமெண்ட்.
சொல்லுவதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை.
சுருக்கமாக சொன்னால் 140 ரூபாய் மிச்சம். ஆனால் மூன்று GB டேட்டா, 2 யூனிட் மின்சாரம் மற்றும் 3 மணிநேரம் தெண்டம்.
இன்னும் ராவாக சொன்னால் 'ஸ்ட்' என்ற வார்த்தையை விடுத்திருக்கலாம்.
வெரி சாரி நெல்சன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக