ஆஹா ப்ரொடக்ஷனோட மற்றொரு படைப்பு இறை. விலங்கு பற்றி ஏற்கனவே சொல்லி இருந்தேன். அது டீசெண்டான திரில்லர் வகை ஜானர். அதே போல இறை pedophile பற்றியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். மூணு வெல்வேறு பீரியட் நடக்குற கதைக்களம். நான் லீனியரா சொல்லிருக்காங்க. அதுவும் சிக்கலில்லாம. Birds of prey அப்படிங்கற ஒரு நாவல வெப்சீரிஸா மாத்திருக்காங்க. இயக்குனர் ராஜேஷ் எம். செல்வா. இவரு கமலோட அபிமானி. விஸ்வரூபம், தூங்காவனம், உத்தம வில்லன் படங்கள்ல கமலோட அசோசியேட் ஆகிருக்கார். அதே போல இவரோட கடைசி நாலு படங்களுக்கு இசை அமைச்ச கிப்ரான் தான் இதுக்கும் ம்யூசிக் டெரெக்டர். சொல்லப்போனா இறை வெப் சீரிஸ் இந்த அளவுக்கு நல்லா கொண்டு வந்ததுல பிஜிஎம் ம்யூசிக்குக்கு ஒரு முக்கிய பங்கு உண்டுன்னு சொல்லலாம்.
கிறிஸ்டோபர் நோலன் 'இன்சோம்னியா'னு ஒரு படம் இயக்கியிருப்பார். அது அவரோட ஒரிஜினல் கிடையாது. ரீமேக் படம். நார்வேல நடக்குற மாதிரி கதைக்களம் இருக்கும். துப்பறியும் கதை தான். நார்வேங்கிறதுனால ஆறு மாசம் இரவுங்கிறதே கிடையாது. ஏற்கனவே தூக்கம் வராம அவதிப்படுற ஹீரோவை (அல்பசினோ) இந்த கேஸையும் துப்பறியுறதுக்காக நார்வே கூட்டிட்டு வருவாங்க. நார்வேல முழு சூரியன் காரணமா அவரு தூங்க முடியாம அவதிப்படறது பார்த்தா நமக்கும் கண்வழி வர்ற அளவுக்கு இருக்கும். அதே போல படத்துல வர்ற SUV கார் அதிகமா நம்மள கவர்ந்திழுக்கும். 'லாரன்ஸ் ஆப் அரேபியா' அப்படிங்கிற படத்தை பாக்கும்போது நமக்கு உடம்பெல்லாம் எரியுற மாதிரி ஒரு பீல் உண்டாகும். அந்தளவுக்கு டெசர்ட்ட படம் பிடிச்சிருப்பாங்க. ஏன் இத சொல்றேன்னா, இறை படத்தோட லொகேஷன் முழுக்க முழுக்க கொடைக்கானல். பாக்கும்போது நமக்கே ஒரு பிளசண்டான சில்னஸ் பீலிங் வருது. காஸ்ட்யூம், ஆர்ட், செட்டிங், மலைப்பாதைகள், fire houses எல்லாமே அந்த மாதிரியான ஒரு மூட செட் பண்ணுது.
மோக முள் படத்துலேந்தே நம்ம அபிஷேக்கு இதே வேலை தான். பொருந்தா காமம். விறுவிறுப்பான திரைக்கதை, சரியான கதாபாத்திர தெரிவு, மிகையில்லாத நடிப்புனு வெப்சீரிஸ் நல்லாவே இருக்குது. 67 வயசுலயும் இப்பவும் அவர் mr. madras னு சொல்லிக்கிற அளவுக்கு பிட்டா வர்றார் நம்ம சுப்ரீம் ஸ்டார். ஆறு பாகங்கள் தான். ஜெனெரலா ஒவ்வொரு பாகமும் சஸ்பென்ஸ் கேள்வியோட முடியும். இதுல ஒவ்வொரு பாகமும் ஒரு பதிலோட முடியுது. அதுவும் உறுத்தலில்லாம இருக்குது.
என்ன ஒரே குறைன்னா pedophile சம்பந்தப்பட்ட இந்த கதைக்களத்தை வெறுமனே ஒரு த்ரில்லர் விரும்பிகளுக்காக எடுத்த மாதிரி இருக்குது. இதையே குழைந்தைகளும் பாக்குற மாதிரி எடுத்திருந்தா இன்னும் நல்லாவே அவார்நஸ் கிடைச்சிருக்கும். அதாவது சமூக பொறுப்புள்ள ஒரு படைப்பா வெளிவந்திருக்கும்.
ஜுராசிக் பார்க் படங்கள்ல படம் முடிஞ்ச உடனே மூடிருக்குற கதவை ஒரு ஜுராசிக் குட்டி வந்து எட்டிப்பார்க்கும். அது அடுத்த படம் எடுக்கப்போறதுக்கான லீட். அதுமாதிரி இதுலயும் நெஸ்ட் சீரிஸ் எடுக்கிறதுக்கான லீடோட கதையை முடிச்சிருக்காங்க.
நல்ல ஒரு வீக்கெண்ட் டைம்பாஸ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக