Sustainable என்கிற வார்த்தை சமீப காலமாக அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. அதுவும் கடந்த 7 வருடங்களாக கொஞ்சம் ஜாஸ்தி. Sustainable என்ற வார்த்தைக்கு விலாவரியாக நூறு பக்க அளவில் விளக்கம் கொடுக்க முடியும் என்றாலும், ரத்த்தினச்சுருக்கமாக சொல்வதென்றால், எதிர்கால சந்ததியை மனதில் வைத்துக்கொண்டு இன்றைய தேவைகளைச் சுருக்கிக்கொள்ளவேண்டும் என்பதே. Less Consumerism அல்லது மினிமலிஸ்டிக் கான்செப்ட் போன்று சொல்லலாம். விஜய், இட்லி மூலம் விளக்கும் அந்த கம்மியூனிச சித்தாந்தம் என்றும் கூட சொல்லாம்.
இவர்கள், அதாவது Sustainable என்ற வார்த்தையை அதிகம் உபயோகிக்கும் மிராசுதாரர்கள் குறி வைப்பது 'கார்பன் உமிழ்வுகளை'. பெட்ரோல் டீசல் உபயோகப்படுத்தும் அனைத்து வாகனங்கள் இதில் குறிவைக்கப்படுகின்றன. மேலும் நிலக்கரி உபயோகித்து மின்சாரம் தயாரிக்கும் டெக்னலாஜியை பெட்ரோல் ஊற்றி கொழுத்த வேண்டும் என்பது இவர்களது கட்டுக்கடங்காத அவா. புரியும்படி சொல்வதென்றால் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியான 4 லட்ச மெகாவாட்டில். 2.75 லட்ச மெகாவாட்டை உமிழ்ந்து கொண்டிருக்கும் Thermal power plantகளை அனைத்து வைக்க சொல்கிறார்கள். அணைத்து வைத்துவிட்டு சோலார், காற்று, கடல் அலைகள், நீர் மின் நிலையம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரித்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். 2030 க்குள் 50 சதவீத உற்பத்தி இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக மட்டுமே தயாரிக்கப்படும் என்று பாரிசில் கையெழுத்தாகி விட்டது.
ஒருவேளை அனைத்து வாகனங்களையும் EV ஆக மாற்றினால், அவை அனைத்திற்கும் சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயிண்ட்கள், பெருகி கொண்டிருக்கும் ஜனத்திரளுக்கான மின் தேவைகள் என அதற்கான மின் உற்பத்தி கட்டுமானத்தில் நாம் வலுப்பெற்றிருக்கிறோமா என்றால் இல்லை. இவற்றையெல்லாம் 2030 க்குள் எப்படி செய்யப்போகிறோம் என்பது million dollar கேள்வி.
ஆனால்,
மேற்சொன்ன அந்த sustainable என்ற வார்த்தையை உரக்கக்கூறிக்கொண்டிருக்கும் மிராசுதாரர்கள் அதிகமாக இருப்பது நம் நாட்டில் இல்லை. வெளிநாடுகளில். அதுவும் எந்த மாதிரியான நாடுகள் என்றால், வருடத்தின் பெரும்பாலான நாட்கள் பனி படர்ந்து மைனஸ் டிகிரியில் இருக்கும் மற்றும் வாழவே சாத்தியமற்ற மற்றும் வாழத்தகுதியே இல்லாத வெளிநாடுகள். ஒரு சராசரி மனிதன் மிகக்குறைந்த மினிமலிஸ்டிக் வாழ்க்கை வாழ்வதற்கும் அருகத்தையே இல்லாத நாடுகள் அவை. கிழக்கில் இருக்கும் ஜப்பான் நாடு மினிமில்ஸ்டிக் விஷயத்தில் கிங். அப்படியே கிழக்கிற்கு முற்றிலும் எதிர்முனையில் நிற்பது மேற்கத்திய நாடுகள். ஜப்பானில் ஒரு மனிதருக்கு சராசரியாக 150 கிலோ குப்பை என்று கணக்கிலிட்டால், அமெரிக்கா, கனடா, UK போன்ற நாடுகளில், இது 1000 கிலோவாக இருக்கிறது. அங்கிருக்கும் ஒவ்வொரு வீட்டை பார்த்தாலே தெரியும். குளிர்காலங்களில் வீட்டை வெதுவெதுப்பாக வைப்பதற்கு பேஸ்மெண்டில் ஜெனெரேட்டர்கள். அவை ஒரு மாதத்திற்கு விழுங்கும் மின் சக்தி அல்லது எரிசக்தி என்பது இங்கு வாழும் மக்கள் ஒரு வருடத்திற்கு உபயோகப்படுத்தும் ஆற்றல். ஆனால் கிஞ்சித்தேனும் வெட்கமின்றி இந்த வளர்ந்த நாடுகள், அதாவது developed nations தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளை பார்த்து கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த சொல்வது நகை முரண். உண்டு களித்து மீதம் இல்லை என்ற பதபதைப்பு. அதனால் தான் சாத்தான் வேதம் ஓதுகிறது.
இருபது வருடங்களுக்கு முன், எவ்வாறு அழகு சாதனங்களை சந்தைப்படுத்த, உலக அழகி,பிரபஞ்ச அழகி என்று பத்து பன்னிரெண்டு இந்தியப்பெண்களை தேர்வு செய்து நூறு கோடி இந்தியர்களை ஏமாற்றினார்களோ அது போலவே இவர்கள் இப்போது குறி வைத்திருப்பது பள்ளி கல்லூரி மாணவர்கள் போன்ற இளம் தலைமுறைகளை. Sustainabale என்ற தலைப்பில் போட்டி வைப்பது, தீ பற்றி எரிய கூடிய எதையாவது ஒன்றை பேட்டரியில் ஓட வைத்துவிட்டால் ஆஹா ஓஹோ என்று புகழ் பாடி ஒரு இன்னோவேஷன் அவார்டை அளிக்கவேண்டியது. அந்த பேட்டரிக்கு மின்சாரம் எங்கிருந்துஹ் என்று பார்த்தால், அந்த பக்கம் ஜெனரேட்டர் இருக்கும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் சக்தி என்ற தத்துவம், வளரும் மற்றும் ஏழை நாடுகள் மீது பெருத்த நிதிச்சுமையைத்தருகிறது என்று ஆப்பிரிக்க கண்டத்தின் உள்ள ஒரு நாட்டின் பிரதமர் அறைகூவல் விடுக்கிறார். கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இங்கிதமே இல்லாமல் இந்த சாத்தான்கள் நமக்கு சொல்லிக்கொடுப்பது தான் கடுங்கோபத்தைத்தருகிறது. குறைந்தபட்ச குற்ற உணர்வு கூட இல்லாத கயவர்கள்.
வடக்கு
வாழ்கிறது. தெற்கு என்றுமே உழைத்து தேய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக