ஹேப்பினஸ் இன்டெக்ஸ் அப்டினு பாத்தோம்னா இந்தியாவுக்கு 139வது இடம் கொடுத்துருக்காங்க.
'என்னத்தே' கண்ணையா மாதிரி நம்மாளுங்க எப்பவும் என்னத்த என்னத்தனு ஒரு சலிப்புல இருப்பாங்க. வேலைக்கு போற மனநிலைல இருக்கிறவங்களோட நிலைலேந்து பார்த்தா, இந்த ஹேப்பினஸ் இன்டெக்ஸ் 139வது இடத்துலலாம் இருக்கக்கூடாது. அப்டியே அலேக்கா தூக்கி கடைசி இடத்துல உக்கார வச்சிரணும்.
ஏன் சொல்றேன்னு கேட்டீங்கன்னா, வாரத்துல ஆறு நாளும் வேலை. கூப்டா ஏழாவது நாளும் போய்ட்டு வரணும். IT (அது தனி கஷ்டம்) தவிர்த்து பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் மற்றும் மத்திய அலுவலகங்கள் பூராவும் இப்படியேதான் இயங்கிட்ருக்கு. வீட்டுல இருக்குறவங்களோட நேரத்தை எப்படி செலவு பண்றது. இதுல பாத்தீங்கன்னா வேலைக்கு போறதுல பாதிபேர் வீட்டுல தொல்லை அதிகமா இருக்குன்னுதான் ஆறு நாள் வேலைக்கு ஓகே னு சொல்லிடறான். அவன் கவலை அந்த ஏழாவது நாள வீட்டுல எப்படி கழிக்கிறதுனு?
உலகமே மூணு அல்லது நான்கு நாள் வேல பாத்தா போதும். மித்த நாள் வீட்டுல உக்காந்து எதையாவது நோண்டுனு யோசிக்கிற நேரத்துல இங்க நம்மள பாடப்படுத்துறாய்ங்க. ஒரு வருஷத்துக்கு 52 சனிக்கிழமை காலி. இப்டியே ஒரு 30 வருஷம் வேலை பாத்தா, தோராயமான 1500 நாள் காலி. சம்பளம் வருதுல்ல அப்டினு கேக்குறவங்களுக்கு, அதை வச்சிட்டு என்ன பண்றது. காலத்தோட செலவு பண்றதுக்கு நேரமும் இல்லை. உடம்புல தெம்பும் போயிருக்கும்.
கண்ணதாசன்
சொன்னமாதிரி 'உனக்கும்
கீழே உள்ளவர் கோடி' அப்டினு
வாரத்துல ஏழு நாளும் (பால், பேப்பர்,
கடைகள்) வேலைக்கு
போறவங்கள நினைச்சிட்டு நம்மல நாமே ஆத்துப்படுத்திக்க வேண்டிதான்.
இந்த
whatsapp, facebook, twitter லாம்
ஆப் பண்ணி வச்சா எதோ உலகமே அமைதியா இருக்குற மாதிரி ஒரு feeling கிடைக்கும்ல. அதுமாதிரி, ஆபிஸ்லேயும் ஒருத்தன் இரெண்டுபேரு
இருப்பாங்க. ஹாய், எப்படி
இருக்கீங்க அப்டினு குசலம் விசாரிச்சிட்டு, அவனுக்கு promotion குடுத்திருக்காங்க, இவனுக்கு அப்ரைசல்ல நல்ல மார்க்
குடுத்திருக்காங்க, அவ
பாரின் டூர் போனா, அந்த
கேபின் ல ஒரு புது ஜோடி உருவாகிருக்குனு வந்து நியூஸ் வாசிச்சிட்டு நம்மல வேல
பாக்க விடாம ஏதாவது யோசிக்க வச்சிட்டு போய்டுவாய்ங்க. இவங்கள கண்டுபிடிச்சு அந்த hai
லேயே ஒரு bye சொல்லி அனுப்பிச்சிட்டோம்னா, வலம்புரி ஜான் சொல்றமாதிரி, 'வருடத்தில் இந்த நாள் மட்டுமல்ல. எல்லா
நாளும் பொன்னாளே', அப்டினு
சொல்லிடலாம்.
ராஜராஜேச்சோழன்
வர்ணாஸ்ரமத்தை கடைபிடித்தாரா என்ற கேள்வி எழப்போய், ஒரு நண்பனிடம் அளவளாவிய ஐந்து
நிமிடங்களில், முத்தரையரின்
வரலாறு மற்றும் அவர்கள் 300 ஆண்டுகள்
டெல்டா நிலங்களை ஆண்ட விவரங்கள், களப்பிரர்கள்
தமிழகத்தை ஆண்ட 350 ஆண்டுகள்,
பூம்புகாரை
தலைமையிடமாகக்கொண்டு தென் தமிழகத்தை கட்டுக்குள் வைத்த சோழர்கள், கொடும்பாளூரில் பெண் எடுத்தது, திருப்புறம்பியம் போர், பாண்டியர்கள், வைதீகத்திற்கு எதிர்ப்பாக இருந்த சமண
மற்றும் பௌத்தர்கள், சரபோஜி,
சிதம்பரத்தில் வாழும்
ராஜராஜ சோழனின் வம்சாவளிகள் என உரையாடல் ஜெட் வேகத்தில் எங்கெங்கோ போய் வந்தது.
அடுத்த அரை மணி நேரத்தில் பேசிய மற்றொரு நண்பன் வாயிலாக, போர்காலத்தில் பங்குச்சந்தை நிலவரம், கடந்த காலங்களில் பங்குச்சந்தை எப்பொழுது எவ்வளவு சரிவைச்சந்தித்தது. எவ்வாறு பணமுதலைகள் ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்து அதை பற்றி மாய்ந்து மாய்ந்து பாராட்டி பங்கை manipulate செய்கிறார்கள், அதன் மூலம் எவ்வாறு பங்கின் மதிப்பை கூட்டுகிறார்கள், பின்பு சம்பாதித்து சத்தம் காட்டாது பங்கை விட்டு வெளியேறுகிறார்கள், அதே பங்கு எவ்வாறு வீழ்ச்சி அடைகிறது, volume of transactions இன் முக்கியத்துவம் என்ன என்று ஒரு குட்டி உரை நிகழ்த்தி விடைபெற்றான்.
கற்றது கைமண் அளவு என்றும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றும் நினைக்கத்தூண்டிய ஒரு பாசிடிவ் விடியல்.
நட்பை பகிர்ந்து போற்றுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக