வெ. நீலகண்டன்
விகடனில்
வெளிவரும் தொடர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மனிதரைப் பற்றி. பற்றி என்பதை விட
கொண்டாடி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு cover story.
நிழல்
ஹீரோக்களை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழ் சமூகத்துக்கு இது ஒரு அருமையான
Eye Opener.
எத்தனை
மனிதர்கள். என்னவொரு தீர்க்கம். சாதாரணமானவர்கள். ஆனால் அசாதாரண உழைப்பு.
எடுத்துக்காட்டு. சமூக சேவை. வாழும் வாழ்கைக்கான அர்த்தம். சொல்லிக்கொண்டேப்
போகலாம்.
உங்களையும்
என்னையும் போன்ற மனிதர்கள் தான். சொல்லப்போனால் பொருளாதாரத்தில் ஒரு படி கீழே
என்று கூட சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு சமூகத்திடம் அளப்பரிய அன்பு. இங்கிருந்த
எடுத்தவற்றையும் அதை விட அதிகமாக கொடுத்து விட வேண்டும் என்ற வைராக்கியம். அருமை.பார்வைசவால் கொண்டவர் என்ன செய்துவிட முடியும் என்று எல்லளாம். ஆனால்
அந்த எல்லளை புறந்தள்ளிவிட்டு தானும் முன்னேறி தன்னைப்போலவே இருப்பவர்களை
முன்னேற்றி அரசுப்பணியில் அமர வைக்கிறார் ஒருவர்.
கால்
ஊன்ற முடியாதவர் முதியோர் இல்லம் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் சென்று நேரம்
செலவிட்டு மகிழ்விக்கிறார்.
மலைவாழ்
மக்கள் தம் உரிமைகளைப் பெற்றிட அவர்களுடனே தங்கி தன் வாழ்க்கையை அற்பணிக்கிறார்
ஒருவர்.
கிராமம்
கிராமமாக சென்று கிணறுகளை தூர் வாரி நீர் இரைக்கிரார் இன்னொருவர்.
நட்சத்திர
ஆமையும் அதன் சுற்றுப்புற சூழலையும் கருத்தில் கொண்டு தனது carrier ஆக அதனை ஒரு பெண் தேர்வு செய்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு
ஏற்படுத்தி சூழலை காப்பாற்றுகிறார்.
தேடித்தேடி
நிஜ ஹீரோக்களை பதிவு செய்திருக்கிறார். யாருமே கண்டுகொள்ளாத அல்லது பரவலான
பாராட்டை பெறாத அவர்களுக்கு இது உத்வேகத்தை தருவதோடு மட்டும் அல்லாது படிக்கும்
நமக்கும் இப்பூவுலகில் பிறந்ததற்கான கடமையை உணர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பை
ஏற்படுத்தித் தருகிறார் ஆசிரியர்.
இதோடு
மட்டும் நில்லாது 'பேய்க்காட்டுப் பொங்கலாயி' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இயற்கையோடு ஒத்திசைந்து வாழும்
பழங்குடியின மக்களின் தொன்மம், வழிபாடு, பழக்கம், சடங்குகள் என அவர்களைப்பற்றிய ஒரு
ஆவணம் இந்நூல்.
தொடரட்டும்
உங்கள் சமூகப்பணி வெ நீலகண்டன் அவர்களே.
#விகடன்
Ananda Vikatan Vikatan EMagazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக