இதோ அதோவென்று நேற்று அந்த சம்பவம் நடந்தே விட்டது
லெஜெண்ட் பார்த்ததை பற்றி தான் சொல்கிறேன்.
ட்ரைலர் வந்த புதிதில் 'பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்' என்ற எண்ணம் தான் எல்லோர் மத்தியிலும். இருந்து விட்டு போகட்டுமே. ஹன்சிகா தமன்னா என தன்னுடைய விளம்பரத்தில் நடிக்க வைத்து தானும் அவர்களுடன் நடித்தது எல்லாமே அவர் பார்த்த முன்னோட்டம் தான் என்பது படம் வந்த பிறகு தான் விளங்குகிறது.
அவருடைய தலையை பிய்த்து ஒட்டியது போன்ற தோற்றத்தைத் தவிர எந்த ஒரு நெருடலும் எனக்கு இல்லை. சினிமாட்டோகிராபி, சண்டைக்காட்சிகள், செட்டிங்ஸ்,லொகேஷன், இசை எல்லாமே தரம் தான். சண்டைக்காட்சிகளில் எல்லாம் அனல் பறக்கிறது. சொல்லப்போனால் இதுமாதிரியான கதை அம்சம் உள்ள படங்களில் தான் ரஜினி நடிக்கிறார். என்ன? ரஜினி என்பதால் அவரை மன்னித்து விடுகிறோம். அல்லது வேறு வழியில்லாமல் பழக்கிக்கொண்டோம். அனால் இவர் நம்மை போன்ற ஒருவர். 53 வயதில் கொஞ்சம் பணம் சேர்த்த பிறகு விக் வைத்துக்கொண்டு ஹீரோயினை காதல் செய்வது, டூயட் பாடுவது, வில்லன்களை எட்டி உதைப்பது போன்றவற்றை செய்ய நமக்கு தயக்கம் இருக்கும். சமுதாயம் என்ன சொல்லுமோ? மனைவி என்ன நினைப்பாளோ? பிள்ளைகள் ஏசுமோ? ஊர் கிண்டல் அடிக்குமோ? என்று. அவற்றை எல்லாம் உதாசீனப்படுத்தி நடித்து உலகமெங்கும் திரையிட்ட அந்த திராணிக்கே அண்ணாச்சிக்கு ஒரு சல்யூட்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக